02 January 2017

கேளுங்கள் தரப்படும், கேள்வி பதில் வட்சாப் அரங்கம் 9-9-2016

9-9-2016 அன்று எமது குழுவில் நடந்த சிறப்பு விவாதம் கேள்வி பதிலாக நடந்தது....
இதன் விவாத கருத்துக்களின் தொகுப்பு இங்கு பதியப்படுகிறது.
இன்றைய அரங்கம்
கேளுங்கள் தரப்படும்
கேள்வி பதில் அரங்கம்
அரசியல் நீங்கலாக
எந்த கேள்வியும் கேட்கலாம்
இன்று
இரவு 8 மணிக்கு..
#கேள்வி தினசரி காலன்டரில் கொடியநகசு எனும் வார்த்தையை அடிக்கடி பார்க்கிறேன். அதன் விளக்கம்?

நகஸ் என்பது இந்து காலண்டர் அல்ல... அது இஸ்லாமிய நாட்காட்டி தரும் விசயம். புதன் கிழமை தான் இது வரும். வீட்டில் காலண்டரில் புதன் கிழமைகளில் பாருங்கள் கொடிய நகசு வரும். இது இந்துக்களுக்கு இல்லை. செக் செய்து பார்த்து இன்றே பதில் தாருங்களேன்...
நகசு என்று அல்லாஹ் குர்ஆனில் ... கொடி கட்டிப் பறக்கும் என்றால்- ... என்னும் அழகான பொருள்
சரி.. கொடியநகசு கூறவரும் கருத்து?
நமது குழுவில் உள்ள முஸ்லீம் சகோதரர்கள் கூறின் நலம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
#கேள்வி.
நான் எந்த கோவிலுக்கு போனாலும் என் செருப்புகள் களவாடப்படுகிறது. இதற்கும் எதாவது ஜோதிட காரணங்கள் இருக்கிறாதா? நான் வாங்கிய செருப்புகளின் விலையை கணக்கிட்டால் ஒரு செருப்பு கடையே வைத்து விடலாம் போல...
ராகு பலம் அதிகம் உள்ளவர்க்கு செருப்பு தொலையும்..சனிக்கு உதவுவார் ராகு. கிட்டதட்ட எழறை சனி ஆரம்ப முடிவில் இப்படி நடக்கும்
செருப்பு தானம் தருகிர வழக்கம் இருக்கு சில இடங்களில்... ராகு வினால் கடுமையான தோஷம் உள்ளவர்கள் இந்த தானத்தை தரலாம். ராகுவினால் தொந்தரவுகள் உள்ளவர்கள் அடிக்கடி செருப்பை மாற்றி கொண்டே இருக்க வேண்டும
புத்திர தோஷம் உள்ளவர்களுக்கும் இந்த செருப்பு தொலைதல் இருக்கலாம்..
ஐயா. செருப்பு தொலைதல் நம் கர்மாவின் ஒரு சிறு பகுதி கழிதல் என்பது உண்மையா ஐயா
புத்திர தோஷம் என்பது என் கருத்து. மாற்று கருத்து உள்ளவர்கள் பதியலாம்
புத்திரதோசமா? இங்க மனைவிக்கே வழிய கானோம்..😀😀
புத்திரபாவாதிபதியை பாருங்க..
தோஷ நிவர்த்தி செய்து பாருங்க மாற்ம் வரும்
^^^^^^^^^^^^^^^^^^^
#கேள்வி ஒரு நட்சத்திரத்திரத்திற்கு சந்ராஷ்டம் என்றால் அந்த நட்சத்திற்குரியவர் அன்று அவர் செய்யும் காரியத்திற்கு சுப ஹோரை பார்த்து செய்யலாமா பலன் தருமா?
சந்திராஷ்டமத்தில் செய்வது ஆரோக்கியமில்லை என்றாலும் நல் ஓரை பயன் தரும்.
அத்துடன் எது தொடர்பான முயற்சி என்பதில் தான் ரிசல்ட்😀
ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதே லக்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்........
அய்யா, சந்திராஷ்டம தினத்தில், புதிதாக தான் எந்த வேலையையும் துவங்க கூடாது. ஆனால் ஏற்கனவே செய்த ரெகுலர் வேலைகளை தாராளமாக தொடரலாம். ஆனால் தவிர்க்க முடியாத சூழலில், சுப ஓரை பாரத்து செய்யலாம்
சந்திரன் லக்கினத்திற்கு 6 அல்லது 12ல் அமையப் பெற்றவர்களுக்கு சந்திராஷ்டமம் குறிப்பிடத்தக்க எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக பலருக்கு நல்ல முறையில் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ..
அனைத்து இராசிக்குமே சந்திராஸ்டமம் பெரிய விளைவுகளை தராது. ஒரு குறிப்பிட்ட விளைவு நிச்சயம் உண்டு.
ஒருவருக்கு சந்திராஷ்டமம் கெடுதல் செய்வது குறிப்பிட்ட ஒரு காரகத்தில் மட்டும் அதிகமாக இருக்கும். அந்த காரக செயல்களை தவிர்த்து மிச்சமுள்ள அனைத்தையும் செய்யலாம் என கருதுகிறேன்.
துலாமுக்கு இப்படியும் கூட நடக்கிறது. படியுங்களேன்.
புரியும் படி கூறியுள்ளேனா அறியேன். தேவைபடின் தனியாக ஒருநாள் விவாத பொருளாகவே சந்திராஷ்டமம் என்பதை அரங்கில் வைக்கலாம்.
*சந்திராஷ்டமத்தில் துலாம்*
மற்ற ராசிகாரர்களை விட துலாம் ராசி வித்தியாசமானது.
8ல் உச்ச சந்திரன் மறைகிறான்.
அதனால் பெரிய விசயங்களில் நுளைந்து மூக்கறுபடும் சூழ்நிலை வந்தாலும்... மனைவியினால் தொழில் முன்னேற்றம் லாபம் உண்டாகும் நாட்களாகவும்... சந்திராஷ்டம நாளே இருக்கிறது.
ஆகவே மனைவிக்கு மரியாதை செய்யுங்கள்.... துலா ராசி அன்பர்களே...
சும்மா ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.....
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
#கேள்வி தோஷம் நிவர்த்தியானால் ஜாதக ரீதியாக கண்டுபிடிப்பது எப்படி?
அப்படி எல்லாம் கண்டுபிக்க முடியாது ...........் சார்
கலசர்ப தோஷம் எப்படி பரிகாரம் செய்தால் கட்டம் மாறாதே... ஆனால் நல்ல நம்பிக்கைதான் ஆதாரம்
அதனை இப்படி சொல்லவா...
ஜாதகத்தில் அறிவதை விட உணர்வில் அறியலாம்...
எனக்கு தெரிந்த பதிலை கூறவா
பிரசன்னம் மூலம் கண்டுபிடிக்கலாம்
இது சரியானது ...... அய்யா
^^^^^^^^^^^^^^^^^^^^^^
#கேள்வி வக்கிரம் பெற்ற கிரகம் ஆட்சி, உச்சம், நீசம், பரிவர்த்தனை பெற்றால் பலனுரைப்பது எவ்வாறு???? .......அய்யாவே பதிலளிக்க வேண்டும்
நன்றி..... அய்யா.. எந்த வகை பரிவர்த்தனை என பார்க்க வேண்டாமா...
வக்கிரம் பற்றி
........ஐயா வுடன் என் கருத்தில் வேறுபாடு முன்பே இந்த அரங்கில் பேசி உள்ளேன்
இது குறித்து தனியாக இன்றொரு நாள் விவாதிக்கலாம்
பரிவர்த்தனை பெற்ற கிரகம் மற்றொரு கிரகத்துடன் இணைந்தால் அதனை எவ்வாறு எடுத்துக் கொள்வது??? உதாரணமாக சனி, சூரியன் இணைவு. குரு செவ்வாய் இணைவு. இங்கு சனி செவ்வாய் பரிவர்த்தனை. இதனை எவ்வாறு எடுத்துக்கொண்டு கணிப்பது?? ........... அண்ணா பதிலுரைக்கவும்
எந்த வகையில் பரிவர்த்தனை என பார்க்க வேண்டாமா...
எல்லா பரிவர்த்தனையும் நல்ல பலன் என எப்படி உறுதி செய்கிறீர்கள்
எந்த வகை பரிவர்த்தனை என்றால் புரியவில்லை அய்யா
கடக லக்... நான்கு ஐந்து பரிவர்த்தனை கூட பதவியில்லாமல் செய்து விடுகிறதல்லவா (ஜாலி மேன்) அதுமாதிரி...
எல்லா பரிவர்த்தனையும் நல்லது செய்யாது...
நீசம் பங்கமாகும் ஆனால் யோகம் ஆகாத அமைப்பும் உண்டு
அது போல... பரிவர்த்தனையில் இன்னொரு கிரகத்துடன் சேரும்போது கூட்டு கிரக சேர்க்கையாக எடுத்துக்கொள்ளவேண்டும் .பலன் காரகத்தை பொருத்தே நடக்கும்
அய்யா பிருகுவில் பரிவர்த்தனையை, சேர்க்கை என எடுக்கும் ஒரு முறையும் உண்டு. அதனால் தான் ......... அண்ணாவிடம் கேட்டேன்
மன்னிக்க ஐயா பரிவர்த்தனையே பயன் இல்லை என்றால் கூட்டணி வழி நடத்தும்
மாற்று கருத்து இருந்தால் மன்னிக்க
பரிவர்தனையில் இடம் மாறும் கிரகம். மற்ற கிரகத்தோடு சேர்ந்தால் பலன் மாறுபடும்
11 பரிவர்த்தனைகள் மட்டுமே நன்மை செய்யும்
மொத்தம் 66 பரிவத்தனைகள் உள்ளது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
#கேள்வி சீமந்தம் வளைகாப்பிற்கு
நல்ல நாள் பார்க்க
பெண் ஜாதகம் பார்க்கவேண்டுமா
பையன் ஜாதகம் பார்க்க வேண்டுமா?
பெண்ணுக்கே சீமந்தம் ஆதலால் பெண்
பெண் ஜாதகமே சிறப்பு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
#கேள்வி ஜாதகம் பிறந்த நேரத்தினை வைத்து கணிக்கப்படுகிறுது. ஆனால் அதன் கால துல்லியம் எவ்வாறு நிர்ணயம் செய்வது. பலன் கூறும்போது நான்கு ஐந்து மாதம் வித்தியாசம் வருகிறது. இதனை பற்றி பதிலுண்டா அய்யா..
அதுதான் ரேகை எல்லாம் வருகிறதே..... கால துல்லியத்திற்கு ரேகை பயன்படுத்திறாங்க
இதற்கு பிறந்த நேரத்தை சரி செய்யும் முறை இப்போது பழக்கத்தில் உள்ளது.
சில பாராம்பரியர்கள் இதை ஏற்பதில்லை.. ..........ஐயா கருத்து அறிய ஆவல்
ஆனால் இதனை துல்லியமாகவும் சரிசெய்ய முடியும்.... பலன் நடைமுறையை கணித்து செய்யலாம்....
செய்தால் ஜாதகம் உண்மையை பேசும் என்பதை உணரலாம்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
#கேள்வி ஜோதிடர்கள் எப்படி இருக்க வேண்டும்???
[
உளியாக இருக்கனும்
அதாவது கெட்டதை தள்ளி நல்லதை தரும் ஜோதிடர்களை போல
சமூகத்துடன் ஒன்றி இருக்க வேண்டும் ஆனால் வேருபட்டவனாக வாழ்ந்து காட்ட வேண்டும் எனது குருவின் வாய்மொழி
#குறித்து_கூறாமைக்_கொள்வாரோ_டேமை
#உறுப்போ_ரனையரால்_வேறு.
இது ஜோதிடர்களை பற்றி திருக்குறள் கூறும் கருத்து.
^^^^^^^^^^^^^^^^^^^^^
#கேள்வி To Res ............. Which one u feel more comfortable Numerology or Astrology
எண்ணும் எழேத்தும் கண்ணென தகும் அய்யா...
இதில் எது அதிக பொருத்தமாக இருக்கிறது என முடிவு செய்தால்...
நஷ்டம் முடிவு செய்தவருக்கு தான்... என கூறுவேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
#கேள்வி அஷ்டமி நவமி நாளினை விலக்க காரணம் இருக்கிறதா....
What is going to happen will definetly happen
Astami or navami
Only good time will reduce the impact
கோயில் திரு விழாவில் எட்டாம் நாள் குதிரை வாகனம்...
போருக்கான நாள் என்பதால் இப்படி சித்தரித்திருக்கலாம்
அஷ்டமி என்பது பூமியினை சுற்றும் சந்திரன் பூமியின் பாதையின் உள்ளே செல்ல நெருங்கும் நேரம் ஆகும்.
அடுத்த திதி நவமி என்பது பூமியின் பாதையில் இருந்து விலகி செல்லும் நிலையாகும். அந்த நாளில் பூமியின் பார்வையில் சூரியனும் சந்திரனும் 90° பாகை கோணத்தில் இருப்பார்கள்.
சூரியனை சுற்றும்போது பூமி பயணிக்கும் பாதை எப்போதுமே ஒரு காந்த சக்தியால் நிரம்பி இருக்கும்...
இந்த பூமியின் பாதை உள்ள இடத்தினை சந்திரன் கடக்கும் போது... சந்திரனில் இருந்து நமக்கு கிடைக்கும் ஆகர்சன சக்தி கடுமையாக பாதிப்பு அடையும். அதனால் தெளிவாக முடிவு செய்ய முடியாத சூழல் உண்டாகலாம். ஆகவே இந்த நாட்கள் விலக்கப்பட்டது.
எனது பல செயல்கள் அஷ்டமியில் தான் வெற்றி பெறுகிறது...
நான் பெரும்பாலும்
என் செயல்களுக்கு... அஷ்டமியையே தேர்வு செய்வேன்.
அதனால் தான் கிருஷ்ணன் தனது ஜென்மத்தையே அஷ்டமியில் பெற்றானோ.....
^^^^^^^^^^^^^^^^^^^^^^
இன்றைய அரங்கம்
கேள்விகளாலும்
அதற்க்கான பதில்களாலும் நிறைந்து இருப்பது கண்டு உண்மையில் அகம் மகிழ்கிறோம்.
இன்றைய அரங்கில் கேள்விகளை கொண்டு வந்த அனைத்து நண்பர்களுக்கும்...
பதில்களை அள்ளித்தந்த நண்பர்களுக்கும் நன்றிகள்.
இன்று நாம்
செருப்பு பற்றியும் நகசு பற்றியும்
சந்திராஷ்டமம்
அஷ்டமி தத்துவம்
ஜோதிடரின் பணி உளி
பிறப்பு நேரம் சரியா
பரிவர்தனையெனில் நன்மையா
சீமந்தம்
தோசம் முடிந்ததா
இப்படி பலவிதமான கேள்வியும் அதற்க்கான முத்தான பதிலும் பெற்றோம்...
இதற்க்கான களத்தில் பங்கு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும்
*_நன்றி நன்றி நன்றி_*

No comments:

Post a Comment