26 July 2016

வக்கிர வர்கோத்தம பலம்

வக்ர வர்கோத்தம பலம்....


நவாம்சத்திலும் இராசியிலும் கிரகம் ஒரே இடத்தில் இருக்க அந்த கிரகம் ஆட்சி பலம் பெறும். என அனைவரும் அறிய செய்வோம்.

ஆனால் உச்சமான ஓர் கிரகம் வர்கோத்தமமானால்... அதிலும் அந்த கிரகம் வக்கிரம் அடைந்திருந்தால்...

அந்த குறிப்பிட்ட கிரகத்தின் பலத்தினை எப்படி கணக்கிடுவது. அதுவே மாறி நீசமான ஒரு கிரகம் வக்கிர வர்கோத்தமம் அடைந்தால் அந்த கிரகத்தின் பலத்தினை எவ்வாறு அறிவது.


இதற்க்காக உச்சம் நீச்சத்திற்க்கான கிரக பலத்தினை நான் இப்படியாக வைத்து கணிதம் செய்கிறேன். உச்சம் 100 லிருந்து நீசம் 0வரை...


இதில் இராசியில் மட்டுமே வக்கிரம் பலன்கள் எல்லாம் தச வர்க்கங்களில் வக்கிரம் கிடையாது.
விதிகள்.
  1. இராசியில் உள்ள கிரகத்தின் நிலை 
  2. அம்சத்தில் உள்ள கிரகத்தின் நிலை
  3. வர்கோத்தம சிறப்பு பலம் இவற்றை கூட்டினால் வரும் சராசரியே அந்த கிரகத்தின் பலமாக கருத வேண்டும்.
கீழ்கண்ட சில உதாரணங்களின் மூலமாக இதனை கூற துணிகிறேன்.
‪‎கிரக_பலங்கள்‬....
உச்சன் 100
ஆட்சி 80
நட்பு 60
சமம் 40
பகை 20
நீசன் 0

உச்சன் வக்கிரம் 0
ஆட்சி வக்கிரம் 2௦
நட்பு வக்கிரம் 40
சமம் வக்கிரம் 60
பகை வக்கிரம் 80
 நீசன் வக்கிரம் 100

வர்க்கோத்தமம் ஆட்சிபலம் 80


உதாரணம் 1
நீச்ச வக்கிர கிரக பலம்.

  1. நீசம் வக்கிரம் 100
  2. நீசம் வர்ககோத்தமம் 0
  3. வர்கோத்தம பலம். 80

180/3=60
தங்களின் நீசன் வக்கிர வர்கோத்தம பலம் நட்பு அளவுக்கு நலம்.... இதனை காரக ரீதியாக பலனை கூறவும்.

உதாரணம் 2
உச்சன் வக்கிர வர்கோத்தமம்
  1. உச்சவக்கிரம். 0
  2. உச்ச வர்கோத்தமம் 100
  3. வர்கோத்தம பலம். 80

மொத்தம் 180/3=60
இதுவும் நட்பு பலமாகும். உச்ச வக்கிரமும், நீச்ச வக்கிரமும் நட்பு அளவுக்கு பலம் பெறுவதை காண்கிறோம்.பலனுக்கு காரக பலம் அனுசரிக்க...

உதாரணம் 3
சாதாரணமாக உள்ள கிரகங்கள் வக்கிர வர்கோத்ததமம் பெறும் போது...
  1. நட்பு வக்கிர பலம். 40
  2. நவாம்ச நட்பு பலம் 60
  3. வர்கோத்தம பலம். 80

மொத்தம் 180/3=60 இதனால் நட்பு பலத்தின் பலன் கிடைக்கும் என்பதையும், காரக பலன்களால் சுப அசுப பலன்களா என்பதனையும் அறியலாம்.

புரிந்து கொள்ள இந்த முறை எளிதாக இருக்கும்.

No comments:

Post a Comment