25 March 2016

குரு நீசம் என்ன செய்யும். பரிகாரம் தேவையா?

குரு நீசம் என்ன செய்யும்....


குரு என்பது நமது ஜீவனை குறிக்கும் கிரகம். குருவின் அதிர்வலைகளை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதை நமது ஜாதகத்தில் குரு உள்ள இடத்தின் பதிவு நமக்கு காட்டி உதவுகிறாது. இந்த விசயத்தினை நாம் இப்படியே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. உதாரணம் குரு உங்களுக்கு ஒரு அதிர்வையும் நண்பருக்கு ஒரு அதிர்வையும் அனுப்புவது இல்லை.
நமக்கு தேவையான விசயங்களை ஈர்க்க முடியாத சூழ்நிலையில் நமது பிறப்பில் குறு தன்னுடைய பதிவினை தருவதால் தான் குரு தோஷம் பற்றி நாம் யோசிக்கிறோம்.
குரு நீசம்... மறைவு பெற்ற நபர்களின் வாழ்வில் அடுத்தவருக்கு ஆலோசனை கூறும் வாய்ப்பே ஏற்படாத போது குரு தோஷம் எந்த தீய விளைவினையும் தராதுகிட்டத்தட்ட செயல்படாத நிலையில் இருக்கும். 

எப்போது நாம் அடுத்தவருக்கு வழிகாட்டுதல் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறோமோ (ஆசிரியர்... ஜோதிடர்... ராணுவ போலீஸ் உயரதிகாரி... தலைவர்.... மேனேஜிங் டைரக்டர்.... இப்படி பல) அப்போது தான் நமக்கு பிரச்சினை உண்டாகிறது. குரு மறைவு தோஷம்... நல்லது கெட்டது முடிவெடுக்க தடுமாற்றமும்... குரு நீசம் நமது உழைப்பு வீணாவதையும் உண்டாக்கும்.

இதை எப்படி எதிர் கொள்ளுவது... பரிகாரம் என்ன..
குருவின் ஆகர்ஷண சக்தியினை நல்ல அதிர்வலைகளை நாம் பெற நம்மை நாம் முறைபடுத்த வேண்டும். அதற்கான பூஜைகள்... ஸ்தல வழிபாடுகள்... அதிர்ஷ்ட ரத்தினங்கள்.... சித்தர்களின் தரிசனம் இப்படி பல விசயங்களை எப்போதுமே தொடர்ந்து செய்யவேண்டும்.

ஏன் ஒருமுறை பரிகாரம் செய்தால் ஆகாதா...?

அருமையான கேள்வி. திருமணம், வேலை கிடைக்க என குறிப்பிட்ட காரியம் மட்டும் நடக்க செய்யும் பரிகாரங்கள், சில வழிபாடுகளிலேயே சித்தி உண்டாகும். விட்டுவிடலாம். பரவாயில்லை.


ஆனால்... தினசரியும் குருவின் சக்தியினை பயன் படுத்தும் தொழில் செய்பவர்களுக்கு குருவின் ஆகர்சன சக்தியில் பற்றாக்குறை ஏற்படும். ஏனேனில் இயற்கையிலேயே குருவின் அதிர்வுகளை ஏற்கும் திறன் சிலருக்கு குறைவு என, மேலேயுள்ள விசயங்களால் அறிந்தோம் அல்லவா...
இவர்கள் தொடர்ந்து பரிகாரங்கள் செய்வது அவசியம். .

மேலும், விபரங்கள் பரிகாரங்கள் குறித்து ஆலோசிக்க....7667745633

No comments:

Post a Comment