09 July 2015

சந்திர காந்த கல் moon stone

 சந்திரகாந்த கற்கள்





இந்த கற்களின் ஒளி பட்டைகள் மிகவும் அழகாக இருக்கும். வைடூரியம் போன்று சுழலும் ஒளி தெரியும்.இது கீழ் புறம் தட்டையாக மேல்புறம் மளமளப்பாக இருக்கும். இந்த சந்திரக்காந்த கற்கள் பார்ப்பதற்கு வெண்மையாக, பார்வைக்கு குளிர்சியாக சந்திரனை போல தெரியும். ரோமானியர்கள் இதனை லுனாரிஸ் (lunaris) என கூறி மகிழ்வார்கள்.

மூன்ஸ்டோன் அதிகமாக இலங்கையிலும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் நமது நாட்டிலும் அதிகம் கிடைக்கிறது. மூன் ஸ்டோன் கற்கள், லேசான பச்சை, நீலம், பழுப்பு  வண்ணங்களிலும் கிடைக்கிறது. இதில் பழுப்பு நிறம் கொண்ட கல் தரம் குறைந்தவைகளாக கருதப்படும். 

    சந்திரகாந்த கற்கள் அணிபவர்கள் பெரும் நன்மைகள்


இதை அணிவோர்க்கு மன பலம் அதிகமாகும். 
பொருள்வரவு தடையின்றி கிடைக்கும். 
கல்வியில் கவனம் இல்லாத மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டும். 
ஜலகண்டதில் இருந்து காக்கும்.
நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.
அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போகுதல் சரியாகும்.
தியானம் போன்றவற்றில் மனம் ஒருநிலை அடைய வைக்கும்.



மருத்துவ குணங்கள்

தாம்பத்ய வாழ்வில் பிரச்சனைகள் கோளாறுகளை சீராக்கும்.
இருதய கோளாறுகளை கட்டுப்படுத்தும்.
வயிற்று  பிரச்சனைகளை நீக்கும்.
குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். 
மனநிலை பாதிப்பு மூளை கோளறு ஆகியவற்றை சரி செய்யும்.

யாரெல்லாம் அணியலாம் ..?    
   
2,11,20,29   ஆகிய தேதிகளில் பிறந்த சந்திர ஆதிக்கம் பெற்றவர்கள் அணியலாம். 
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்த கேது ஆதிக்கம் பெற்றவர்களும் அணியலாம்.
கடகம் ராசி, இலக்கினம் உடையவர்கள் அணியலாம்.
நன்முத்து மற்றும் வைடூரியத்திற்க்கு  மாற்றாகவும் அணியலாம்.
குறைந்த பட்சம் 5காரட் முதல் எவ்வளவு பெரிதாகவும் அணியலாம். விலை பற்றி அறிய...

No comments:

Post a Comment