செவ்வாயின் ஆதிகம் மிகுந்த இவர்களின் வாழ்க்கை, போராட்டம் நிறைந்த, சம நிலையில் இன்பமும், துன்பமும் கலந்ததாகவே இருக்கும். அதிகமாக சம்பாதிப்பதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்காது. இவர்கள் பலருடன் சேர்ந்து வாழவே விரும்புவார்கள்.
இவர்கள் வீண் காரியத்தில் நேரத்தை செலவிட மாட்டார்கள். மிகவும் சிக்கனமாக இருப்பார்கள். தற்பெருமை அற்றவர்கள். பொதுவாக இவர்கள் சுறுசுறுப்பானவர்கள். சுதந்திரமாக செயல் படுவதில் விருப்பம் உள்ளவர்கள். முன்கோபியான இவர்கள் எவரையும் தூக்கியெறிந்து பேசும் குணம் உள்ளவர்கள். மனதில் உள்ளதை பட்டென வெளிப்படையாக சொல்லி விடுவர். இவர்களில் பெரும்பாலோருக்கு ஆராய்ச்சி மனப்பான்மை இருக்கும். எந்த ஒருவேலையை செய்தாலும் .அதை சரிவர செய்வார்கள் செவ்வாய் பலமாக இருந்தால் இவர்கள் பொறியியல் துறையிலும் அறுவை சிகிச்சை நிபுணர்களாகவும் இருப்பர். இவர்களில் மிகுந்த மனோ பலம் உடையவர்கள் தமக்கென்று ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள் எந்த விதமான எதிர்ப்பு வந்தாலும் சமாளிக்கும் திறன் உடையவர்கள். பெண்களால் இவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புண்டு 2,11, 20, 29, 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள் இந்த எண் வரும்பெயரை தவிர்ப்பது நலம். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
No comments:
Post a Comment