28 June 2016

மந்திரம் எனது பார்வையில்..

மந்திரம் ஒரு சுய பார்வை
~~~~~~~~~~~~~~~~~
நாம் உட்பட அனைவரும் கூறும் ஒவ்வோர் சொல்லும் பிரபஞ்சத்தில் கலந்து நிற்கிறது. அதில் வலிமை மிக்க சொற்களின் தொகுப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்...

அதனால் நமது பெரியோர் கூறிய ஸ்லோகம் செய்யுள்கள் அனைத்தும் பதம் மாறாமல் திரும்ப திரும்ப ஒரேமாதிரி கூறப்படும் போது வலிமை அடைகிறது. அதனை உறுதி செய்யவே சமஸ்கிரதத்தில் சந்தஸ்களும்... தமிழில் பண் எனும் முறையையும் உண்டாக்கி வார்த்தைகளின் வேகம் ஏற்ற இறக்கம் இவைகள் மாறாமல் பார்த்துக்கொள்கிறார்கள்...
எந்த ஒலிக்கும் உயிர் உண்டு...
அந்த ஒலி பிரபஞ்சத்தில் கலந்து காத்திருக்கும். அது ஒருநாள் வலிமை அடையும்போது அதற்கான பலனை அது வழங்கியே தீரும்.
மொழி முக்கியமாக இருந்தாலும்... அந்த பாவனையும் உணர்வுமே முக்கியமாக இருக்கிறது....
மிக மிக அதீத வலி....
அதீத சந்தோசம்...
இப்படியான சந்தர்ப்பம் வரும் போது மொழியிழப்போம்... ஆனால் ஒலியிழப்பதில்லை என்பதை கவனித்தால், ஒலியின் முக்கியமான இருப்பு விளங்கும்.
மந்திரம் என்பதே நமது மனதில் இருந்து வரும்
வார்த்தைகள் தான்....
இதனை உணர்ந்த மகான்கள் கண்டறிந்த மந்திரங்கள் அவர்களின் இதயத்தில் இருந்து புறப்பட்டவை....
அதனை நாமும் அப்படியே கூற நல்ல பலன்களை எளிதில் பெற முடிகிறது.
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
கொடுமுடி... 7667745633

No comments:

Post a Comment