24 September 2014

மகம் ( makam ) நட்சத்திரப் பொதுப் பலன்கள்


நீங்கள் இந்த மகம் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல செல்வந்தராகவும், புத்திசாலியாகவும், பிறரிடம் கருணை காட்டி உதவி செய்பவராகவும் இருப்பீர்கள்.
நீங்கள் வியாபாரத்தில் வெற்றி காண்பதுடன், சுகபோகமான வாழ்க்கையொன்றும் நடத்துவீர்கள். உங்களுக்கு பல பணியாட்கள் இருப்பார்கள் தெய்வகாரியங்களில் உங்களுக்கு ஈடுபாடு இருக்கும். உங்கள் மனைவியுடன் சுமுகமான உறவுகளை கொண்டிருப்பீர்கள். உங்கள் பெற்றோர்களிடம், கடமைப் பற்றுடன் நடந்து கொண்டாலும், எதிலும் கண்டிப்பாக இருக்கக்கூடிய, ஒரு கடும் சுபாவம், உங்களிடம் குடிகொண்டிருக்கும். உங்கள் எண்ணமும் செயலும், தெளிவானதாய், திட்டவட்டமானதாக அமைந்திருக்கும்.

No comments:

Post a Comment