என்ன நடக்கிறது ஜுன் ஜூலை 2016 ல்
××××××××××××××××××××××××××××
இன்றைய சூழல் ஒரு சிறப்பான கிரக சேர்க்கையினால் சூழப்பட்டு உள்ளது.
குருவும் இராகுவும் சிம்மம் 22ம் பாகையில் இணைந்து உள்ளார்கள். இந்த காலகட்டத்தில் நல்ல அறிவுகளை தந்து தீய செயல்களை நிறுத்தவோ அல்லது தடுக்கவோ சொய்யும் நிலையில் குருபகவான் இராகுவின் கோரபிடியில் உள்ளார்.
சனியும் விருச்சிகத்தில் கடந்தசில வருடங்களாகவே தண்டனையினை உறுதியாக நிறைவேற்றும் பலம் கொண்டு நிற்பதும்.... அதிசயமாக 6மாதங்களுக்கும் மேலாக செவ்வாயுடன் சேர்ந்து பலவிதங்களில்... உலகின் மக்களை உணர்சி வேகத்தில் தவறுகளில் ஈடுபட வைத்து வருகிறார்.
அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் கடுமையான எதிர்மனோநிலைக்கு தூண்டப்படும் நிலையில்....
உள்ளதால் கண் எதிரே நடக்கும் அராஜகங்களை கூட தவறு என தட்டிக்கேட்கும் நிலையினை இழந்து விட்டது மனித இனம். இதற்க்கு உலகம் முழுக்க பல உதாரணம் கிடைத்ததும்.... நமது தலைநகர் சம்பவம்இதனை உறுதியாக்கி விட்டதை உணர்வோம்.
இதோ குரு இராகு தொடல் நடந்து கொண்டுள்ளது. அதற்க்கு பலமாதம் முன்னரே பல நண்பர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கு உதவிய ஆசான்களையும் வழிகாட்டி களையும் விரோதிக்கும் நிலை உண்டாகி விட்டதாக பதிவு செய்ததையும் கூறவேண்டியுள்ளது.
இந்த நிலை உடனே மாறும் நிலையினை எதிர்பார்க்கமுடியாது. இராகு நகர்ந்து போய்விட்ட பின்னர் கன்னி குருவினை சந்திரன் தொடும்போது குரு தன் தோஷத்தினை இழக்கும் வாய்ப்பு.
ஆனால் அப்போது இராகுவை கடந்த சந்திரன் பலவீணனாக இருப்பதால் குருவினை மலப்படுத்துதல் கடினம். அப்படியானால் இராகுவை கடந்து சூரியன் வர வேண்டும். அதன்பின்னர் ஆட்சி சூரியனை கடந்த சந்திரன் குருவினுடன் சேரும்போது... குரு தன் பலத்தை மீண்டும் அடைவார்.
அதே காலகட்டத்தில் கொடூர சம்பவங்களை மனதில் உண்டாக்கும் சனி செவ்வாய் சேர்க்கையும் மாறிப்போய் இருக்கும்.
புரட்டாசிவரையில் சூழல் இப்படியோ அல்லது இதிலிருந்து மிக மெதுவாக குறைந்து கொண்டோ தான் இருக்கும் என்பதால்... இதற்கு மேல் என்ன ஆகும் என பயம் கொள்ள தேவையில்லை. எனினும் கன்னியில் இராகுவை தொட்ட குரு பிரவேசம் திருமணமாகாத பெண்களுக்கு பலவித சங்கடங்களை தரும் என்பதால் சில காலம் ஜாக்கிறதை சர்வ ஜாக்கிரதை யாக இருப்பது நலம் பயக்கும்.
இறைவனை சரண் புகுவீர்....
நல்லது நடக்கட்டும்.