26 July 2016

நீசபங்கம் மாற்றுசிந்தனை‬

நீசபங்கம் என்றால் என்ன? மாற்றுசிந்தனை‬
~~~~~~~~~~~~~~~~~~~
ஒருகிரகம் நீசம் அடைய அந்த வீட்டின் அதிபர் உச்சமானால் நீசபங்க இராஜ யோகம்.
நீசமான கிரகம் உச்சம் நீசம் ஆட்சி கிரகங்களோடு இணைவதும்... பார்வை பெருவதும் நீச பங்கம்.
எல்லாமே சரியானது...
ஆனால் நீசம் பங்கமானால் உச்ச பலம் பெறுவது தான் கடினமாக இருக்கும்.
எனது கருத்தில் அனைத்து கிரகமும் தன் கதிர்களை பூமியின் மீது செலுத்தி வருகிறது.

கிரகங்கள் பூமிக்கு அதிகபட்ச தூரத்தில் இருக்கும் போது அதன் சக்தி நமை வந்து சேர்வது இல்லாமல் போவதே நீசமாகும்.
அதுபோலவே பூமிக்கு மிக அருகில் வரும்போது ஒருகிரகம் அதிக துல்லியமாக அதீத ஆற்றலை பூமில் செலுத்தும் வாய்ப்பு உண்டாகிறது.
பூமியின் அருகில் உள்ள அதாவது உச்ச கிரகத்தின் 180வது பாகையினை ஒட்டி தூரத்தில் உள்ள அதாவது நீசமாக உள்ள கிரகத்தில் இருந்து வரும் குறைவான கதிர்களை ஆண்டனாவாக பூமிக்கு திருப்பி அனுப்புகிறது.
இதனால் நீசம் பெற்ற கிரகத்தின் கதிர்கள் குறைவால் உண்டாகும் விளைவுகள் இல்லாமல் போகும்.
இதுவே நீசனை உச்சன் பார்த்தால் நீசபங்கம்.
ராஜயோகம் என்பது குறிப்பிட்ட ஜாதகனுக்கு அந்த கிரகத்தின் கதிர்வீச்சு தேவையா இல்லையா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டிய விசயமாகும்.
சூரியன் மட்டும் காற்று கிரகம் அல்லது ஒளிகிரகம்
எந்த திடபொருளும் இல்லாத ஒரு இடமாகவே சூரியன் உள்ளது.
எனவே சூரியன் தடை செய்யாது. தன்னுடைய ஒளியினால் சற்றே மாற்றி தரும்..... அல்லது தனது விசயங்களை கலந்து தரும்.
(அஸ்தங்கத்தில் நடக்கும் விசயம் தடை அல்ல காரக மாற்றம் அல்லது கலப்பாகும்)
நீசபங்கத்தில் நடப்பது கதிர்களை குவித்து தருவது.

No comments:

Post a Comment