காலசர்ப்ப தோசம் எப்போது யோகமாக மாற ஆரம்பிக்கும்?
தான் பிறந்த போது நடக்கும் புத்தியில் இருந்து 27புத்திகள் முடிந்த பின்னர் காலசர்ப்ப தோசம் யோகமாக மாறுகிறது...
உதாரணமாக...
அசுவினியில் பிறந்த ஜாதகர் கேது திசையில் குரு புத்தியில் பிறந்திருக்க, கேதுவில்
குரு சனி புதன் என மூன்று புத்திகளும்
அதன் அடுத்த திசை சுக்கிரனில் ஒன்பது புத்தி
சூரியனில் ஒன்பது புத்திகள்
சந்திரன் திசையில் ஆறாவது புத்தியுடன் புதன் புத்தியுடன் காலசர்ப தோசம் முடிந்து அதன் பின் யோகமாக செயல்படும்...
அந்த 28வது புத்தி இராகு கேது புத்தியாகவோ அல்லது திசையாகவோ இருக்க அதுவும் முடிய வேண்டும் அந்த திசை புத்தி முடிந்த பின்பு தான் காலசர்பம் கடுமை குறையும்...
சிலருக்கு 28வது புத்தியாக இராகு திசை இராகு புத்தி வரும்படி கூட இருக்கும்.... அவர்கள் இன்னும் 18 ஆண்டு காத்திருக்க வேண்டியுள்ளது.
ஜோதிட ஆலோசனைகளுக்கும்
பெயர்மாற்றம் மூலம் வளம் காணவும் அனுகுங்கள்.
பெயர்மாற்றம் மூலம் வளம் காணவும் அனுகுங்கள்.
No comments:
Post a Comment