31 July 2014

விதிஎண் 19-ல் பிறந்தவர்களே!!!


சூரியனின் ஆதிக்கம் பெற்ற இவர்கள், பொது நலத் தொண்டு செய்வதில் ஆர்வமிக்கவர்களாக இருப்பார்கள். பிரதி பலனை பாராது பிறருக்கு நன்மை செய்வார்கள். வசதி இருந்தாலும் எளிமையாகவே வாழ விருப்பமுடையவர்கள்.
இவர்களிடம் உதவி பெற்றவர்களே இவர் மீது குறை கூறினாலும் அதை பொருட் படுத்த மாட்டார்கள். இவர்களுக்கு கேளிக்கைளில் விருப்பம் இருக்காது. ஒரு காரியம் தொடங்கினால் அதை முடிக்கும் வரையில் வேறு எதிலும் மனம் செல்லாது. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று நினைப்பவர்கள் ஆதலால் வாழ்க்கையில் அதிகமாக முன்னேற முடியாத நிலையில் இருப்பார்கள். இவர்கள் தொழில் முறை எதுவானாலும் அதில் அவர்கள் முன்னேற்றம் அடைய 30 வயது செல்ல வேண்டி வரும். அது வரை பல இடம் மாறவும், பல தொழில் செய்யக் கூடிய நிலையும் தான் ஏற்படும். பித்தத் தொடர்பான கோளாறு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கும். பித்த மயக்கம், வாந்தி, கண் பார்வை மங்கல்போன்ற கோளாறுகள் ஏற்படும். பித்தம் விளைவிக்கக் கூடிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உணவில் இஞ்சி,எலுமிச்சம் பழம், நாரத்தங்காய், சீரகம், நெல்லிக்காய், வெந்தயம் போன்ற வற்றை அதிகமாகசேர்க்க வேண்டும் பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

No comments:

Post a Comment