30 March 2017

கூடாரை வள்ளியும், மகர ஜோதி, பொங்கலும், ஜோதிடமும்


துலாமில் நீசமான சூரியன்
(சுவாதி) இராகுவிடம் இருந்து
மெல்ல மெல்ல நகர்ந்து 
(மூலம்) கேதுவினை தாண்டி
(பூராடம்) சுக்கிரனின்
கவர்சியோடும் குணத்தோடும்,
மகிழ்ச்சியாக மக்களுக்கு
அருள தன்னுடைய
நீச தோசத்தினை முழுவதும்
நீக்கிக் கொண்டு நமக்கு
அருள் புரியும் நாளே
இந்த மார்கழி 27 to 30
வரையுள்ள நாட்களாகும்.


சூரியன் தனது உத்திராடம்
நட்சத்திரத்தில் பவனியாகும் திருநாள்களிலேயே
மகர ஜோதி..
தை பொங்கல்...
உழவர் திருநாள்...
காணும் பொங்கல் போன்ற
அனைத்தும் வருவது காணுங்கள்.

சூரியனின் இந்த
மகிழ்சியான நாளில்
நம்மை வாழ்விக்கும் அவனையும்...
அவனின் பரம்பொருளினையும் வணங்குவோமாக....

இதனை உணர்ந்த
ஆண்டாள் நாச்சியார்
இதன் பொருட்டே
இன்றைய கூடாரை வெல்லும் சீர் எனும் பாடலின் கருத்தினை அற்புதமாக வைத்து பாடியுள்ளாரோ....

இந்த வருடம் இந்த
சிறப்பு மிக்க நாட்களில்
ஆருத்ரா தரிசனம் அபிசேகமும்
சேர்ந்தே வந்திருப்பது
இந்த நாட்களின் சிறப்புக்கு
மணிமகுடம் சேர்கிறது...

மிக மோசமான நிலையில்
உள்ள இன்றலய கோட்சார
கிரக நிலைகளை
நாம் பாதுகாப்பாக கடக்க
இந்த அமைப்பு கைகொடுக்கும்...

அனைத்து நண்பர்களும்...
இன்றைய நாளினை
பரம்பொருளின் சக்தியினை
எதாவதொரு வடிவத்தினில்
போற்றி நன்றி தெரிவித்து வழிபடுங்கள். இறைவனின் கிருபை
அனைவருக்கும் நல்வழி காட்டட்டும்.

அன்புடன்
அதிர்ஷ்ட சேவகன்
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்


எதிர்பார்த்து நடக்கும் நிகழ்வுகளை
எதிர்பாராமல் நடக்கச் செய்ய
இறைவனின் ஆசி வேண்டும்...
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

No comments:

Post a Comment