30 March 2017

ஜோதிடத்தில் வைகுண்ட ஏகாதசி

#வைகுண்ட_ஏகாதசி
இந்த நாளில் நாராயணின் இருப்பிடமான பாற்கடலின் வாசல் திறக்கும் என்பதை வழியுருத்தி நினைவு படுத்தும் படி நடக்கும் விழாவே இன்றைய நாள் ஆகும்.

இந்த நாளில் என்ன நடக்கிறது.
முதலில் இந்த மார்கழியில் தேவர்களின் அதிகாலை பொழுதாக கொள்ளுகின்றோம். மார்கழி மாதம் தனுசினில் சூரியன் உள்ளதை அறிவோம்.

சூரியன் ஆத்மகாரகன் என்பதால், சூரியனின் ஆளுமையில் தான் அனைத்து கிரகங்களும் சக்தி பெருகிறது என்பதை அறிவோம்.

சூரியன் எந்த இடத்தில் உள்ளதோ அதன்படி அதற்க்கு வலிமை தரும்படி அல்லது அதனை பலவீணப்படுத்தும்படி இதர கிரகங்கள் செயல்படும்.

இந்த தனுசின் சூரியன் குருவின் ஆகர்சனத்தினால் காலனின் ஒன்பதாமிடம் என்பதால் இயல்பாகவே நல்ல கதியளிக்கும், நல்ல வழிகாட்டும் இடமாக அமைந்து விடுகிறது.

நல்ல கதி வழி காட்டப்படும் இந்த வழிமுறை...
இதனை நமது மனதுக்கு முழுமையாக கிடைக்க சந்திரனின் சக்தியும் நமக்கு தேவைப்படுகிறது. சூரியனின் பூர்வத்தில் சந்திரன் வரும்போது புது விசயம் புது சக்தி உண்டாகிறது. சந்திரனின் ஒன்பதில் சூரியன் தனுசில் இருக்கும் போது ஆன்மா விழிப்படைகிறது. புது விசயங்களில் ஈடுபடுகிறது. ஆனந்தமும் மோட்சமும் சித்தியாகிறது.

அது எப்படி தனுசு சூரியன் மேச சந்திரன் மோட்சம் என்பதை மகிழ்ச்சியினை தரும்படி அமைத்து மக்களை கொண்டாட வைக்கிறார்கள்.
விசயம் இருக்கிறது.

யோசித்து கொண்டே இருந்து
உங்களின் கருத்துக்களை பதியுங்கள்...

அரங்கனின் பாதம் பணிவோம்.
அரங்கனோடே சேர்வோம்.
அன்புடன்
மக்களின்
அதிர்ஷ்ட ஆலோசனையில்
*அஸ்ட்ரோகண்ணா*
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்

No comments:

Post a Comment