பலருக்கும் பல விதமான யோசனைகளை அளிப்பதில் வல்லவர்கள், இவர்களில் அநேகம் பேர் ஒருவரின் கீழ் வேலை செய்வதையே விரும்புவார்கள். தனியாக தொழில் செய்வதில் அதிக ஈடுபாடு இருக்காது.
நேர்மையும், நாணயமும் உள்ளவர்களுக்கு பலரின் உதவி கிடைக்கும். இறை நம்பிக்கையும், நல்ல முறையில் வாழ்க்கையை அமைத்து கொண்டவர்களுக்கும் வாழ்வில் குறையேதும் இருக்காது. ஓவியம், இசை, சிற்பம் போன்றவைகளிலும் மற்றும் வழக்கறிஞர் வேலையிலும் இவர்களுக்கு நல்ல எதிர் காலம் உண்டு. மனோ திடத்துடன் செயல் பட்டால் பால் பண்ணை, விவசாயம், அழகு சாதனப் பொருட்கள் போன்ற தொழில்களில் நன்மை உண்டு. தேவையில்லாத விவாதங்களையும் குறைத்துக் கொண்டால் நன்மை பயக்கும். என்னதான் உதவி செய்தாலும் மற்றவர்கள் இவர்கள் மீது வெறுப்பையே காட்டுவார்கள். ஆகவே இவர்கள் வீண் சந்தேகத்தை கை விடுதல் நல்லது. இவர்களில் பெரும் பாலோருக்கு சீக்கிரமே தொந்தி ஏற்பட்டு விடும். இளைத்துக் காணப் படுபவர்களுக்கு சூடு தொடர்பான நோய் உண்டாகும் வாய்ப்பு உண்டு. நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. உடல் உழைப்பு குறைவே இதற்குக் காரணம்.
பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
No comments:
Post a Comment