நீங்கள் இந்த அசுவினி நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல புத்திசாலியாகவும், பலராலும், விரும்பி நேசிக்கப்பட்டவராகவும், செல்வந்தராகவும், நீங்கள் உங்கள் தொழிலில், பயிற்சி பெற்றவராக விளங்குவீர்கள்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன், நீங்கள் நல்ல உறவுகளைப் பராமரித்து வருவீர்கள். நீங்கள் நல்ல உடை உடுத்திடுவதிலும் ஆபரணங்களிலும் ஆசை கொண்டவர். நன்கு வளர்க்கப்பட்டவராகவும் விளங்குவீர்கள். அத்துடன் பிறருக்கு மரியாதை காட்டும் பண்பாடும் உண்மைபேசும் குணமும், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதான சுபாவமும் உங்களிடம் காணப்படும். உங்களுக்கு பருமனான உடல் கட்டிருந்தாலும், பலவீனமான கல்லீரல் இருக்கும். உங்களுடைய 20-வது வயதிலிருந்து, நீங்கள் நல்ல அதிருஷ்டசாலியாக இருப்பீர்கள்.
No comments:
Post a Comment