25 July 2014

விதிஎண் 5ல் பிறந்தவர்களே!!!


     இந்த எண்ணின் ஆதிக்கக் கோள் புதன். வசீகரமான முகமும், எவரையும் ஈர்க்கும் காந்தக்கண்களும் கொண்டவர்கள்.
எதையும் மனதில் வைத்துக் கொள்ளத் தெரியாதவர்கள். கபடு , சூது , வாது அறியாதவர்களாக இருப்பார்கள். ரகசியத்தை காப்பாற்ற அதரியாதவர்கள். இரக்க குணம் உள்ளவர்கள். பிறர் மனம் நோகும்படி எதையும் செய்ய மாட்டார்கள். பண விவகாரத்தில் கெட்டி. பிறருக்கு கடன் கொடுக்கத் தயங்குவார்கள். எதிரும் யோசித்து செலவு செய்வார்கள். இவர்கள் பிறரிடத்தில் எளிதில் பழக மாட்டார்கள். எனவே, இவர்களுக்கு நண்பர்கள் குறைவு. வெளி வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதனால் உற்சாகம் அடைவார்கள். இவர்கள் உடல் வலிமையை விட மனவலிமை அதிகம் கொண்டவர்கள். கடுமையாக சிந்திக்கக் கூடியவர்கள். ஆதலால் மனம்அலை பாய்ந்து அமைதி இழக்கும். இதனால் நரம்புத் தளர்ச்சி, வாதம், மூளை தளர்ச்சி போன்ற நரம்புத் தொடர்பான நோய்கள் ஏற்படும்.

No comments:

Post a Comment