குழந்தைக்கு பெயர் அதிர்ஷ்டமாக அமைப்பதன் பயன் என்ன?
இன்றைய குழந்தைகளுக்கு பெற்றோர் செய்ய வேண்டிய மிகப்பெரிய கடமை, பொறுப்பு, அவர்களுடைய பிள்ளைகளுக்கு சரியான பெயரை அமைத்துக் கொடுப்பதாகும். இன்றைய குழந்தைகள் நாளைய மன்னர்கள் என்று வாயளவில் கூறினால் போதுமா! அவர்கள் எந்த துறையில் நுழைகிறாரோ அதில் மன்னராக விளங்கக்கூடிய அளவிற்கு உயர்த்த வேண்டியது பெற்றோர்களின் கடமையல்லவா.
நல்ல சிந்தனையும், நல்ல செயல்பாடுகளும் மிக்க குழந்தையாய் ஆக வேண்டுமெனில் பெயர் சிறப்பாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். இதைத்தான் வள்ளுவர் எண்ணும் எழுத்தும் அதாவது, தலையெழுத்தாகிய பெயர் எண்ணோடு சார்ந்து சிறப்பாக இருந்தால் இருகண்கள் எப்படி ஒளி பொருந்தியிருக்குமோ அதுபோல் வாழ்க்கையும் ஒளி பொருந்தியிருக்கும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே எண்ணின் வலிமையும், அதன் முக்கியத்துவத்தையும் அறிந்து, தெரிந்து குறள் வடித்துள்ளார்.
இதை நாமும் அறிந்து எண்ணையும் எழுத்தையும் பொருந்தச் செய்து நம் குழந்தைகளுக்கு பெயரை அமைத்தோமானால் அவர்களது வாழ்க்கை இருகண்களைப் போல் ஒளி பொருந்தி சிறப்பாக இருக்கும். சிறு குழந்தையிலேயே எண் கணிதம் பார்த்து பெயரை அமைத்து கொள்வது என்பது பொருத்தமுள்ள கிரங்களின் வலிமையினை சேர்த்துக் கொள்வது போன்றதாகும். பிறந்த தேதி, விதி, எண், கிழமை, மாதம், பூதம் என்ற ஐந்தும் சேர்ந்து ஒரு காந்தத்தின் தன்மையை குறிக்கும்.
பெயர் சரியாக அமைந்தால் நீரோடு நீர் சேர்ந்தால் அதன் வலிமை அதிகமாகும், பெயர் சரியாக அமையாவிடில் நீருடன் எண்ணை சேர்ந்து வலிமை குறைவாக இருந்தாலும் எண்ணையே அதன் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். எண்கணிதம் மூலம் பெயரை திருத்தி வைப்பது என்பது நீரோடு நீர் சேரும்படி செய்வதாகும் இத்தகைய செயல்பாட்டால் உடல், மனம், உயிர், அறிவு, யாவற்றிற்கும் வலிமை அதிகமாகின்றது. ஊக்கம் அதிகப்படுத்தப்படுகிறது. பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
பெயர் ஒருவருக்கு சரியாக அமைந்தால் அவர்களுடைய இலக்கு அவர்களுக்கு தெரியும். அந்த இலக்கை சிறப்பாக அடைய முடியும். எந்தவிதமான ராஜநடையும் போட்டு நடந்து செல்வர். இல்லையேல் கல்லிலும், முள்ளிலும் வழி தெரியாமல் அலைந்து, திரிந்து செல்கின்ற பாதையை அறியாமல் துன்பப்பட்டு, வேதனைப்பட்டு இலக்கை அடையாமல் இடையிலேயே எதிர்பாராத விபத்து ஏற்படலாம். மனச்சோர்வில் வியாதிகளால் பீடிக்கப்படலாம். சொல்லவொண்ணா துயர்களை அடையலாம். ஏற்கனவே கூறியபடி ஒருவருடைய பிறந்ததேதி அவருடைய குணாதிசயத்தை நிர்ணயம் செய்யும் விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம், என்பது அவர் எவ்வளவு தூரம் பிரயாணம் செய்ய முடியும் என்பதை நிர்ணயம் செய்யும். பெயர் அவர் அந்த பிராயணத்தை எப்படி செய்கிறார் என்பதை நிர்ணயம் செய்யும். ஒருவர் நடந்து செல்வதாகவும், சைக்கிளில், மோட்டார் சைக்கிளில், ஆட்டோவில், காரில், ஏசி காரில் என எதில் வேண்டுமானாலும் பிரயாணத்தை கொள்ளலாம். எதில் பிரயாணம் செய்கிறோம் என்பதை பெயரே நிர்ணயம் செய்கிறது.
அதாவது ஒருவருடைய பெயர் சரியாக இல்லையெனில் அவர்களுடைய வாழ்க்கையாகிய பிரயாணத்தினுடைய பாதை தெரியாமல் கல்லிலும், முள்ளிலும், காட்டிலும், மேட்டிலும் அலைந்து திரிந்து அவர் இலக்கை அடையாமலேயே அதாவது எந்தவித சுகத்தையும் அனுபவிக்காமலேயே இருக்கும் நிலை ஏற்படும். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
பெயராகிய இனிசியல், பெயர், மொத்த எண், ஆகியவற்றை ஒன்றை ஒன்று சேர்த்து சிறப்பாக அமைத்து கொண்டோமானால் நமது வாழ்க்கையில் உயர்வதோடு இந்த நாட்டையும், உலகத்தையும் உயர்த்துகிறோம் என்பதை மறுக்க முடியாது. இத்தகைய வியத்தகு வாய்ப்பை உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் பயன்படுத்திக்கொள்வதே நமது உன்னத செயல்பாடு ஆகும். நம் வாழ்க்கையில் நன்மையை மட்டும் தரக்கூடிய எண்கணிதத்தை பயன்படுத்தி ஒளி பொருந்திய எதிர்காலத்தை பெற விளைவோம். விபரங்களுக்கு
No comments:
Post a Comment