30 March 2017

ஏழரை சனி அனைத்தினையும் பாதிக்குமா பாதிக்குமா?

எமது பார்வையில் சில கருத்துக்கள்...
ஏழரைசனி முதல் இரண்டரையில் இருப்பதை கரைக்கும். அடுத்த இரண்டரையில் ஸ்தம்பிக்க வைக்கும். மூன்றாம் இரண்டரையில் மிஞ்சியதை துடைக்கும்.
இவைகள் அனைத்தும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் கெடுத்து விடுமா?

#மேசம்:*வீடு வண்டி ஆரம்ப கல்வி சுகத்திற்க்கான அனைத்தும் சிக்கலுக்கு உண்டாகும். இதனைதவிர வேறுசிக்கல் வருவதில்லை.


#ரிசபம்:*தான் தனது எனும் அகம்பாவத்தினை தூளாக்கும். சகோதரவகையில் சச்சரவையும் பிரிவையும் தரும்.

#மிதுனம்:*பணம் தன்னிடம் உள்ள அனைத்து சொத்துக்களின் மீது தாக்குதல் உண்டாகும். சொன்ன வார்த்தைகள் பொய்யாகும்.

#கடகம்:*அவமானங்களையும் அவமதிப்புகளையும் சந்திக்கலாம். செய்யும் காரியங்கள் அனைத்தும் தனக்கு எதிராகவே போவதை காண்பார்.

#சிம்மம்:*தன்னிடம் உள்ள அனைத்தும் வீணாகும்படி ஆகும். செலவு அதிகரித்து போகும். கட்டுப்படுத்த முடியாது போகும்.

#கன்னி:*நன்றாக போகும் தொழில் திடீரென வருமானமின்றி போகும். லாபம் சம்பந்தமாக போடும் அனைத்து கணக்கும் தவறாக போய் நஷ்டம் அடைவார்கள்.

#துலாம்:*தொழில் முடக்கமும் புதிய விசயங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில் இன்றி அலையும்படி ஆகும்.

#விருச்சிகம்:*குடும்பத்தினரிடம் கெட்ட பெயர் எடுத்தல். பெற்றோருக்கு கெட்ட பெயர் எடுத்து தரல். பாரம்பரியத்துக்கு எதிரான செயல்கள் உண்டாகும்.

#தனுசு:*வம்பு வழக்குகள் வீண் அபகீர்த்தியுடன் கட்டுப்படுதல் உண்டாகும். கடினமான சூழல் தான்.

#மகரம்:*கூட்டாளிகளால் ஏமாற்றம். வெளியூரில் நஷ்டம். மனைவிக்கு பிரச்சனை நோய் சச்சரவுகள் உண்டாகும்.

#கும்பம்:*கடன் விருத்தி, நோயினால் கடன். நஷ்டங்கள் கஷ்டங்கள். அனைத்தும் விரோதமடைதல். எதிரிகளால் துன்பம் அடைதல்.

#மீனம்:*பதவியிறக்கம் உண்டாகும். பதவியை விட்டு போதல். புத்திரரால் வேதனை. நம்முடைய நற்கீர்த்தி உடையும்.

மேலேயுள்ள அனைத்தும் பொதுவான பலன்களே... இதனைதவிர வேறுசிக்கல் வருவதில்லை. ஆனால் சுய ஜாதக அமைப்புகள். கிரக சேர்க்கை பார்வையால் வேறு வேறு பலன்கள் உண்டாகும்.

உலகின் எந்த இருவருக்கும் ஒரே பலன் உண்டாவதில்லை என்பதை உணரவேண்டும். அதுபோலவே சனி பகவான் அனைத்தையும் கெடுப்பதில்லை. அதனால் அவனின் காரகத்துவம் அறிந்து அந்த விசயங்களை ஏற்று கொண்டு நமது வாழ்வியல் சூழலை மாற்றி அமைக்க நிம்மதி நம்முடன் இருக்கும்.

சனி பெயற்ச்சி நல்லதே...
#உணர்வோம்_வெல்வோம்.
நல்லதாகட்டும்.
அன்புடன் மக்கள் பணியில்
அஸ்ட்ரோ #கண்ணா
கொடுமுடி-7667745633

No comments:

Post a Comment