30 March 2017

ஒரே நிமிடத்தில் பிறந்த குழந்தைகள் பலன் வேறாவது எப்படி

கேள்வி:
ஒரே மருத்துவமனையில் ஒரே நிமிடத்தில் 
பிறந்த குழந்தைகள் கூட வேறு வேறு சூழல்களையும் 
தொழில்களையும் பெறுகிறதே ஏன்?

பதில்:
அருமையான
கேள்வி கேட்டீர்கள்...
இப்படியான
கேள்வியினால் தான்
எனது
ஜோதிட கல்வியே 

ஆரம்பம் ஆனது.

பிறப்பு என்பது
ஒரு நொடியில்
இருப்பினும்
அந்த குழந்தைகளை
ஒருவருடம் வரையில்
இறைவனின் அம்சமாகவே
காணுதல் மறபு.
ஜாதகத்தின் பலனை
மீறி பலவிசயங்களை
நமது கர்மா செய்யும்படி
இந்த ஒருவருட
காலங்களில் நிகழும்...
ஆகவே தான்
இந்த காலங்களில்
ஜாதகம் எழுதுவது கூட
வழக்கத்தில் இல்லை.
இந்த காலத்தில்
பூர்வ ஜென்மங்களின்
கர்மாவே 100% பேசுகிறது.
அதன்பிறகும் கூட
பெற்றோரின் கர்மா
12வருடம்வரை
குழந்தையினை
வழிநடத்துகிறது...
அதன் பின்னர் தான்
குழந்தையின் ஜாதகம்
தனியாக வேலை செய்கிறது.
இந்த காலத்திற்க்கு பின்னர்
குழந்தைக்கு கிடைக்கும்
வாய்ப்புகளையும்
கிடைக்கும் சந்தர்ப்பங்களின்
கணத்திற்க்கு ஏற்பவே
தன்னுடைய வாழ்க்கையின்
பரிணாமங்கள் உண்டாகிறது.
நல்ல யோகம் உள்ள
ஜாதகமானாலும் கூட
நல்ல வாய்ப்புகளை
தரும் குடும்ப சூழலும்
ஜாதகத்தின் பலமான காரகம்
சார்ந்த தொழிலும்
அமைந்தவர்கள் தான்
வெற்றியாளர்களாக
வலம்வர முடியும்.
இதனையே
இடம் பொருள் ஏவல்
என சுருக்கமாக கூறுகிறார்கள்.
அன்புடன்
மக்களின்
அதிர்ஷ்ட ஆலோசகர்
*ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்*
கொடுமுடி

No comments:

Post a Comment