நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும் , கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் விளங்குவார்கள். ஆனால், மன சாட்சிக்கு விரோதமாக எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டார்கள்.
சோம்பல் குணமும் , எதிலும் ஒரு அலட்சியப் போக்கும் இருக்கும். எப்படி பட்டவராக இருந்தாலும் தந்திரமாகப் பேசி தம் காரியத்தை முடித்து கொள்வார்கள். இந்த 8 எண்ணுக்குரிய கோள் சனி எனவே சனி கோளுக்கான குணாதிசயங்கள் இவர்களிடத்தில்காணப்படும். எப்போதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருப்பர். பொதுவாக மற்றவர்கள் இவர்களை தவறாகவே எடை போடுவர்.எனவே இவர்கள் தனிமையையே விரும்புவர்.எதிலும் நிதானமாகவே இருப்பர்.ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்காது. அப்படியே ஈடுபட்டாலும் அதில் ஒரு வெறித்தனம் இருக்கும். பெயர் சரியாக அமைந்தவர்கள் மட்டும் மிகவும் உயர்ந்த நிலையினை அடைந்து, ஆனந்த வாழ்வினை வாழ்கிறார்கள்.
No comments:
Post a Comment