நமது ஜாதகத்தினை எடுத்து பார்க்கும் போது ஏதாவது ஒரு கட்டத்தில் *ல* என லக்கினம் குறிக்கப்பட்டு இருக்கும். நவகிரங்களுடன் குறிக்கப்பட்டுள்ள இந்தலக்கினம் என்றால் என்ன? அது கிரகங்களை போல பருப்பொருளா அல்லது கற்பனை புள்ளியா என பார்க்கலாம்.
லக்கினம் என்பது ஒருவகையில் கற்பனை புள்ளியே ஆகும். பூமியின் தன்னைதானே சுற்றிக்கொள்ளும் சுழற்ச்சி காரணமாக ஒவ்வோர் கிரகமும் கிழக்கில் உதித்து மேற்க்கில் மறைந்து மீண்டும் அடுத்த நாளில் கிழக்கு பகுதியில் உதிப்பது போல நமக்கு காட்சிகள் கிடைக்கிறது. இதனை சூரியன் மற்றும் சந்திரனின் நிலையில் இருந்து பார்ப்போம். இதில் அனைத்து கிரகங்களும் நட்சத்திர மண்டலமும் கூட இதே முறையில் தினமும் ஒருமுறை பூமியினை சுற்றவதாக காண்கிறோம். இந்த சுழற்ச்சியில் ஒருவர் பிறக்கும் போது அவர் பிறந்த இடத்தின் கிழக்கின் அடிவானத்தில் என்ன இராசி நட்சத்திரம் பாகை இருக்கிறது என்பதை காட்டும் கற்பனை புள்ளியே லக்கினம் ஆகும். இது சூரியனை அடிப்படையில் வைத்து உருவாக்கப் பட்டது.
லக்கினம் தினசரி சூரிய உதயத்தில் சூரியனுடன் ஆரம்பித்து அதே கீழ்வானத்தில் நிலையாக இருக்கும். பூமி சுழலும் போது அந்த லக்கின புள்ளி அப்படியே இருக்கும். அது அடுத்த நாள் மீண்டும் சூரியனை சேர்ந்து கொள்ளும். இதன் படி லக்கினம் ஒருநாள் கடக்கும் தொலைவு 359°பாகைகள் ஆகும்.
அன்புடன்
அஸ்ட்ரோ *கண்ணா*
7667745633
அஸ்ட்ரோ *கண்ணா*
7667745633
No comments:
Post a Comment