23.11.2016 அன்று நடைபெற்ற நமது குழுவின் விவாத அரங்கில் நடந்த முழுமையான அரங்க உரையாடல் கீழே உள்ளது.
இன்றைய விவாத தலைப்பு "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்".- இனையலாம் நண்பர்களே 8-30 மணிக்கு....
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது கவிஞரின் வாக்கு. உண்மையும் அதுதான். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பாள். மனைவி வந்த நேரம் சில ஆண்கள் யோகம் அடைகிறார்கள். ஆனால், சிலரோ வாழ்க்கை தரம் தாழ்ந்துபோவது மட்டுமின்றி அவமானங் களையும் அடைகின்றனர்.
7-ஆம் வீட்டு அதிபதி பலமாக இருக்கவேண்டும். களத்திர காரகன் சுக்கிரன் திக்பலத்துடன் திகழ வேண்டும். ஒரு ஜாதகனின் ஜாதகத்தில் சுக்கிரன் சுபகிரக சாரத்தில் அமைந்தால் மனைவியால் யோகம். 7-ஆம் வீட்டின் அதிபதி சுபகிரக சாரத்தில் அமைந்தாலும் மனைவியால் யோகம்.
7-ம் வீட்டின் அதிபதி லக்னத்தில் இருப்பின் மனைவியின் மூலம் நல்ல நிலையை அடைவான். மனைவி மீது மாறாத அன்பு இருக்கும்.
7-ம் வீட்டின் அதிபதி இரண்டாம் வீடு என்கிற தனஸ்தா னத்தில் இருந்தால் மனைவி மூலம் சொத்துக்களும், சம்பாத்யமும் ஏற்படும். அது மட்டுமின்றி, மனைவியின் உறவினர்களாலும் லாபம் பெறுவான்.
7-ம் வீட்டின் அதிபதி 4-ம் வீடு எனும் கேந்திரத்தில் இருந்தால், அவன் தன் மனைவியின் மூலம் எதிர்பார்க்கும் சுகம் இன்பம் அடைவான். குடும்ப கௌரவம் மேலோங்கும். குடும்ப பொறுப்பான மனைவி அமைவாள்.
7-ஆம் வீட்டு அதிபதி 9-ம் வீடு என்கிற பாக்யஸ்தானத்தில் இருந்தால் தெய்வ புண்ணியத்தால் மனைவியால் சகல பாக்யங்களை யும் அடைவான். ஒற்றுமையாக குடும்பம் நடத்தும் மனைவி கிடைப்பாள்.
7-ஆம் வீட்டின் அதிபதி 11-ம் வீடு என்கிற லாபஸ்தானத்தில் இருந்தால், மனைவியால் கணவனின் அந்தஸ்து உயரும். நல்ல செல்வம், சொத்துக்களுடன் மனைவி அமைவாள். மேற்கண்ட அமைப்பில் ஒரு ஆணின் ஜாதகம் அமையுமேயானால் அவன் மனைவியால் யோகங்கள் அடைவான்.
அதே போல் பெண்களின் ஜாதகத்தை ஆராய்ந்து திருமணம் முடிக்கும் ஆண்களே* உங்களுக்கு வரப்போகும் மனைவியின் ராசி இரட்டைப்படையில் இருந்தாலும், லக்னம் இரட்டைபடையில் இருந்தாலும் நீங்கள் யோககாரகர்தான்.
லக்னத்தின் சுக்ரன் 3-ல் புதன், 4-ல் குரு உள்ள பெண்ணை மணப்பவர் அரச யோகம் அடைவர்.
லக்னத்தில் குரு நிற்க, அதன் பார்வை 7-ம் வீடாகிய களத்திரஸ்தானத்தில் படும் ஜாதக அமைப்புள்ள ஜாதகியை மணக்கும் ஜாதகரும் யோககாரர்தான்.
ஒரு ஆண் ஜாதகத்தில் சுக்ரன் லக்கினத்தில் அமர்ந்தாலும் 4-ம் 5-ம் 9-ம் 10-ம் 11-ம் வீட்டில் அமர்ந்தாலும் மனைவியால் பல யோகங்கள் அடைவர்.
7-ம் வீட்டின் அதிபதி 4-ம் வீடு எனும் கேந்திரத்தில் இருந்தால், அவன் தன் மனைவியின் மூலம் எதிர்பார்க்கும் சுகம் இன்பம் அடைவான். குடும்ப கௌரவம் மேலோங்கும். குடும்ப பொறுப்பான மனைவி அமைவாள்.
பண்டைய நூல்களில் பதினாறுவித ஸம்ஸ்காராக்களில் ( சோடஸ ) திருமணமும் ஒன்று. பராசரர் காலத்தில் (.கி. மு. 3000 ) திருமணகாலமே வாழ்க்கையின் மைய நிகழ்வாகக் கருதப்பட்டது. எல்லா நாகரீகங்களிலும் மனைவியைப் பாதுகாப்பது கணவனின் கடமையென்றும், மனைவி மதக் கடமைகளை சரிவரக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்டவளே “ தர்மபத்தினி ” என அழைக்கப்படுகிறாள்.
பதினாறு ஸம்ஸ்காரக்கள் எனும் நிகழ்வுகள் : -
1. நிஷேகம் – முதலிரவு
2. கர்பாதானம் – கருத்தரிப்பு
3. பும்ஸவனம் – கருவுக்குப் பால்பிரிவு தருதல்
4. சீமந்தம் – கருவுக்கு உயிர் அளித்தல்
5. ஜாதககர்மா – தோஷம் நீக்குதல் ( குழந்தைக்கு )
6. நாமகரணம் — பெயர் சூட்டுதல்
7. தோளாரோகணம் – தொட்டில் இடல்
8. அன்னப் பிரஸன்னம் – உணவு ஊட்டுதல்
9. கர்ணவேதம் – காது குத்துதல்
10. சௌளம் – முடியெடுத்தல்
11. அசஷராப்பியாசம் – எழுத்தறிவித்தல்
12. உபநயனம் – பூணூல் அணிவித்தல்
13. விவாகம் – திருமணம் (பிரம்மச்சரியம், குடும்பவிரதம், கன்யாதானம், உத்தானம் (பாணிக்கிரகணம்) சப்தபதி (அம்மிமிதித்தல், அருந்தி பார்த்தல்)
14. நித்தியகர்மா – அன்றாடக் கடமைகள்
15. கிரஹஸ்தாஸ்ரமம் – இல்வாழ்க்கை நடமுறை, வானப்ரஸ்தம் – பற்றற்ற வாழ்வு.
16. அபரக்கிரியைகள் – அந்திமக்கடன்கள் ஆகியவையாகும்.
திருமணத்தைப் பற்றி பேசும்போது 7 ஆம் இடம் மாய உலகைக் கோடிட்டுக் காட்டுகிறது. 7 ஆம் வீடு, எந்த ஒரு வீட்டிலிருந்தும் முடிவுறும் வீடாகிறது. உடல் இலக்னம் எனில் உடல் இணைவுறம் இடமென்று ஏழாம் இடத்தைக் கொள்ளலாம். எனவே திருமணத்தை 7 ஆம் வீட்டுடன் தொடர்புபடுத்தலாம் அல்லவா ?
சரி… யாருக்கு முரட்டு மனைவி அமைகிறது.? என்று சற்று ஜோதிடத்தை ஆராய்ந்தால் ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7-ல் சனி இருந்தாலோ, லக்கினத்தில் சனி இருந்தாலோ, லக்கினத்தில் செவ்வாய் அல்லது 7-ல் செவ்வாய் இதில் சுபர் பார்வை இல்லாமல் இருந்தால் இப்படிபட்ட ஜாதகனுக்கு (ஆணுக்கு) முரண்டு பிடிக்கும் – பிடிவாதம் – முன்கோபம் கொண்ட எப்போதும் எவரையும் எதிர்த்து பேசுகிற மனைவி அமைவாள்.
7-க்குடையவன் சனியாகவோ, செவ்வாயாகவோ இருந்தால் அதுவும் ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்தால் தினமும் சண்டை சச்சரவுதான்.
7-க்குடையவன் நீச்சம் பெற்று அவனுடன் பாபி சேர்ந்தால் குடும்பத்தில் தினமும் சுனாமிதான் ஏழில் கிரகம் இல்லாமல் இருந்தால் ஏழக்கு கோந்திரத்தில் சனி செவ்வாய் இருந்தால் முரட்டு மனைவி அமைவால்
மணமகன்களே… உங்கள் ஜாதகத்தில் 7-ம் இடத்தை பாருங்கள். அதனுடைய பலனை அறிந்து கொள்ளுங்கள்.
கொளுத்தும் வெயிலில் பாலைவனத்தில் நின்றுக் கொண்டு அய்யோ சூடுகிறதே என்றால் சுடத்தான் செய்யும்.
கொளுத்தும் வெயிலில் பாலைவனத்தில் நின்றுக் கொண்டு அய்யோ சூடுகிறதே என்றால் சுடத்தான் செய்யும்.
அதுபோல உங்கள் ஜாதகம் என்னவோ அப்படிதான் மனைவி அமைவாள்.
ஏழுக்குடையவன் 6 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனுக்கு அற்ப ஆயுள்; அபமிருத்யு பீடைகள்; பல ஆபத்துகளைச் சந்திக்க நேரிடும்; அழகிய கட்டுடல் கொண்டவன்; பெண்களிடத்தில் பிரியமுள்ளவன்; பாபக்கிரகங்கள் அந்தஇடத்தில சேர்ந்திருந்தால் க்ஷயரோகி.
ஏழுக்குடையவன் 8 ஆம் இடத்தில் இருப்பின் தன் மனைவியோடு ஓயாமல் சண்டை வளர்பவன்; ஆதலால் மனைவிச் சுகமற்றவன்; மனைவியோடு தப்பித்தவறி மகிழ்ச்சியோடு இருக்க முற்பட்டாலும், பாவம் அவளூக்கு விரைவில் மரணம் வந்து சேர்கிறது.
ஏழுக்குடையவன் 12 ஆம் இடத்தில் இருந்தால் பரிதாபத்துக்குரியவன். இவனுக்கு வீடு வாசல் இல்லை. உறவு மற்றொருவர் இல்லை; மனைவி சுகம் அற்றவன். இவனின் மனைவி சஞ்சலபுத்தி கொண்டவள். நல்ல செலவாளி. அடாத வார்த்தை பேசுபவள். தன் வீட்டு பொருள்களையே திருடி விற்பவள்.
ஏழக்கு எட்டு காலியாக இருந்தால் நன்று சுபகிரகபார்வை நன்று.
சூரியன் ஏழாம் இடத்தை முழுப் பார்வை பார்க்கும் பொழுது மனைவியோடு இன்ப சுகம் அற்றுப் போகின்றது. ஜாதகன் சோகை பிடித்தவன் ஆகின்றான். அவனது தேகம் வெளுத்து விடுகின்றது. சத்ருக்களின் தொல்லை வேறு சேர்ந்து கொள்கிறது
சந்திரன் பார்வைப் பட்டால் இவனது மனைவி நல்ல அழகும் குணமும் வாய்ந்தவளாக அமைகிறாள்; யானையைப் போல் கம்பீரமாக நடப்பவள். ஆயினும் பிறரிடத்தில் கொள் சொல்பவளாகின்றாள்; கெட்ட நடத்தையும் உண்டு.
செவ்வாயினால் ஏழாம் இடம் பார்கப்பட்டால் ஜாதகன் மனைவியை விட்டுபிரிந்திருக்க நேரிடும்; அல்லது விரைவில் அவளது மரணம் ஏற்படக்கூடும். ஜாதகனை நீரிழிவு நோய் தாக்கக்கூடும். ஸ்திரிகளால் சண்டையும் பயணத்தில் நஷ்டமும் ஏற்படுகின்றது.
புதனால் பார்க்கப்பட்டால் மனைவியினால் சுகம் உண்டு. ஜாதகன் நல்ல கட்டழகனாய் விளங்குவான். கல்வி வளமும் தனதான்ய சம்பத்தும் மிக்கவன்.
குருவினால் பார்க்கப்படும் பொழுது களத்திர சுகம், வியாபார லாபம், பெரும் புகழ் அனைத்தும் கிட்டுகிறது. தனவான் மட்டுமின்றி தர்மவானாகவும் திகழ்கின்றான்.
சுக்கிரனால் ஏழாம் பாவம் பார்க்கப்பட்டால், மனைவியால் பல சௌகர்யங்களை ஜாதகன் அடைகின்றான். மக்களும் நல்லவர்களாகவே அமைகின்றனர். குழந்தைகள் சற்றுக் கூடுதலாகவே பிறக்கின்றனர். வியாபார லாபத்தை ஜாதகன் வெகுவாகப் பெறுகின்றான். தெளிவான புத்தி ஜாதகனுக்கு அமைகிறது.
சனியினால் களத்திர ஸ்தானம் பார்க்கப்படும் போது மனைவிக்கு ஆகாது. அவளுடைய அழிவுக்கு காரணமான செயல்கள் நடக்கின்றன. அவளுக்கு கண்டங்கள் தொடர்கின்றன. ஜாதகனை பாண்டு ரோகம் பீடிக்கிறது. காய்ச்சல், வயிற்றுக்கடுப்பு நோய்கள் இடைவிடாது தொடர்கின்றன்
ஏழுக்குடையவன் சுபகிரகதுடன் கூடினாலும், பார்க்கப்பட்டாலும், ஜாதகன் சகல சௌபாக்கியங்களையும் அடைவதோடு குணவானாகவும், தனவானாகவும் விளங்குகின்றான். தன் பத்தினியின் மூலம் பாக்கியத்தையும் செல்வத்தையும் பெறுகின்றான்.
ஏழுக்குடையவன் ஜாதகத்தில் உச்சமானால், நல்ல குணம் மிக்கவனாய் பலரும் பாராட்டும் பெரு பெறுகின்றான். தனம், தானியம் நிறைந்த குடும்ப தலைவனாக விளங்குகின்றான்
ஏழுக்குடையவன் சத்ருவாகவோ, நீசனாகவோ ஒரு ஜாதகத்தில் அமைந்து விட்டால் பலன் நேர் மாறாக அமைகின்றன. சனியின் வீடோ சனியின் நவாம்சமோ பெண்ணின் ஜாதகத்தில் 7 ஆம் இடமாக இருந்தால் கணவன் வயதானவனாகவும், மூர்க்கனாகவும் இருப்பான்
திருகோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயமே இதற்கு சரியான் பரிகாரஸ்தலம் ஆகும்
இந்த கோயிலில் ஓர் அற்ப்புதமான தகவல் உள்ளது இங்கு தான் அவ்வை பிராட்டி க்கு விநாகப் பெருமான் மேல் அகவல் பாடிய இடம்
வழித்துனை விநாயகர் பெருமான் அருளும் இடம்
இந்த தலத்து விநாயகர் பல சிக்கலான வழிகளிள் வழிகாட்டுவார்
வழித்துனை விநாயகர் பெருமான் அருளும் இடம்
இந்த தலத்து விநாயகர் பல சிக்கலான வழிகளிள் வழிகாட்டுவார்
தங்களின் வாழ்வில் திராத சிக்கல் உள்ள நிலையில் உள்ளவர்கள் இந்த தலத்து விநாயகரை வழிபட்டாள் அந்த பிறச்சனை தீரும்
விநாயகர் மந்திரங்கள் பலிதாமாக வேண்டும் என்றால் இந்த விநாயகரை வணங்கி தொடங்கினால் சீக்கரம் பலிதமாகும்
இருதார அமைப்பு என்பது சந்திரன், சுக்கிரன், புதன் ஆகிய பெண் கிரகங்களின் நிலையைப் பொறுத்தே அமைகிறது.
சிலர் திருமண ஸ்தானமான 7வது வீட்டில் அசுப கிரகங்கள் இருந்தாலே இருதார அமைப்பு
பிருகு நாடியில் குரு இருக்கும் ராசிக்கு 1, 2, 3, 5, 7, 9, 11, 12 ஆகிய இடங்களில் சந்திரன், சுக்கிரன், புதன் கிரகங்களில் ஏதாவது ஒன்று கெட்டுப் போயிருந்தால் இருதார அமைப்பு ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இத்தகைய நிலையை மாற்ற கணபதியின் மூல மந்திரத்தை முறைப்படி ஜெபித்தால் நல்ல பலன் ஏற்படுகிறது.
இந்த அரங்கினை நடத்திய நண்பர்கள் அணைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
No comments:
Post a Comment