15-ம் எண்ணின் ஆதிக்கக் கோள் வெள்ளி (சுக்கிரன்) ஆகும். பேச்சுத் திறமை பெற்றவர்களாக இருப்பார்கள். எந்த தொழில் முறையிலும் நல்ல தேர்ச்சி பெறக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் மேற்கொள்ளும் எந்த காரியத்திலும் நல்லவருமானம் கிடைக்கும்.
தொட்டது துலங்கும். பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். கல்வியில் அவ்வளவாக தேர்ச்சி இல்லா விட்டாலுங் கூட நல்லயோகசாலிகளாக விளங்குவார்கள். வேதாந்தத்தில் ஈடுபாடு இருக்கும்.. அதிகாரம், அடக்கி ஆளுதல், பிறரை மகிழ்வித்து பொருளீட்டும் கலைத்துறை போன்ற வற்றில் இவர்களைக் காணலாம்.பொதுவாக நடுத்தரஉயரம் உடையவர்கள். நன்கு அமைந்த உடல் வாகு கொண்டவர்கள். முதுமையிலும் இளமையாகத் தோன்றுவார்கள். எப்போதும் இன்பமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அழகை ரசிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். கலைகளில் அதிக ஆர்வம் உடையவர்கள். ஒருவிதமான காந்தகச்தி உடையவர்கள்.அதனால் மற்றவர்களை தன்பக்கம் இழுக்கும் வல்லமை உள்ளவர்கள். தன்பால் அன்பு கொண்டவர்களுக்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். பிறர்நன்றாக வாழ்வதைக் கண்டு பொறாமை கொள்ள மாட்டார்கள். எந்த காரியத்தில் ஈடு பட்டாலும் நன்கு சிந்தித்த பின்பே அதில் இறங்குவார்கள். விடாமுயற்சி, சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவர்கள். எனவே, இவர்கள் செல்வத்தோடும், செல்வாக்கோடும் விளங்குவார்கள். புகழ் பெற்ற கலைஞர்கள் பலர் இந்த எண்ணில் இருப்பதைக் காணலாம். எல்லா வகையான இன்பங்களையும் அனுபவிக்கும் குணமுடையவர்கள். தனக்கு ஏற்ப்படும் பிரச்சனைகளை தீர்க்க பில்லி சூனிய மந்திரவாதிகளை தேடி செல்லும் எண்ணம் உண்டாகும்.
No comments:
Post a Comment