03 July 2014

பவளம் (CORAL)

பவளம் இதன் ஆதிக்க கிரகம்செவ்வாய் ஆகும். செவ்வாய் பகவானின் கதிர்களை ஆகர்ஷிக்கும் இரத்தினம் பவளம் ஆகும்.

        பவளம் என்பது கற்களின் வகை அல்ல. இது கடலில் வாழும் ஒருவித பூச்சியின் கழிவுகளால் ஆன அவற்றின் கூடே பவளபாறைகள் ஆகும். அவற்றினையே நாம் பவள ரத்தினமாக அணிந்து பலன் பெறுகிறோம். இது மான் கொம்பு மாதிரியான வடிவத்தில் உருவாகும். இதனை பவளக்கொடி என கூறுகின்றோம். சில இடங்களில் இது கடல் மட்டத்தினை விட மேலேயே வளர்ந்து விடுகிறது. நாளடைவில் அதன் பரப்பளவு அதிகரித்து தீவு போலவே காட்சியளிக்கிறது. இந்தியாவின் இலட்சத்தீவு, மற்றும் மாலத்தீவு ஆகியவை இது போல உண்டானவைகளே. விபரங்களுக்கு

எங்கு கிடைக்கும்.

     கடலில் வளர்கிறது என்றாலும், எல்லா நாடுகளிலும் கிடைப்பதில்லை. இந்தியா, ஆஸ்திரேலியா, மத்தியதரைகடல் நாடுகள், சிறந்த செந்நிற பவளங்கள் நேபில், கார்சிகா, ஆகிய இடங்களிலும் கடலில் இருந்து எடுக்கும்போது பவளம் சாதாரணமாகவே காணப்படும். அவைகள் வெட்டி பட்டை தீட்டும் போதுதான் அதன் அழகிய சிகப்பு வண்ணமும், பளபளப்பும் சிறப்பாக தெரியும். பட்டை தீட்டாத பவளங்களுக்கு விலையும் மிகவும் குறைவு ஆகும்

 பவளத்தின் இரசாயன குறியீடு CaCo3 ஆகும். பவளகற்களின் கடினத்தன்மை மிகவும் குறைவு (3 மட்டுமேமட்டுமே) ஆகவே எளிதில் தேயும் குணம் உண்டு. பொதுவாக பவளங்கள் நல்ல ஆழ்ந்த வண்ணமும், திரட்சியுடனும், பழுது இன்றியும் இருக்க வேண்டும் என இரத்தின பரீட்சை நூல் குறிப்பிடுகிறது.

பவளம் உண்டாக்கும் நன்மைகள்.
                         1.         உடலுக்கு வலிமை உண்டாகும்.
      2.       எதிரிகளுக்கு பயம் உண்டாகும்.
      3.       வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும்.
      4.       கோழைத்தனம் மாறி வீரம் உண்டாகும்.
      5.       திருஷ்டி தோஷங்களை போக்கும்.
      6.       விலங்குகள் மூலம் உண்டாகும் தீமைகள் வராது.
      7.       பால்வினை நோய்கள் நீங்கும்.
      8.       செவ்வாய் தோஷம் உடையவர்கள் பவளம் அணிந்து நிறைய நன்மைகள் அடையலாம்.
      9.       உடலின் உஷ்ண நோய்களை குறைக்கும்.

 பவளம் யார் அணியலாம்?
1.       மேஷம் விருட்சிகம் இவற்றை இராசி இலக்கினமாக கொண்டவர்கள்
2.       மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரக்காரர்கள்.
3.       கடக, சிம்மம், தனுசு, மீனம் ராசிக்காரர்கள்
4.       தற்போது செவ்வாய் திசை நடப்பவர்கள்.
5.       9, 18, 27, ம் ம் தேதிகளில் பிறந்தவர்கள்
6.       விதி எண் ஒன்பது வருபவர்கள் பவளம் அணிந்து மேற்கண்ட நன்மைகளை அடையலாம்.


விபரங்களுக்கு

No comments:

Post a Comment