31 July 2014

விதிஎண் 17-ல் பிறந்தவர்களே!!!


சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற இவர்கள், எப்போதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருப்பர். சனி கோளுக்கான குணாதிசயங்கள் இவர்களிடத்தில் காணப்படும். எதிலும் நிதானமாகவே இருப்பர். பொதுவாக மற்றவர்கள் இவர்களை தவறாகவே எடை போடுவர்.
எனவே இவர்கள் தனிமையையே விரும்புவர். பிறரை வஞ்சிக்க மாட்டார்கள். பிறர் மனம் நோகப் பேச மாட்டார்கள். ஒருவரின் கீழ்வேலை செய்வது இவர்களுக்குப் பிடிக்காது. சொந்தத் தொழில் புரியலாம். குறிப்பாக, மின்சாரத் தொடர்பான பொருட்கள், திரை உலகத் தொடர்பான பொருட்கள் மற்றும் இராணுவத் தொடர்பான  தயாரிக்கும் பணியில் ஈடுபடலாம். 27 வயதுக்கு மேல்வாழ்க்கை மேன்மை அடையும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு  இருக்காது. அப்படியே ஈடுபட்டாலும் அதில் ஒரு வெறித்தனம் இருக்கும். இவர்கள் இரும்பு நிலக்கரி கட்டிட ஒப்பந்தம் போன்ற தொழில்களில் ஈடுபட்டால் இலாபமடைவர்.வாழ்க்கையின் முற்பகுதியில் பிரச்சினைகள் அதிகமிருக்கும் ஆனால் பிற்பகுதியில் பிரச்சினைகள் தீர்ந்து சாந்தமான வாழ்க்கை அமையும். நீலக்கல் நன்மை தரும் தெற்கு தென்கிழக்கு திசைகள் நன்மை தரும். 1 3 5 6  எண்கள்நன்மை தரும் உங்களுக்குரிய கடவுள் திருவண்ணாமலை ஈசன் பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

No comments:

Post a Comment