நீலம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு நிறம் என்றால் மிகையல்ல. இறைவனை கூட நாம் நீலகண்டன் எனவும் கிருஷ்ண பகவானை நீலவண்ணன் எனவும் அழைக்கிறோம். நீலமணிகள் எப்போதும் விரும்பி அணியும் ரத்தினமாக உள்ளது. ஈஸ்வரன் என்ற பட்டம் பெற்ற சனிபகவானுக்கு உரிய ஆற்றலை கொண்ட ரத்தினமே நீலமாகும். இதுவும் விலை உயர்ந்த இரத்தினமாகும். நீல கற்கள் இறைவனின் சக்தியினை ஈர்கக்கூடியது. பைபிளில் இறைவன் மோசஸ் அவர்களுக்கு 10 கட்டளைகளையும் நீலக்கல்லிலே செதுக்கி வைத்ததாக குறிக்கப்படுகிறது.
நீல ரத்தினங்கள் இரண்டு வகைப்படும். விபரங்களுக்கு
1.இந்திர நீலம்
இந்தவகை கற்கள், அழகான வான் நீல நிறம் கொண்டது. உட்புறம் கருமையான மேகம் போன்ற ஒளி உடையது.
2.ஜலநீலம்
இந்தவகை கற்கள், வெளிப்புறம் நீலமாக நிறம் வீசினாலும் உட்புறம் வெண்மையாக காணப்படும்.
நீலக்கற்கள் எங்கு கிடைக்கிறது....
பெருபான்மையான நீலக்கற்கள் ஆற்றங்கரைகளில் சரளை, கூலாங்கல்களுடன் கலந்தே கிடைக்கிறது. இலங்கையில்தான் அதிக நீல கற்கள் கிடைக்கிறது. இந்தியா பர்மா ஆஸ்திரேலியா பிரேசில் கென்யா நாடுகளிலும் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் சின்னதாராபுரத்தில் நீலம் கிடைக்கிறது.
உலகின் பெரிய நீல கற்கள் 916ct நிஜாம் மன்னரின் ஊழியரிடம் உள்ளது.
இதன் இரசாயன குறியீடு AI2O3 ஆகும்.
தரமான நீலக்கற்கள் அணிவதால் உண்டாகும் பலன்கள்
நீலக்கற்கள் எங்கு கிடைக்கிறது....
பெருபான்மையான நீலக்கற்கள் ஆற்றங்கரைகளில் சரளை, கூலாங்கல்களுடன் கலந்தே கிடைக்கிறது. இலங்கையில்தான் அதிக நீல கற்கள் கிடைக்கிறது. இந்தியா பர்மா ஆஸ்திரேலியா பிரேசில் கென்யா நாடுகளிலும் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் சின்னதாராபுரத்தில் நீலம் கிடைக்கிறது.
உலகின் பெரிய நீல கற்கள் 916ct நிஜாம் மன்னரின் ஊழியரிடம் உள்ளது.
இதன் இரசாயன குறியீடு AI2O3 ஆகும்.
தரமான நீலக்கற்கள் அணிவதால் உண்டாகும் பலன்கள்
1. வாழ்நாள் அதிகரிக்கும்
2. வழக்குகளில் வெற்றியுண்டாகும்.
3. பூமியின் மூலமாக லாபம் உண்டாகும்.
4. பித்த நோய்கள் குறையும்.
5. எதிர்பாராத ஆபத்துக்களை தடுக்கும்.
6. மனோ தைரியம் அதிகரிக்கும்.
7. பிடிப்பு நோய்கள் குறையும்.
8. மன அமைதியும், ஆரோக்கியமும் ஏற்ப்படும்.
9. தோல்நோய்களை கட்டுப்படுத்தும்.
10. நுண் அறிவு மேம்படும்.
11. கல்லீரல் மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். விபரங்களுக்கு
நீல கற்களை யார் அணியலாம்?
- மகரம் கும்பம் இவற்றை இராசி அல்லது இலக்கினமாக கொண்டவர்கள்.
- பூசம் அனுஷம் உத்திரட்டாதி நட்சத்திர காரர்கள்.
- ஜாதகப்படி சனிதிசை நடப்பவர்கள்.
- ஏழரைச்சனி நடப்பவர்கள்.
- ரிசபம் துலாம் இலக்கின ராசிக்காரர்கள் சனி பலவீனமாக இருந்தால் அணியலாம்.
- ஆங்கில தேதியில் 8, 17, 26, ம் தேதியில் பிறந்தவர்கள்.
- தேதி மாதம் வருடம் கூட்ட 8 வருபவர்கள் நீலம் அணிந்து என்னில நற்பலன்களை அடையலாம்.
No comments:
Post a Comment