20 July 2015

நாக கவசம் naga kavasam

ஜாதகத்தில் லக்னம், இரண்டாம் பாவத்தில்  ராகு கேது உள்ளவர்கள், காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள், மரற்றும் நாக தெய்வங்களின் அருளினை பெற விரும்புபவர்கள், கீழ்கண்ட நாக கவசத்தினை பாராயணம் செய்து பயன் பெறலாம். மேலும் சமஸ்கிருதத்தில் நாக துதியும் கொடுக்கப்பட்டு உள்ளது. அன்பர்கள் படித்து பயன் அடைவீர்களாக!!

  

நாக கவசம்


நாக தெய்வக் கவசத்தை நானும் பாடிப் பலன் பெறவே
பாகம் பெண்ணுருக் கொண்டானின் பாலன் கணபதி காப்பாமே!

வணங்கும் பக்தர்க் கருளுகிற வளந்தரு நாகராசவே
இணக்கமுடனே கிழக்கினிலே எம்மைக் காப்பாய் தெற்கினிலே
சுணக்க மின்றிச் சுகந்தருவாய் சோதி மறையும் மேற்கினிலே
மணக்க வந்து காப்பாயே வடக்கிலும் காத்து வளந்தருவாய்

தாயாய் வந்து காத்திடுவாய் தரணியில் மேல் கீழ் ஆகாயம்
நீயே செல்வம் தனைத்தந்து நிலையாய் என்றும் காத்திடுவாய்
சேயாய் எம்மைப் பாராட்டி சிரசைக் காப்பாய் நெற்றியோடு
வாயைப் புருவ நடுவினையும் வடிவுடன் கண்கள் தமைக் காப்பாய்.

கன்னம் காது நாசியுடன் கன்னல் மொழிதரு நா; பற்கள்
மின்னும் நாகராசாவே விரைந்து காப்பாய் முகங்கழுத்தும்
இன்னல் தீர்க்கும் எழில் கோவே இதமாய் காப்பாய் தோள், கைகள்
மின்னல் வேகம் உடையோய் நீ மேன்மையுடனே காத்திடுவாய்.

முலைகள் மார்பு நெஞ்சினையும் முதுகு வயிறு நாபியையும்
இலையோ என்னும் இடுப்பினையும் இருப்பிடத்துடனே குறிகளையும்
நிலையில் உயர்ந்தோய் காப்பாய் நீ நீள்தொடை முழந்தாள் ஆடுசதை
மலையே கால்நகம் கனைக்கால்கள் மகிழ்ந்தே காப்பாய் காப்பாயே!

எங்கள் உரோமம் நரம்பினையும் எலும்பு தசைகள் ரத்தம் தும்
திங்கள் ரவி உள்ளவரைத் தினமும் காப்பாய் இரவு பகல்
மங்கும் நேரம் மலர் நேரம் மருளும் நேரம் மகில்நேரம்
அங்கம் அனைத்தும் காப்பாயே! அரவத் தேவே காப்பாயே!

எட்டுத் திசையிலும் காப்பாயே எங்கள் பகையை அழிப்பாயே
துட்டப் பேய்கள் செய்வினைகள் தொடாது ஓடச் செய்வாயே
பட்டுப் போகச் செய்கின்ற பிணிகள் எதுவும் அணுகாது
விட்டு விலகச் செய்வாயே விடங்கள் ஏறா தருள்வாயே!

விண்ணவர் ஏத்தும் வேலவர்க்கும் விக்னம் அகற்றும் விநாயகர்க்கும்
எண்ணிய கருமம் முடிக்கின்ற எங்கள் இறைவன் இறைவிக்கும்
புண்ணியம் சேர்க்கும் மாலவர்ற்கும் பணிகள் புரியும் நல்லரவே
எண்ணிய தெல்லாம் ஈமக்கீந்து எங்கும் எதிலும் காப்பாயே

சொல்லிய சுப்பிரமணியனிவன் செந்சொல் கவசம் தினம் சொன்னால்
நல்ல புத்திர பேறு தரும் நாக தோஷம் நீங்கி விடும்
இல்லற சுகமும் இயைந்து வரும் எல்லா வளமும் மிகுந்து வரும்
வல்லன வெல்லாம் கைகூடும் வாழ்வு வளமும் பெருகிவிடும்.

 நாக துதி
ஓம் அனந்தம் வாஸுகிம்
சேட்சம் பத்மநாபம்
ஸகம்பலம் ஸங்கபாலம்
த்ருதராஷ்டிரம்: தட்சகம்
காளியம்ததா: ஏதானி நவ
நாமானி சமகாத்மனாம்
சாயங்காலே படேநித்யம்
ப்ராதாகாரல விசேஷதக
நஸ்யவிஷ பயம் நாஸ்தி

ஸர்வத்ர விஜயூபவேத்

No comments:

Post a Comment