31 July 2014

விதிஎண் 16-ல் பிறந்தவர்களே!!!

கேதுவின் ஆதிக்கம் பெற்ற இவர்கள், சிறிது தன்னம்பிக்கை மிகுந்து காணப் படும் போது அதிக அளவில் பேசுவார்கள். சில நேரங்களில் ஊமையோ என எண்ணும் வகையில் மௌனம் சாதிப்பார்கள்.
பெரும் பாலும் முன் கோபக்காரர்கள். இதனால் நல்ல நண்பர்கள் அமைவது கடினம். எந்த துன்பம் வந்தாலும் அதை மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ளும் குணமுடையவர்கள். எக்காரணத்தைக் கொண்டும் பிறரிடம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்களால் எந்தக் கலைகளையும் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும். எதிலும் தனித் தன்மை கொண்டவர்கள். எதிலும் புதுமை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். துன்பப் படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் நம்பிக்கைக் குரியவர்கள். நம்பியவர்களை கை விட மாட்டார்கள். தங்கள் குடும்பத்தினரை அதிக அளவில் நேசிக்கும் குணம் உடையவர்கள். அவர்களுடைய நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அதிகமாக ஈடுபடுவார்கள்.  இசை, நடனம் போன்ற வற்றில் இவர்களுக்கு அதிக ஈடுபாடு இருக்கும். இவர்கள் நல்ல வியாபாரிகளாக இருப்பார்கள். நீர் தொடர்புடைய தொழில்கள் இலாபம் தரும். இவர்களில் பெயர் சரியாக அமையாத, பெரும் பாலோருக்கு மனதிற்கு ஏற்ற மனைவி அமைவதில்லை. குடும்ப வாழ்க்கையும் அமைதி தரும் என்று சொல்ல முடியாது. குடும்பவாழ்க்கையை வெறுக்கும் நிலையும் ஏற்படலாம். அதனால் ஆன்மீகத் துறையில் அதிக அளவில் நாட்டம் ஏற்படும். மலச் சிக்கல்தான் இவர்கள் முதல் எதிரி. அதிக அளவில் வேர்த்தல், தோல் நோய், வாதத்தொடர்பான நோய்கள் வர வாய்ப்புண்டு. கீரை வகைகளை அதிக அளவில் சாப்பிட்டு நோய்வராமல் தடுத்துக் கொள்ளலாம்.  கலையிலும், காதலிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். அமைதியும், சாந்தமும் உடையவர்கள். புத்திக் கூர்மையும், அதிக அளவு ரசிப்புத் தன்மையும் கொண்டவர்கள். தெய்வீக வழி பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். இவர்களின் குடும்ப வாழ்க்கை சிரமமானதாக இருக்கும்.  சிறு வயதிலேயே புகழ் பெற்ற நடிகர்களாகவும், கவிஞர்களாகவும், கலைஞர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. தவறான காதல் விவகாரங்களில் ஈடு படாமல் இருந்தால் வாழ்க்கை சிறப்படையும். இந்த  எண்ணில் பிறந்தவர்கள் வணக்கத்திற்குரிய மனிதர்களாக விளங்குகின்றனர். நீதிபதிகள், மதத் தலைவர்கள், ஆணையர்கள் இந்த எண்ணில் அதிகம் காணலாம். இந்த எண்காரர்களுக்கு வெளிர் சிவப்பும், வெளிர் நீலமும் நன்மை தரும். வைடூரியம் உகந்த கல்லாகும் பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

No comments:

Post a Comment