02 July 2016

இராசிபலனா? இலக்கின பலனா? வித்தியாசம் என்ன?

இராசிபலனா? இலக்கின பலனா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஜாதகம் இலக்கினத்தை பார்த்து பலன் சொல்லபடுகிறது
ஆனால் கோட்சாரம் மட்டும். இராசிக்கு(சந்திரனுக்கு) சொல்லுகின்றனர் ????
ஏன்....
+×+×+×+×+×+×+×+×+×+×

முதலில் இலக்கினம் என்பதன் உபயோகம் எதற்க்கு என்பதை ஆராய்தல் நலம்
பிரபஞ்சம் என்பது
அதன் விரிவு என்பது
அளவிட முடியாதது....
ஆனால் நம்மை மத்திய புள்ளியாக வைத்து சுற்றிலும் பார்த்தால் அதனை 360 பாகையில் உணர முடிகிறது அல்லவா
அதுபோல பூமியினை புள்ளியாக வைத்து பிரபஞ்சத்தினை நாம் பார்க்கும் பார்வையே மேசாதி இராசிகளும்... சூரியாதி கிரகங்களும்.... அசுவின் முதலான நட்சத்திரங்களும்...
பூமியினை மையமாக்கி கிரகங்களை கணிப்பு செய்வது வரையில் மட்டுமே முதலில்... அதுபோல நம்மை புள்ளியாக்கி பிறந்த நொடியில் அந்த கிரகங்கள் எந்த எந்த இடங்களில் உள்ளது என்பதை துல்லியமாக்கும் இடமே லக்கினம்
லக்கினம் என்பது நமது பயணத்தில் ஆரம்ப இடமாகும்.
மேலும்...
நாம் பூர்வ ஜென்மத்தில் என்ன என்ன கொண்டு வந்துள்ளோம்...
எதனை விடுப்போம்...
எதனை எடுப்போம் என்பதை நிர்ணயிப்பது தான் லக்கினமாகும்.
குறிப்பாக
சூரியனில் இருந்து நாம் எவ்வளவு தூரத்தில் எந்த பாகையில் இருக்கிறோம் என்பதே லக்கினம் ஆகும்.
இதனை இப்படி உறுதி செய்யலாம். சூரியன் பூமியின் மையத்தில் இருந்துதான் இராசி மாறும். அதனால் வருடம் ஒரு சுற்று
நாம் உள்ள பிறந்த இடத்தில் இருந்து சூரியனை வைக்க லக்கினம் நாளுக்கு ஓர் சுற்று
லக்கினமே நமது ஆயத்த நிலையினையும்
நமக்கு கிடைக்கும் சூழல்களையும் துல்லியமாக நிர்ணயம் செய்து தரும்.
உதாரணமாக... இதனை ஒரு வீட்டினை சகல வசதியோடு வாங்குவது போல ஒப்பிடுங்கள். அதாவது... நாம் வாங்கும் வீட்டில் நமக்கு தேவையான பல பொருள்கள் இருக்கலாம்... இருக்காமலும் போகலாம் அல்லவா....
அதுபோல
நமது லக்கினப்படி அமையும் ஜாதகத்தில் பல நன்மைகள் இருக்கும் அல்லது இல்லாமலும் போகும்.
=_=_=_=_=_=_=_=_=_=_=_=_=_=_=_
இது சரி எனில் அடுத்து சந்திரனை அதாவது இராசியை பார்க்கலாம்
இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட விசயங்களை அதாவது லக்கினப்படி கிடைக்கும் பலன்களை நல்லபடியாகவோ அல்லது... கெட்டபடியோ அனுபவிக்க நமது மனமே 100 சதவீத காரணமாக உள்ளது.
அந்த மனதை கட்டுப்படுத்தும் சந்திரனே நமது ஜாதகத்தினை வழிநடத்தும் கிரகமாவார்.
சுருக்கமாக நமது விதி வண்டியினை ஓட்டும் டிரைவர் சந்திரன் ஆவார்.
அப்படியானால் சந்திரனுக்கு மற்ற கிரகங்களால் உண்டாகும் அதிர்வுகளே இராசி பலனாகும்.
இதனாலேயே இராசிபலனான கோச்சார பலன்களை இராசியான சந்திரனை வைத்து கூறும்போது துல்லியமாக வருகிறது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சித்தர்கள் இலக்கினம் மற்றும் இராசி நிர்ணயம் இவற்றிற்க்காக எவ்வளவு பாடு பட்டு இருப்பார்கள்
பிரபஞ்சத்தில் நமது இருப்பு எவ்வளவோ அவ்வளவே நமது அறிவும்.... ஆச்சரியம் அற்புதம்
இவற்றின் மூலமாக நமது தேடலை இன்னும் விரிவு படுத்துவோம்.
தொடர்புக்கு
7667745633

No comments:

Post a Comment