30 March 2017

திருவாதிரை களியும் ஜோதிடமும்...

#திருவாதிரை_களியும்_ஜோதிடமும்...
அனைத்து விசயங்களிலும் ஜோதிடத்தினை இணைத்து கூற முடியுமா?
கூறித்தான் பார்க்கலாமே...

தேவையான பொருட்கள்
#சந்திரன்
பச்சை அரிசி 1 கப்
#புதன்
பாசி பருப்பு 1/2 கப்
#சூரியன்
கரும்பு வெல்லம் 1 1/2 கப் ( பொடித்தது )
#சுக்கிரன்
தேங்காய் துருவல் 4 மேஜைக்கரண்டி
#புதன்
முந்திரி பருப்பு 15
#செவ்வாய்?
கிஸ்மிஸ் பழம் 15
#குரு
பசு நெய் 7 மேஜைக்கரண்டி
#சந்திரன்
பசும்பால் 2 1/2 கப்
#கேது
ஏலக்காய் 3
செய்முறை
1. அடுப்புல வடச்சட்டியில் வைத்து அதில் எண்ணெய் விடாமல் பச்சை அரிசியை நன்றாக பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
2. அதன் பிறகு பாசிபருப்பை அடுப்புல வைத்து நன்றாக பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
3. வறுத்த அரிசியும், வறுத்த பாசி பருப்பும் ஆறிய உடன் , மிக்ஸியில் சேர்த்து நன்றாக குருனையாக உடைத்து கொள்ளவும். ( மிகவும் சிறிய குருனையாக)
4. ஒரு வடச்சட்டியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் , அதில் பொடித்த கரும்பு வெல்லத்தை சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
5. வெல்லத்தில் உள்ள அசுத்தங்களை வடிக்கட்டி கொள்ளவும்.
6 ஒரு வடைச்சட்டியில் 1 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் , அதில் தேங்காய் துருவலை போட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்து வைத்து கொள்ளவும்.
7. இப்பொழுது பிரஷர் பேனில் 2 1/2 கப் பசும்பால் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும் , கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அரிசி மற்றும் பருப்பு குருனையை ஊற்றி நன்றாக கலக்கி , பிரஷர் பேனின் மூடியை மூடி குறைந்தபட்சம் 3 விசில் வரை விட்டுகோங்க.
8. பிறகு மூடியை திறந்த உடன் நன்றாக கிளறி விட்டு அதில் கொஞ்சம் கொஞ்சமாக கரும்பு வெல்ல பாகை ஊற்றி கிளறவும்.
9. இப்பொழுது அதில் 1 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் பொடித்த முந்திரி மற்றும் கிஸ்மிஸ் பழங்களை சேர்த்து நன்றாக பொன்னிறமாக மாறும் வரை வதக்கி பிரஷர் பேனில் உள்ள மாவு கலவையில் சேர்த்து நன்றாக கிளறவும்.
10. நெய்யில் பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்துகோங்க நன்றாக கிளறவும்.
11. அதன் பிறகு மீதமுள்ள பசு நெய்யை சேர்த்து நன்றாக சூடு பறக்க சிறுதீயில் வைத்து கிளறவும், ஆனால் கவனம் தேவை அடிபிடிக்காமல் பார்த்து கொள்ளவும்.
12. இப்பொழுது அந்த *திருவாதிரை களி அமுதை இறைவனுக்கு படையல் இடலாம்.*
பிரசாதமும் ஜோதிடமாகட்டும்... கிரக பொருட்களில் ஏதும் தவறு இருக்கலாம்....
இருப்பின் கூறவும் திருத்திக் கொள்ளாம்.

No comments:

Post a Comment