02 January 2017

1-6 காம்பினேசன்

*எண்கணிதம்- 1-6*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
1, 10, 19, 28 ஆக இருந்து
விதி எண்ணாக
6 வரும் நண்பர்களே
நீங்கள் 1-6 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.

(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
விளையும் பயிர் முளையிலே தெரியும்
என்பதற்கு இணங்க சிறு வயதில் இருந்தே
புத்திசாலிதனம்... பெரிதாக பேசுதல்
உயர்ந்த இடத்தில் இருக்க விரும்புதல் ஆகியவைகள் குணங்களாகும்.
பெயரினை பொருத்து எதில் தலைவர்களாவார் என்பது பின்னாளில் நிர்ணயம் ஆகும்.
மிக வேகமான செயல்படும் நிலையினையும்
கௌரவமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும்
கொண்ட இவர்கள் வாழ்க்கையின் உயர்மட்டத்திற்க்கு விரைவில்
சென்று விடுவார்கள். ஒருவேளை
அலங்கார வார்த்தை ஜாலத்தினால்
உயர்ந்தால் உயர்ந்த வேகத்தில்
கீழேயும் வருவார்கள். அதனால்
தனது புத்திசாலி தனத்தினை
அறிவாக மாற்ற முயலவேண்டும்.
*தொழில்*
ஆயத்த ஆடை
அலங்காரதுறை
மல்டி மார்கெடிங்
திருமண அமைப்பகம்
வெள்ளி பொருள் விற்ப்பனை
ரத்தின வியாபாரம்
வாகனம், இவைகளை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
புத்திசாலித்தனத்தினை தமாசான பேச்சாக மாற்றாமல் தொழிலில் உபயோகிக்கும் போது உயர்வடையலாம்... மாணிக்கம், வைரம் அதிர்ஷ்ட கற்க்களாகும். சிவன் விஷ்ணு அதிர்ஷ்ட வழிபாட்டு தெய்வம் ஆகும்.
*பெயர் குறிப்பு*
1-6 நபர்கள் தங்களின் பெயரினை
3... 8... 9... இவற்றில் வைப்பதனை தவிர்க்கவும்.
இவற்றினால் தேவையற்ற விவாதம் தடைகளை தவிற்க்கலாம்

No comments:

Post a Comment