26 July 2016

வழிபாடுகள் உங்களுக்கு பலிதமாகிறதா

கோவில் வழிபாடுகள்
உங்களுக்கு பலிதமாகிறதா?


இல்லை‬ என்றால் இதை படியுங்கள்....
ஆம்‬ என்றால் இதை பகிருங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நமது தேவைகளை இறைவனுக்கு தெரிவிக்கவும்... இறைவனின் கருணையினை பெறவும் நமக்கு பெரியவர்கள் பலவிதமான வழிகளை காட்டியுள்ளார்கள்.
இதில் மிக முக்கியமானதாக 
இறைவனுக்கு அர்சனைக்கு தருதல் 
அல்லது வீட்டிலிருந்தே அர்சனை செய்தல்
என்பது அனைவராலும் மிக எளிதாகவும்
உடனடியாகவும் செய்யக்கூடிய வழிபாடு ஆகும்.
நம்மில் அனேகம் பேர் தினசரியும் 
பல்வேறு காரணங்களுக்காக 
இறைவனை வேண்டி பூஜைகளை செய்கிறோம்.
மேலே கண்டபடி கோவிலிலோ அல்லது வீட்டிலோ...
சிலருக்கு பலிதமாகும் விசயங்கள் 
சிலருக்கு பலிதமாகாமல் போகும் நிலையை 
பார்க்கிறோம். சில சந்தர்ப்பத்தில் நாமும் கூட அதனை உணர்கிறோம். ஏன் இந்த நிலை உண்டாகிறது.
அடிப்படை அறிவியலில் இதனை எளிதாக 
கூறுவார்கள். எந்த ஒரு செயலுக்கும் எதிர் செயல் உண்டாகும். எந்த செயல் உண்டாகவும் இரண்டு இடங்களின் தொடர்பு முக்கியமானதாகும். அதாவது விசை அந்த விசை செயல்படும் தளம் இரண்டும் இருந்தால் தான் எந்த செயலும் உருவாகும்.
இது போலவே 
ஆன்மீக விசயங்களில் இறை சக்தியின் மீதுள்ள நம்பிக்கை... மன ஒருமைப்பாடு... இவைகள் முக்கியமாக இருக்கிறது. இதனில் ஒன்று குறைந்தாலும் கூட குறிப்பிட்ட பலனை அடைய முடியாது போகும்.
இறை நம்பிக்கையில் உள்ளது
கோவிலில் அர்சனைக்கு தருவோம்...
நமது குறிப்பிட்ட வேண்டுதல்கள் நடக்கட்டும் என
அர்சகர் சங்கல்பம் கூறி அர்சனையினால் இறைவனின் திருவடியில் நமக்காக வேண்டுதல்களை சமர்பித்துக் கொண்டு இருப்பார். நாம் அவரின் போற்றி மந்திரங்களையோ அல்லது இறைவனின் சிந்தனைகளில் நமது மனதை ஒருமைபாட்டுடன் வைக்காமல்... போன்பேசுவது... அடுத்த காரியம்... நேரம் ஆவது பற்றிய கவலை.... அர்சகர்களின் பொருளாதாரம்.... இப்படி ஆயிரம் சிந்தனைகளில் இருக்கும் போது... அங்கு மன ஒருமைப்பாடு இல்லாமல் போகும். அதற்கு பரிசாக இறைவனின் பிரசாதமாக திருநீரு தேங்காய் பழம் தான் கிடைக்கும்.
உண்மையில் நமது வேண்டுதல்களுக்காக இறைவன் அளித்து ஆசிர்வாதத்தினை நாம் தவற விட்டு இருப்போம். வீட்டினில் நாமே பூஜை செய்யும்போதும் கூட... இந்த கதை நடக்கும்.
பேப்பர் வந்து விட்டது... என்ன சமையலாக இருக்கும்.... அலுவகத்தில் இதை.... பூஜை முடிந்ததும் அதை.... என பூஜையில் மனம் ஒட்டாது போனால், 
வீட்டில் செய்யும் பூஜையிலும் பலன்கள் உண்டாவது 
நடக்கும் ஆனால் நடக்காது என்ற பாணியில் மாறிப்போய் விடும்.
இறைவனுடன் மனதினை இணைத்திட்டால்
அவனின் கருணை வெள்ளம் நமது
கர்மாவை துவைத்துப் போடும்...
நற்கர்மாவாக மாற்றும் வழிபாடுகளால்
நமது வாழ்வும் நல்லபடி ஆகும்.
நல்லது செய்தால்
நல்லது நடக்கும்....
கேள்வி கேட்டு பதிலை பெறும் எமதன்பு வாடிக்கையாளர்களுக்கு நன்றி கூறும்....

No comments:

Post a Comment