02 January 2017

7-5 காம்பினேசன்

*எண்கணிதம்- 7-5*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
7, 16, 25 ஆக இருந்து
விதி எண்ணாக
5 வரும் நண்பர்களே
நீங்கள் 7-5 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.

(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
சமூக சேவையே வாழ்வின் லச்சியமாக
கொண்டு அனைவருக்கும் நல்லது செய்வார்கள்.
கற்றுக்கொள்வதிலும், கற்றதை கற்றவாறே
கற்பிப்பதிலும் நிபுணத்துவம் உடையவர்கள்.
அறிவியல் ஞானம் என இரண்டிலும்
ஆர்வம் உண்டாகும். எளிதில் உணர்ச்சி வசப்பட்டு
முடிவுகளை எடுத்து அதற்காகவே, கஷ்டப்படுவதை
கௌரவமாக நினைப்பார்கள். இல்லறத்தில் எப்போதும்
கவனமுடன் இருக்கவேண்டும். வார்த்தை பிரயோகம்
ஜாக்கிரதியாக இருக்க வேண்டும். தமாசாக போய்
வில்லங்கமாக முடிய வாய்ப்புள்ளது.
எப்போதும் பணப்புழக்கம் இருக்கும்.
*தொழில்*
பாரம்பரியத்தினை மாற்றி செய்யும் விசயங்கள்,
பிரயாணம்,
விஞ்ஞானம்,
ஆசிரியர்,
ஜோதிட ஆசிரியர்,
மத போதனை,
பணம் சம்பந்தமானவைகள்,
இவைகளை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
இல்லறத்தினை நல்லபடியாக கவனிக்கவும்.
மாந்திரீகம், சூனியம் போன்ற துறைகளில்
ஈடுபடாமல் இருப்பது நல்லது. போனால்
தவறான படி பிரயோகம் செய்து மக்களை
அச்சம் கொள்ள செய்யும் படியாக ஆகலாம்.
வைடுரியமும் மரகதமும் அதிர்ஷ்ட கற்க்களாகும்.
விநாயகரும், விஷ்ணுவும் அதிர்ஷ்ட வழிபாட்டு
தெய்வங்கள் ஆகும்.
*பெயர் குறிப்பு*
7-5 நபர்கள் தங்களின் பெயரினை
4… 7… 8… 9… இவற்றில் வைப்பதனை தவிர்க்கவும்.
இவற்றினால் குடும்ப சிக்கல் தொழிலில் விருத்தியின்மை
உண்டாகலாம்.

No comments:

Post a Comment