29 July 2014

விதிஎண் 12-ல் பிறந்தவர்களே!!!


இந்த எண்ணின் ஆதிக்கக் கோள் குரு ஆகும். குரு மிகவும் வலிமை வாய்ந்த கோளாகக் கருதப் படுகிறது. எந்த காரியத்திலும் வீரத்தோடு விளங்குவார்கள். நேர்மையோடு நடப்பார்கள். பிறரை வஞ்சிக்கவோ, மோசம் செய்யவோ நினைக்க மாட்டார்கள்.
ஆடம்பர வாழ்க்கையை விரும்புவார்கள். ஏழைகளுக்கு உதவி செய்வார்கள். கச்சேரி, நாடகம் போன்றவைகளுக்கு அதிகம் செலவு செய்வார்கள். இயல்பாகவே அடக்கம், பொறுமை, பெரியவர்களுக்குக் கீழ்படிதல் போன்ற குணங்கள் அமையப் பெற்றவர்கள். நாணயத்தையும், கௌரவத்தையும், நல்ல பெயரையும் உயிராகக் கருதக் கூடியவர்கள். அதிக கூர்மையான அறிவும், உழைப்பும் இயற்கையாகவே அமையப் பெற்றவர்கள் ஆதலால் சிறு வயதிலேயே புத்திசாலி என்று எல்லோராலும் பாராட்டப் பெறுவார்கள். சிறு வயது முதலே பொறுப்பை உணர்ந்து போற்றும் படியாக நடந்து கொள்ளுவார்கள். பேச்சில் கண்ணியமும், அதே வேளையில் கண்டிப்பும் இருக்கும். நல்ல செயல்களும், பழக்கமும் உடையவர்கள். பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்கள். ஆனால் இவர்கள் பிறரிடம் உதவி கேட்க மாட்டார்கள். இவர்கள் கடினமான உழைப்பாளிகள். கல் மனம் போன்று தோன்றினாலும் உண்மையிலேயே மென்மையான உள்ளம் கொண்டவர்கள். எந்த ஒரு செயலையும் நியாயமான முறையிலேயே செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதிக இறை நம்பிக்கை உடையவர்கள். தம் வேலைகளை விட மற்றவர்களின் வேலைகளை செய்வதில் அதிக அக்கறை உடையவர்கள். எனவே பொது காரியங்களில் இவர்களை அதிகம் காணலாம். அளவுக்கு மிஞ்சிய ஆசை கொள்ள மாட்டார்கள். எந்த நிலையில் இருந்தாலும் உண்மையுடனும், திருப்தியுடனும் செயலாற்று வார்கள். தன்னம்பிக்கை உடையவர்கள். பணத்துக்காக எந்த ஒரு வேலையையும் செய்ய மாட்டார்கள்.

No comments:

Post a Comment