இந்த எண்ணின் ஆதிக்கக் கோள் இராகு ஆகும். கண்ணியமானவர்களாக இருப்பார்கள். ஆனால் தனிப் பட்டு வாழ நினைப்பார்கள். மற்றவர்களுடன் எந்தக் காரியத்திலும் சேர மனமில்லாதவர்களாக இருப்பார்கள். மிகவும் இரக்கம் உள்ளவர்கள்.
இவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை பிடிக்காது. பணிவுடன் நடந்து கொள்வார்கள். கல்வியில் மேலே போக முடியா விட்டாலும் தேவையான கல்வி அறிவு இருக்கும். கடினமாக உழைக்க மனமில்லாதவர்கள். அரசாங்கத்தில் இவர்களுக்கு வேலை கிடைப்பது சிரமம். தனியார் துறையில் வேலை செய்வார்கள். தொழில் இதுதான் என்று கூற முடியாது. எந்த தொழிலாக இருந்தாலும் அதில் விரைவிலேயே தேர்ச்சி பெற்று விடுவார்கள். இவர்களுக்கு குடல் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. மிகவும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். அதே சமயம் மிகவும் உணர்ச்சி வசப் படக் கூடியவர்கள். மிகவும் சிரமத்துடனேயே இவர்கள் பொருள் ஈட்ட வேண்டியது இருக்கும். ஆனால் கிடைத்த பணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் செலவுசெய்வார்கள். நல்ல பேச்சாளர்கள். எழுத்தாலும், பேச்சாலும் சமூகத்தை சீர் திருத்த பார்ப்பார்கள். எப்போதும் மற்றவர்கள் பேசும் வார்த்தைக்கு எதிர் வார்த்தையே பேசுவார்கள். எவரையும் நன்கு தீர விசாரித்த பின்பே நம்பும் தன்மை கொண்டவர்கள். அதிக நண்பர்கள் இவர்களுக்கு இருக்க மாட்டார்கள். அதிக அளவு புத்தி கூர்மை உள்ளவர்கள். எனவே வாழ்க்கையை தீவிரமாக ஆராயும் தன்மை கொண்டவர்கள். எல்லா வற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள.ஒரு செயலில் ஈடு பட்டால் அதை முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். அதிக அளவில் பணம்சம்பாதிப்பார்கள். ஆனால்சேமிக்கும் பழக்கம் இவர்களிடம் இல்லை கையில் பணம் இல்லா விட்டாலும் மிக்க மகிழ்ச்சி உடனேயேஇருப்பார்கள். பொறாமை இவர்களிடம் கிடையாது. சிறு வயதில் ஓடி விளையாடுவதிலும், சுகமானவாழ்க்கையிலும்,முன்னேற வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். ஆனால் வயது ஆக ஆக வேதாந்தஎண்ணங்கள் மனதில் தோன்றி அதில் ஈடுபடுவார்கள்.
No comments:
Post a Comment