28 June 2016

ஜாதகத்தில் செவ்வாய் சாதகமா?

செவ்வாய்
சாதகமும் பாதகமும்....
~~~~~~~~~~~~~~~
செவ்வாய் பற்றிய காரக அறிமுகம்
பூமிகாரகன். திருமணம்... முருகன்...
ஆயுதம் வைத்திருத்தல்,ஊழல்கள் போன்றவற்றிற்கு செவ்வாய் காரகன் ஆகும்
எல்லாவகையான இயந்திரங்கள்,பெரிய தொழிற்சாலைகள், கருவிகள், கட்டுமான தொழில்,
கனரக வாகனம், ஆபத்தான கொடிய விலங்கு,
~~~~~~~~~~~~~
இப்போது
யாருக்கு சாதகம் எப்போது என ஆராய்வோமா

முதலில்
செவ்வாய் காலபுருசத்தில் முதல் லக்கினததிற்கே எட்டுக்கு உடையவனாகி இருப்பது எதனை உணர்த்துகிறது... என்பது ஆராய வேண்டிய விசயமாக உள்ளது.
அடுத்து செவ்வாய் தோசம் எனும் தோசம் பற்றி...
செவ்வாய் தோசத்தினால் ஜாதகருக்கு என்ன தோசம் உண்டாகிறது. அதனால் பெறும் பலன்கள் என்ன
கால புருசத்தில் 8மிடம் என்பதை தன்னுடைய வேகம் தனக்கு ஆபத்து என்பதால் தன் செயல்பாடினை மறைக்கும் செயல்முறையாக இதனை பார்க்கிறேன்.
மேலும் செவ்வாய் தோசம் என்பதை எவ்வாறு எடுத்துக் கொள்ள முடியும்....👍
இதை எனது குருநாதர் கூறுவார்...
செவ்வாய் இரத்தம்... தோசம் அதன் வீரியம். பொதுவாக இரத்தத்தின் அதிவீரிய நச்சு தான் செவ்வாய் தோசம். அதனால் பரிகார செவ்வாய் அது இதுவென காரணம் காட்டி திருமண பொருத்தம் உண்டு என சேர்க்க கூடாது.
விசம் விசமே அதில் நல்ல விசம் கெட்ட விசமேல்லாம் இல்லை. வீரியமான விசத்தை காட்டிலும் சமயத்தில் வீரியம் குறைந்த விசம் நம்மை அதிக பிரச்சினை களூக்கு ஆட்படுத்தும்.
வீடுநிலம்=செவ்வாய்
கல்யாணம்=செவ்வாய்
திடீர் நோய்=செவ்வாய்
*கடன்=செவ்வாய்*
அதனால் மேலே உள்ள மூன்றின் செயல்கள் அமையும் போது.. அல்லது கட்டாயமாக திணிக்கப்படும் போது தப்பாமல் நான்காவதாக இருக்கும் நமது கலியுக ரட்சகன் குடும்பத்தை ஆட்கொண்டு விடுகிறானோ...
_(கடனை சொன்னேன்)_
~~~~~~~~~~~~~~~
கேள்வி:செவ்வாயில் இப்போ மனிதன் இருக்கலாம் என்று சொல்கிறார்கள்... அப்படியானால் .....
‪#‎செவ்வாயை‬ தூக்கிவிட்டு பூமியினை வைத்து பலன் அறியலாமே
அப்போது பூமி நீலகிரகமாக படும்.
வெப்பத்தின் காரகம் நீரின் காரகமாகும். ஒருவருடத்திற்க்கு ஒன்னரை சுற்று வரும் பூமி என்று கூறவேண்டியிருக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~
செவ்வாயினை பலப்படுத்த வேண்டும் எனில் கந்தர்சஷ்டி கவசம் ஓதி பயன் பெறலாம்.
இது அழிக்கும் காக்கும் வீரியத்தை தருகிறது.
செவ்வாயின் பலத்தை குறைக்க வேண்டும் எனில் கந்தகுரு கவசம் ஓதிபயன் அடையலாம். இது அன்பின் வீரியத்தை அதிகரிக்கும்
ஒரு மனிதனுக்கு
புதன் காதலை தரலாம்
குரு துணையை தரலாம்
ஆனால்
அது திருமணத்தில் முடிய செவ்வாயின் துணை நிச்சயமாக வேண்டும்.
ஐந்தாம் பாவத்தின் விதைப்புக்கும் பிறப்புக்கும் செவ்வாயே காரகமாகிறார்.
இந்த தகவலுடன் இன்று செவ்வாயினை பற்றி கருத்திட்டு ஜோதிட ஆர்வளர்களின் ஆர்வத்திற்க்கான பலனையும்... எமைப்போன்ற அடிப்படை ஜோதிடர்களுக்கு அற்புதமான கருத்து குவியலை அளித்த நமது குழுவின் ஜோதிடகுருமார்களுக்கும்... படித்து பயனடையும் ஜோதிட மாணவர்களின் சார்பில் வணக்கங்களை கூறி....
மீண்டோரு நாளில்
மீண்டோரு வித்தியாசமான
சுவையான விவாதத்துடன் இணைவோம்....
காத்திருங்கள்....
இவைகள் எமது வாட்ஸ்ஆப் குழுவின் கேள்விக்கு அடியேன் பதிலாக வரைந்தது.

No comments:

Post a Comment