30 March 2017

கடன் நோயினை தீர்க்க விதி

பூர்வபுண்ணியம எனப்படும் ஐந்தாம் வீட்டினை வைத்து 
நமக்கு கிடைக்கும் விசயத்தினை அறிகிறோம். 
இந்த இடத்தில் விஷயமானது நாம்
பாக்கிய ஸ்தானத்தில் பெற்று வந்ததையும் 
அதன் வெளிப்பாடு எது என்பதனையும் 
கூட உள்ள கிரகங்களால்
அறியத்தரும் இடம் ஆகும்.

ஐந்தாமதிபன் இணைந்துள்ள அமர்ந்துள்ள 
இடத்தினை அறியும்போது நாம் என்ன பெற்று கொண்டு 
வந்துள்ளோம், என்பதை அறியலாம்...


உதாரணமாக ஐந்துக்கு உரியவன் 
ஆறாமதிபதியுடன் இணைந்து 
லக்கினத்தில் அமர ஜாதகனுக்கு 
நோய் கடன் என்பதனை 
பெற்றுள்ளான் என கூறலாம்...

ஆனால் இது பொதுவான கருத்து ஆகும். 
பொதுவாக ஆறாமிடத்தின் பலன்களை 
முயற்ச்சிகளால் வென்று எடுக்கலாம். 
எப்படியெனில் ஜாதகனின் விதி நோய் கடன் என்பது 
உறுதியானால் ஒன்று நோயாளியாக இருக்கலாம் 
அல்லது நோயாளிகளுக்கு குணமளிக்களாம்... 
கடன் பாக்கியம் உறுதியானால் 
ஒன்று கடனாளியாக இருக்கலாம் அல்லது 
கடன் தரும் நபராக இருக்கலாம். 
இதனை சரியான படி திட்டமிட்டால் 
இது போன்ற அவ யோகத்தினை சரியான படி 
அனுபவிக்க செய்யலாம்.

அன்புடன்
மக்களின் ஆலோசகர்
ஜோதிடர் *பொன்தாமரைக்கண்ணன்*
கொடுமுடி

1 comment:

  1. 5 ஆம் அதிபதிநீசம் ஆகி 4ம் அதிபதியுடன் இனைந்து 11 இடத்தில் உள்ளார். 11 அதிபதி குரு உச்சமாக உள்ளார் பலன் எவ்வாறு இருக்கும்.

    ReplyDelete