7ம் எண்ணுக்கு உரிய கோள் கேது. உடல் பலத்தை விட மனோ பலம் அதிகம். எதிர் காலத்தைப் பற்றிய சிந்தனை அதிகம் இருக்கும்.
எவரையும் பின் பற்றும் குணம் கிடையாது. எதிலும் தன் விருப்பப்படியே செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களின் சொல்லுக்கு பிறர் கட்டுப் படுவார்கள். இவர்களில் பெரும் பாலோர் நல்ல உழைப்பாளிகளாக இருப்பார்கள். வேலையில் அதிக நேரம் ஈடுபடுவார்கள். பெரும் பாலும் முன் கோபக்காரர்கள். எந்த துன்பம் வந்தாலும் அதை மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ளும் குணமுடையவர்கள். எக்காரணத்தைக் கொண்டும் பிறரிடம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்களால் எந்தக் கலைகளையும் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும். எதிலும் தனித் தன்மை கொண்டவர்கள். இவர்கள் நல்ல வியாபாரிகளாக இருப்பார்கள். இவர்களில் பெரும் பாலோருக்கு மனதிற்கு ஏற்ற மனைவி அமைவதில்லை. ஆன்மீகத் துறையில் அதிக அளவில் நாட்டம் ஏற்படும். பெயரினை நிச்சயம் சரிபார்த்துக்கொள்வது நன்மையினை அளிக்கும். மலச் சிக்கல்தான் இவர்கள் முதல் எதிரி. அதிக அளவில் வேர்த்தல், தோல் நோய், வாதத் தொடர்பான நோய்கள் வர வாய்ப்புண்டு. கீரை வகைகளை அதிக அளவில் சாப்பிட்டு நோய்வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment