28 June 2016

பணம் சேர்ந்தால் நோய் வருமா?

செல்வம் அதிகரித்து அதனை அதிகம் பயன்படுத்த பயன்படுத்த நோய் அதிகம் உண்டாகும்படி ஆகிறதே ஜோதிட காரணம் என்னவாக இருக்கிறது.... அறியலாம்.


பொதுவாக ஒரு பாவத்தின் செயல் பாடுகள் அதன் செயல்பாடுகள் அதன் முதல் திரிகோணத்தினால் தீர்வாகும்.... அதே பாவத்தின் சக்தியினை பெறும் இடமாக அதன் இரண்டாம் திரிகோணம் இருக்கும்.

உதாரணம்... லக்கினம் நாம் எனில்... 
நமது செயல்பாடு நமது கௌரவம் பதவி புத்திரமாகவும்... 
நாம் இந்த நிலையில் உள்ளதற்க்கு நமது பெற்றோர் குரு இவர்களே காரணமாக உள்ளார்கள் என்பதை 
முதல் திரிகோணம் ஐந்து புத்திரம், இரண்டாம் திரிகோணம் ஒன்பது நமது பித்ரு ஸ்தானம் என்பதையும் பார்க்கும் போது எளிதில் விளங்குகிறது அல்லவா... 

அப்படியானால் நமது வெளிப்பாடு சரியாக இருந்தால் நல்ல வாரிசு மூலம் நலம் அடைகிறோம். இல்லாத பட்சம் துன்பம் அடைகிரோம் என்பது உண்மையாகிறது என புரிகிறது அல்லவா....

அதனை அப்படியே அடுத்த கர்ம திரிகோணமான இரண்டு ஆறு பத்துக்கு பொருத்தி பார்க்கலாம்.
தொழில் மூலம் நாம் அடையும் லாபம் தனம் ஸ்தானமான இரண்டில் சேமிப்பாக வந்து சேர்கிறது. 
அதன் வெளிப்பாடாக நாம் அதிகமாக தனத்தினை வெளிப்படுத்தும் போது... நமது லக்கினத்திற்க்கு அது ஆறாம் இடமாக அமைவதால்... அது நோயாகவும் 
மற்றும் தனம் இல்லாமல் அந்த ஸ்தானத்தை உபயோகிக்கும்போது கடனாகவும் ஆறாமிடம் நமக்கு தன்னை வெளிப்படுத்துகிறது.
பத்தின் வலிமை அறிந்து இரண்டின் நிலையினை உணர்ந்து அளவாக உள்ள பொது... நல்லதே நடக்கும். 
பக்குவமாக ஆறினை பயன்படுத்தும் போக்கு... நமக்கு பயிற்சியால் உண்டாக்கி கொள்ள எல்லாம் சுபமாகும்.

இரண்டை அதன் ஐந்தில் போக விடாது.... அதன் அதன் பனிரண்டால் அதாவது தனது இலக்கின  பலத்தினை கட்டுப்படுத்தினால் தனம் எங்கும் போகாது. நம்மிடமே இருக்கும். செல்வமும் சேரும், நோயும் கடனும் வராது.

ஜோதிட ஆலோசனைக்கு
76677 45633

No comments:

Post a Comment