30 March 2017

கண்ணன் பிறந்தநாள்

குட்டிக்கண்ணன் பிறந்தநாள் ஜூலை 21 3228
அருண் கே பன்சால் கம்ப்யூட்டர் ஜோதிடத்தை உருவாக்கியவர் கண்ணனின் பிறந்நாள் ஜூலை 21 3228 BCE என்கிறார்.


கண்ணன் பிறந்தது ரோகினி நட்சத்திரம்,பத்ரபாத மாதம்,தேய்பிறை 8ம் நாள் நடுராத்திரி. பன்சால் பாகவதத்தையும்,விஷ்னுபுராணத்தையும் ஆய்வு செய்து இந்த நாளை உறுதிபடுத்தியதாக சொல்கிறார்.

விஷ்ணு புராணத்தில் 38வது சுலோகம் கண்ணன் இறந்தநாளே கலியுகம் பூமியில் தொடங்கியதாக சொல்கிறதாம். கலியுகம் தொடங்கியது 3102 என நம்பப்படுகிறது.அனைத்து பஞ்சாங்கங்களும் 1999 வருடத்தோடு கலியுகம் துவங்கி 5100 வருடம் ஆகிறது என்று சொல்கின்றன. 

இதில் 125 வருடங்களை கழித்து(கண்ணின் ஆயுள்-பாகவதத்தில் சொல்லப்படுகிறது- சுலோகம் 6 - 11) கண்ணன் பிறந்தது 3227 அல்லது 3228 BCE என்ற கணக்கிட்டுக்கு வந்தார் பன்சால்.அதன்பிறகு சாப்ட்வேரை வைத்து ரோகினி நட்சத்திரம்,பத்ரபாத மாதம்,தேய்பிறை 8ம் நாள் நடுராத்திரி எப்போது வருகிறது என்று கணக்கிட்டு பார்த்தால் கிடைப்பது BCE ஜூலை 21 3228 இரவு 2 மணி. இந்த தேதியில் நேரத்தில் பிறந்தவனின் ஜாதகம் எப்படி இருக்கும்? 

சனி ஏழாம் இடத்தில் இருக்கும்.கன்னியர் பலரை இந்த கள்வன் வெல்வானாம்.7வது இடத்தில் விருச்சிகம் இருப்பதால் பல மனைவியர் இருந்தாலும் அனைவரையும் சந்தோஷமாக வைத்திருப்பானாம். புதனும்,வியாழனும் இந்த ஜாதகக்காரனுக்கு புத்திசாலித்தனத்தையும், பேச்சு திறனையும் தருமாம்.ஆனால் வியாழன் தனது தாய் தந்தையரை விட்டு இவனை பிரிய செய்யுமாம்.

செவ்வாய் இவனை தொடர்ந்து போரில் ஆழ்த்துமாம். மகாபாரத போர் நடந்தபோது கண்ணனுக்கு 90 வயதாம். எஸ்.பாலகிருஷ்ணா(நாசா லோட்ஸ்டார் சாப்ட்வேரை பயன்படுத்தி) பாரத யுத்தம் நடந்தது 2559 என்கிறார்.ஆர்.என் ஐயங்கார் ( IISc,bangalore ) 1478 BCE என்கிறார். மெம்பிஸ் பல்கலைகழக பிஸிக்ஸ் புரபசர் நரகரி ஆச்சார் மகாபாரதத்தில் இருந்த நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு அது 3067 BCE என்கிறார். பிராகாஷனந்த சரச்வதி பன்சாலின் தேதியை தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். 

ஆனால் இந்த தேதிகள் உண்மையா,வரலாற்று பூர்வாமானவையா என்பது சந்தேகமே என்பதை குறிப்பிட வேண்டும்.ஏனேனில் பல்வேறு புராணங்களிடையே ஒருமித்த கருத்து இல்லை.இதை வரலாற்று கட்டுரையாக எடுத்துகொள்வதை விட ஆன்மிக கட்டுரையாக எடுத்துக்கொள்வது தான் சரி. 

இக்கட்டுரை அவுட்லுக்கில் வெளியானது Krishna (b. July 21, 3228 BC) Author: Smita Mitra Publication: Outlook Date: September 13, 2004 URL: http://www.outlookindia.com/full.asp… http://www.dalsabzi.com/enlight_info/lord_krishna.htm

No comments:

Post a Comment