31 July 2014

விதிஎண் 21-ல் பிறந்தவர்களே!!!


குரு பகவானின் பரிபூரண அருள் பெற்ற இவர்களின் பேச்சு வன்மை காரணமாக இவர்கள் பேச்சில் பலர் மயங்கி விடுவார்கள். இதன் காரணமாகவே இவர்களுக்கு பல நண்பர்கள் இருப்பார்கள். காலத்திற்கு ஏற்றபடி வாழ்க்கையை அமைத்து கொள்வார்கள்.
சமய சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து பிறரிடம் நல்ல பெயரையும், புகழையும் பெறக் கூடியவர்களாக இருப்பார்கள். மூட நம்பிக்கையில் ஈடுபட மாட்டார்கள். வீணாக நேரத்தை போக்குதலையோ , அல்லது சோம்பேறி தனத்தையோ இவர்களிடம் காண முடியாது. நிமிர்ந்த நடையும், கம்பீரமான தோற்றமும் உடையவர்கள். இயல்பாகவே அடக்கம், பொறுமை, பெரியவர்களுக்குக் கீழ்படிதல் போன்ற குணங்கள் அமையப் பெற்றவர்கள். நாணயத்தையும், கௌரவத்தையும், நல்ல பெயரையும் உயிராகக் கருதக் கூடியவர்கள். அதிக கூர்மையான அறிவும், உழைப்பும் இயற்கையாகவே அமையப் பெற்றவர்கள் ஆதலால் சிறு வயதிலேயே புத்திசாலி என்று எல்லோராலும் பாராட்டப் பெறுவார்கள். சிறு வயது முதலே பொறுப்பை உணர்ந்து போற்றும் படியாக நடந்து கொள்ளுவார்கள். பேச்சில் கண்ணியமும், அதே வேளையில் கண்டிப்பும் இருக்கும். நல்ல செயல்களும், பழக்கமும் உடையவர்கள். பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்கள். எந்த ஒரு செயலையும் நியாயமான முறையிலேயே செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதிக இறை நம்பிக்கை உடையவர்கள். எந்த நிலையில் இருந்தாலும் உண்மையுடனும், திருப்தியுடனும் செயலாற்று வார்கள்.  இல்லற வாழ்க்கை சிறப்பாகவே அமையும். இவர்களுக்கு தோல் தொடர்பான நோய்கள் ஏற்படும். நரம்பு தொடர்பான நோய்கள், வாத தொடர்பான நோய்கள் இவர்களை துன்பப் படுத்தும். உடற் பயிற்சியின் மூலமும், குறிப்பிட்ட நேரத்தில் உணவருந்தும் பழக்கமும் அமைத்துக் கொண்டால் ஓரளவு நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். இவர்கள் வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும், பேராசியர்களாகவும், வங்கியில் பணி புரிபவர்களாகவும் இருக்கலாம்.
பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

No comments:

Post a Comment