26 July 2016

மதத்துவேசம் ஏன்...

துவேசம் இல்லை.நியாயமா என கேட்கிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~

மதமாற்றம் என்பது தனிநபரின் 
உரிமையாகும்.
தனது கடவுள் எது என நிர்ணயிப்பதும்
மதம் எதுவென கொண்டாடுவதும்
மக்களின் சட்டப்படியான உரிமை.


ஆனால்...
மதமாற்றம் ஏன் ஏற்படுகிறது என யோசித்தால் 
வேதனைதான் மிஞ்சுகிறது.
கடவுளை நமது அடிமையாக கருதுவதும்...
நாம் அவரினை நமது செக்யூரிடியாக 
நினைப்பதுமாக உள்ளவர்களே...
மதம் மாறுகிறார்கள்.

மதம் மாறி இன்னோர் கடவுளை அடைந்ததும்
உலகமே தன்வசம் ஆனது போல
கூறிக் கொள்வது
மிகவும் நல்ல விசயமாக இருக்கிறது.

ஆனால் அது எப்படி சாத்தியம் ஆகிறது.
நமது அனைத்து வேண்டுதல்களையும் 
செவிமடுக்கும் கடவுள் இந்து மதத்தில் 
உள்ளவர்களை மட்டும் கைவிட்டு விடுவாரா...

மதமாற்றத்தின் பின்னர்
பதிகம் ஸ்லோகங்கள் என்றால் 
என்னவென்றே தெரியாத நபர்கள்
தினசரியும் தவறாது வேதம் ஓதுவதும்...
பாடல்களை மனமுருகி பாடுவதும்...

கோவிலுக்கு வருடம் ஓர்முறை 
போவதையே சாதனையாக பேசுபவர்கள்
வாரத்தின் ஒருநாளை முழுதாக 
பக்தி செலுத்தி கொண்டாடுதலும்....

கடவுளின் அருளுக்கு ஒருநாள் கூட 
நன்றி கூறாத நபர்கள்
ஒவ்வோர் வேளை உணவுக்கும் 
நன்றி கூறி சந்தோசிப்பதும்...

அடுத்தவர்களுக்கு நல்லது நடந்தால் 
வயிற்றெரிச்சலில் இருக்கும் நிலைமாறி
அடுத்தவரின் துயர் தீர்க்க 
கூட்டு பிரார்த்தனை செய்வதும்...

இப்படி கடவுளை நமது மதத்தில் வணங்கி இருக்கிறீரா....
நல்ல சிந்தனையுடன் இருந்து உள்ளீரா...
தொடர்ந்து வாரம் ஒருநாள் 
இறைவனை மட்டும் சிந்தித்து 
இருக்கிறீர்களா...

இல்லையே சகோதரர்களே...
நமது மதங்களில் மதத்துவேசத்தினையோ...
மாற்று வழிகளை கேவலமாக பார்க்கும் முறைகளையோ பார்த்து இருக்கிறீர்களா...

இத்தனை நாள்கள் வணக்கத்துக்கு உரியவர்களாக 
இருந்த கடவுளர்கள் 
அடுத்த நாளே சாத்தான்களாகி விட்டார்கள்
எனகூறி எப்போதும் 
அடுத்த மத்தின் மேல் ஒரு பயத்தினை உறுவாக்கி உங்களை மற்ற மதங்களில் 
இருந்து தள்ளி வைக்கும் 
யுக்திகளை அன்பே வடிவான 
உங்களின் அந்த ஆண்டவன் கூறியிருக்க
வாய்ப்பு உண்டா...

கடவுளை வியாபாரமாக்கி
போட்டியாக்கி
அதனால் புகழும் பணமும் பெறும் முயற்சியில்
மதமாற்றும் போதகர்கள் ஜெயிக்கிறார்கள்.

பாவம்.... அதில் உள்ள தங்களை உண்மையில்
செம்மறி ஆடாகவே மாற்றி விடுகிறார்கள்.
சுதந்திரம் என்பதன் அர்த்தம் அடிமைதனம் என்பதாக கற்பித்து விடுகிறார்கள்.

மற்ற மதங்களின் கருத்துகளை 
கடவுள்களை கும்பிட முடியாத 
அடிமையாக இருப்பதை உணருங்கள்...

கடவுளை உணரும் பாதையில்
தூணிலும் துரும்பிலும் உள்ள கடவுள்
அனைத்து கடவுளிலும் 
இருக்கதான் இருக்கிறான்.

என்னால் 100சதவிதம் 
சந்தோசமான மனநிலையில் 
எமது கடவுளை வழிபட முடிவது போலவே
மாற்று மதங்களை சேர்ந்த கடவுள்களையும் 
கொண்டாவும் வழிபடவும் முடிகிறது.

ஆனால் 
உங்களுக்கு இந்த சந்தோசம் மறுக்கப் படுகிறுது.
ஏன்...
யோசித்தது உண்டா...
பாதியில் மதம் மாறிய நபர்கள்
மீதியுள்ள காலம் முழுக்க 
இங்கேயே இருக்க வேண்டும் 
என்பதற்க்கான பாதுகாப்பு வேலி தான்
மததுவேசம்.

தங்களின் கடவுள்
தன் மதத்தில் அவதரிக்கவும் இல்லை
அடுத்தமுறை கூட தன் மதத்தில்
அவதரிக்கப்போவதும் இல்லை.

இது எதிர்மனோ பாவம் இல்லாமல்
சகோதரத்துவத்தை வளர்தெடுக்க
எழுதிய பதிவாகும்
எதிரிகள் எப்போது எங்கேயும்...

உருவாவது இல்லை...
உருவாக்கப்படுகிறார்கள்...

நமது சொந்தங்களையும்
உறவுகளையும் அவர்களின் நம்பிக்கைகளையும்
எதிரிகளாக பார்க்க வைப்பது தான்
கடவுளின் செயலா... 
யோசிப்பதே மறந்து போனதா
இல்லை இல்லை
யோசிப்பதே பாவம் என புகட்டப்படுகிறது.

நான் மிகவும் கவலையடைகிறேன்...
(இது எந்த கடவுளுக்கும் பொருந்தும்...)

No comments:

Post a Comment