31 July 2014

விதிஎண் 14-ல் பிறந்தவர்களே!!!


இந்த எண்ணின் ஆதிக்கக் கோள் புதன். இவர்களில் பெரும் பாலோர் உயரமாக இருப்பார்கள். வசீகரமான முகமும், எவரையும் ஈர்க்கும் காந்தக்கண்களும் கொண்டவர்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளத் தெரியாதவர்கள். மனதில் தோன்றுவதை உடனே வெளியே பேசும் தன்மை கொண்டவர்கள். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
வேகமாக சிந்திக்கும் ஆற்றல் படைத்தவர்கள். அதே போன்று வேகமாக செயல் படத் துடிக்கும் எண்ணம் கொண்டவர்கள். எதிலும் வேகமே இவர்களின் லட்சியம். எவ்வளவு பெரிய காரியமானாலும் துணிந்து செயல் படுவார்கள். மற்றவர்களால் முடியாததை தன்னால் செய்ய முடியும் என்பதே இவர்களது எண்ணம். புதிது புதிதாக எதையாவது செய்து பேரும், புகழும் பெற வேண்டும் என்பதே இவர்கள் லட்சியம். முடிந்தவரையில்அடுத்தவர்களின் உதவியை பெற மாட்டார்கள். தானாகவே எதையும் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.  இவர்களால் அதிக அளவில் சம்பாதிக்க முடியும். அரசியல், விஞ்ஞானம், ஆன்மீகம் போன்றவற்றில் இவர்களதுபங்கு அதிகம் இருப்பதைக் காணலாம். அறிவன் ஆதிக்கம் இருப்பதால் கணிதம், சட்டம் போன்ற வற்றிலும் பிரகாசிப்பார்கள்.கண்டதும் காதல் எனும் வகையை சேர்ந்தவர்கள். எனவே அவசரமாக திருமணம் செய்து கொண்டு பின்னால் வருந்து பவர்களும் உண்டு. நன்கு யோசித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் மண வாழ்க்கை சிறப்பாக இருக்காது. கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்புண்டு. சமயங்களில் அதுவே பெரிய சண்டையாக மாறி விடும். கடுமையாக சிந்திக்கக் கூடியவர்கள். ஆதலால் மனம்அலை பாய்ந்து அமைதி இழக்கும். இதனால் நரம்புத் தனர்ச்சி, வாதம், மூளை தளர்ச்சி போன்ற நரம்புத் தொடர்பான நோய்கள் ஏற்படும். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

No comments:

Post a Comment