26 July 2016

சூரியன் சந்திரன் ராகு கேதுக்கள் கிரகமே இல்லையா!!!

சூரியன் நட்சத்திரம் மேலும் சந்திரன் துணைக்கோள் இவற்றை கிரகமாக பாவித்து எப்படி பலன் கூறமுடியும்? நான் அறிவியல் ஆராய்ச்சியாளர் எனும் கேள்விக்கான எனது நிலைப்பாடு....

கிரகம் என்பதும் நட்சத்திரம் என்பதும்
கோள் என்பதும் துணைக்கோள் என்பதும்
இங்கு நாம் பார்த்து வைத்துக்கொண்ட புரிதலுக்கான வார்த்தைகளாகும்.

நமது சித்தர்கள் அறிவில்லாதவர்கள் அல்ல...
இந்த சூரியன் சந்திரன் விசயத்தில் எப்போதும் ஜாக்கிரதையாகவே இருந்து வருகிறதை கேள்வி கேட்பவர்கள் அறியாமல் போனால் அது அறிவியல் மேதைகளின் நிபுணத்துவம் ஆகும்.
யோகங்களில் பஞ்சமாகா புருஸ யோகங்கள் என வைத்துள்ளதை அறியுங்கள் அதில் சூரியன் சந்திரன் இராகு கேது இருக்காது. இதனால் சூரியன் சந்திரன் இவைகளுக்கும் மற்ற கிரகங்ககளுக்கும் உள்ள வித்தியாசத்தினை உணர்ந்துள்ளது கண்டு நான் எப்போதும் வியப்பின் உச்சியில் உள்ளேன்.
மேலும் சூரியனை நட்சத்திரமாக வைத்ததினால் தான் சூரியனுக்கு அருகில் செல்லும் கிரகங்கள் அஸ்தங்கம் ஆகிறது எனும் கருத்துகளை கூறியுள்ளார்கள். இதனை கூற சித்தர்கள் எந்த டெலாஸ்கோப்பும் பயன் படுத்தியதாக தெரியவில்லை.
ஜோதிடம் என்பதே கிரகங்கள் எனப்படும் நமது பூமியினை சுற்றியுள்ள பொருள்களின் ஈர்ப்பு சக்தியினால் அல்லது அந்த கிரகங்கள் என கூறப்படும் பொருள்களில் இருந்து பெறப்படும் சக்தியினால் நாம் பெறும் விளைவுகளை குறித்த புரிதல்களாகும்....
~~~~~~~~~~~~~~~~~~~~
*1700 to1900 குள் அறிவியலாலர்கள் யுரேனஸ் நெப்டியன் ப்ளூடோ என மேலும் பலகிரகங்களை கண்டு பிடித்துள்ளார்களே இதனை எங்கு கொண்டு வைப்பார்கள்.... நவகிரகங்களின் சன்னிதியில் இடம் தருவார்களா? இதுவும் பகுத்தறிவாளர்கள் என கூறிக்கொள்ளும் ஒருநிலையில் சாயும் கூட்டத்தினரின் கேள்வி...*
நவகிரகங்களில் நமக்கு மிகவும் தூரத்தில் உள்ள கிரகம் சனியாகும். சனியின் அளவு என்பது பூமியினை விட பல ஆயிரம் மடங்கு பெரிது... சனியில் இருந்து பூமிக்கு வரும் ஒளியின் அல்லது ஈர்ப்பு சக்தியின் அளவே மிகவும் சிறிதாகும்.... அதற்க்கும் அப்பால் உள்ள கிரகங்கள் மிகவும் சிறிது... அதனில் இருந்து வரும் அலைகள் நம்மீது செயல்பட வாய்ப்பு குறைவு என்பதால் அவைகளை குறித்து சித்தர்கள் குறிப்புகளை தரவில்லை.... உபகிரக்ங்களை நமது ஜோதிஞர்கள் யுரேனஸ் நெப்டியுன் என கூறுவதால் அறிவியல் பகுத்தறிவாளிகள் கேள்வி கேட்கிறார்கள். முதலில் நாம் சுயத்தை அறிய வேண்டும். அறிந்தால் ஓர் ஆற்புதமான ஆனந்தம் உண்டாகும். அதனை அனைத்து ஜோதிடர்களும் உணர வேண்டும்.
அஸ்ட்ரோகண்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~
*இராகு கேது என கிரகமோ பொருளோ இல்லவே இல்லை இல்லாத ஒன்றுக்கு பஞ்சங்கம் கணிதம் என சுற்றுகிறார்களே அதில் இருந்தே தெரிகிறதல்லவா ஜோதிடம் ஒரு பொய்யென்று? பதில் உண்டா*
இதுதானே ஜோதிடத்தின் சிகரமான விசயமே....
இராகு கேதுக்களின் இருப்பினை புரிந்து கொள்ள முடியாதவர்கள் தான் இப்படி கூறுகிறார்கள்....
சூரியன் சந்திரன் இவர்கள் கிரகங்கள் அல்ல என்பதையும் இவர்களால் உண்டாகும் சுழற்ச்சி வேகத்தினால் கிரகங்களில் இருந்து வரும் அலைகள் பாத்திப்பு அடைகிறது அல்லது இல்லாமல் போகிறது. இதனை கவனித்து... சூரிய சந்திர சுழற்ச்சியின் மைய அச்சு எங்கேயுள்ளது என்பதனையும்... கிரகண காலங்களே இதனை அறிய உதவும் குறிகாட்டும் நேரங்கள் என அறிந்து அதனை கணக்கிட்டு இராகு கேது என பெயர் வைத்துள்ளார்கள்....
அந்த ஆராய்ச்சியில் நான் ஈடுபட்ட போது தயாரித்த எல்லா சார்ட்டிலும் இராகு கேதுக்களின் இருப்பினை குறிக்கும் அந்த கோடுகள் அனைத்தும் பாம்பு செல்லுவது போல வலைந்து நெளிந்தே வந்தது..... இதனையே சித்தர்கள் அப்படியே பாம்பு என கூறியுள்ளார்கள்.
அந்த ஆராய்ச்சி முடிவின் படி
என்னால் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் வரும் கிரகணங்களின் மாதத்தினையும் நாளினையும் அது சூரிய கிரகணமா சந்திர கிரகணமா என்பதையும்... இப்போதே சொல்ல முடியும்.
இராகு கேது கணிதம் தான் ஜோதிடம் உண்மையென்பதற்க்கான முதல் ஆதாரமே என கூறலாம்.
அதனை ஆராய்ந்து முடிவினை புரிந்து கொன்டால் அனைவரும் கூறுவோம்.
~~~~~~~~~~~~~~~~~~~~
இன்னும் உள்ள கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. இருக்க வேண்டும்.
ஆனால் அடிப்படை ஜோதிடர்களுக்கு இதனை ஆராய நேரம் இல்லாது போவதும்... ஏற்கணவே ஆராய்ந்த நபர்கள் தங்களின் முடிவினை பகிர்ந்து கொள்ளாது.. தான் மட்டுமே எனும் போக்கினை கடைபிடிப்பதும்... ஜோதிடர்களின் ஒற்றுமையின்மையுமே மற்றும் அனைத்து துறைகளில் இருக்கும் மூடநம்பிக்கையினை போலவே நமது துறையில் இருக்கும் அனேக மூட நம்பிக்கைகளுமே ஜோதிடத்தினை பார்த்து பொய்யென கூறி பகுத்தறிவு ஆதவர்கள் நகைக்க காரணமாக உள்ளது.
உயிரை கண்டறிய முடியவில்லைஎன்பதால் எல்லோரும் இறந்த பிணங்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா?
உயிர் உள்ளவரை செயல்பாட்டின் மூலம் அறிதல் போல
ஜோதிடத்தினையும் அதன் செயல்பாட்டில் அறியலாம்..
அஸ்ட்ரோகண்ணா

No comments:

Post a Comment