இந்த எண்ணின் ஆதிக்கக் கோள் இராகு ஆகும். இவர்கள் பெருந் தன்மை வாய்ந்தவர்கள். பிறருக்கு உதவி செய்ய தயங்க மாட்டார்கள். கல்வியில் மேலே படிக்க வசதி இருந்தாலும் படிக்க முடியாது. தடை பட்டு விடும். பின்னர் மிகவும் சிரமான முறையிலேயே படிக்க முடிகின்றது.
பிறர் மீது பொறாமை பட மாட்டார்கள். பிறரை வஞ்சிக்க மாட்டார்கள். மற்றவர்களும் தன்னைப் போல் வாழ வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள். தங்கள் வேலையில் கண்டிப்பும், அக்கரையும் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை நம்பி பணத்தை இழக்கும் அவலம் உண்டு. கண்கள் சிறியதாகவும் காணப் படுவார்கள். பெரிய தலையும், அடர்த்தியான தலை முடியும் கொண்டவர்களாக இருப்பார்கள். கிடைத்த பணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் செலவுசெய்வார்கள். எப்போதும் மற்றவர்கள் பேசும் வார்த்தைக்கு எதிர் வார்த்தையே பேசுவார்கள். அதிக அளவு புத்தி கூர்மை உள்ளவர்கள். எனவே வாழ்க்கையை தீவிரமாக ஆராயும் தன்மை கொண்டவர்கள். எல்லா வற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள்.கையில் பணம் இல்லா விட்டாலும் மிக்க மகிழ்ச்சி உடனேயே இருப்பார்கள். பொறாமை இவர்களிடம் கிடையாது. சிறு வயதில் ஓடி விளையாடுவதிலும், சுகமானவாழ்க்கையிலும்,முன்னேற வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். காதல் என்பதை சிந்திப்பதற்கே நேரம் இல்லாதவர்கள். ஆனாலும் இளம் வயதிலேயே இவர்களுக்கு திருமணம் நடைபெற்று விடும். பலமின்மை, சோகை, குடல், தலை, இடுப்பு போன்றவற்றில் நோய்கள் ஏற்படலாம். சிறு வயதில் இருந்தே துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும்.மிக்க வல்லமை உடைய இவர்கள் நேர்மையுடனும், நாணயமாகவும் நடந்து கொண்டால் உயர்ந்த நிலையை அடையலாம். உணவு உண்பதிலும், இல்லறத்திலும் மிதமாக இருக்க வேண்டியது அவசியம். இனிமையாகவும், கவர்ச்சியாகவும் பேச பழகுதல் நன்மை பயக்கும். இந்த தேதி தேதியில் பிறந்தவர்களுக்கு நன்மையை விட தீமையே அதிகம் ஏற்படும். கோமேதகம் அதிக நன்மை தரும் கல்லாகும். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...