28 June 2016

கடன் மருந்து வழக்கு = பணம்?

கடன் மருந்துகள் வழக்கு
மூலம் லாபம் அடைவது யார்....
~~~~~~~~~~~~~~~~~~~~

‪#‎ஆறாம்‬ இடமே கடன் நோய் வம்பு வழக்குகள் பற்றி அறியும் இடமாகும். ஆறுக்கு உடையவன் இரண்டில் இருந்தால் அல்லது இரண்டாமிடத்தின் தொடர்பில் இருக்க அவர்கள் கடன் மற்றும் மருத்துவம் வழக்கினால் லாபம் அடைவார்கள். முக்கியமாக லக்கினத்தோன் ஆறில் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஆறுக்கு உடையவன் எட்டில் இருந்தால்...
ஆறாமிடம் வீரியபலம் அடையும். (அதாவது கடன் நோய் வழக்கு) அதனால் தனது கூட்டாளி மற்றும் வாழ்க்கை துணையின் காரகம் மூலமாக வட்டி... மருத்துவம்... வழக்கு மூலயமாக வருமானம் உண்டாகிறது. (எட்டு என்பது ஏழாமிடத்திற்க்கு இரண்டு என்பதால்) ஆனால் அந்த வருமானம் அந்த ஜாதகருக்கு உதவாமல் போகும் அல்லது பிடிக்காமல் போகும் நிலையும் கூடவே வரும்.
லக்கினாதிபர் கேந்திர திரிகோணத்தில் இருந்து ஏழாமிடத்தை தொடர்பு கொண்டு இருந்தால் அந்த வருமானத்தில் ஜாதகரும் பயனடைவார். இதில் ஏழுக்கு உடையவர் ஆறில் இல்லாமல் இருப்பதும்... ஆறுக்கு உடையவரின் சாரம் பெறாது இருப்பது முக்கியமானது.
அதனினும் முக்கியமான விசயம் அந்த காரகம் சார்ந்த விசயங்களை நாம் செய்து கொண்டு இருக்க வேண்டும்.
இன்னமும் கூட இது போல ஆறாமிட வலிமையினை பயன்படுத்தி வளம் பெற முடியும்...
அஸ்ட்ரோகண்ணா
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்....
கொடுமுடி

No comments:

Post a Comment