படிக்கும் போதே
நல்ல மதிப்பெண் எடுக்க
முடியாது போகும் நிலை
எதனால்...
நான்காம் இடம் சிறப்பாக
இருந்தால் படிப்பு
நன்றாக இருக்கும்
என கூறலாம்...
ஆனால் மதிப்பெண்
கிடைக்க வேண்டும் அல்லவா...
அதுவும் உயர் கல்விக்கு
தேவையான அளவுக்கு
மதிப்பெண் வேண்டும்
அல்லவா...
அப்போது தான்
நான்கினை புரிதல்
வெளிப்பாடான ஐந்து,
நான்கின் நுண் அறிவின்
வெளிப்பாடுகளான
இரண்டு மற்றும்
ஊறுகாய் மாதிரி ஆறு
இவற்றையும் துணைக்கு
அழைக்க வேண்டியிருக்கும்.
பரிட்சை சமயம் அதற்கு முன்
சில மாதங்களில் ராகு மற்றும்
பத்துக்கு உடையவன்
திசா புத்திகள் வருகிறதா
என முன் கூட்டியே பார்த்து கொள்ளவும்.
எனது வாடிக்கையாளரின்
மகன் ப்ளஸ் டூ எழுதியுள்ளான்.
பத்தாம் வகுப்பில்
490 அளவுக்கு எடுத்து
இலவசமாகவே பெரிய
தனியார் பள்ளியில்
சேர்ந்து படித்தான்.
கடந்த வருடம்
நான்கின் திரிகோண ராகு
புத்தி நடத்த...
டெஸ்டில் 35% 40% என
மதிப்பெண் பெற
பள்ளி நிர்வாகம் கூட
ஏமாற்றமாக உணர்ந்தது.
என்னிடம் வரும்போது
கவலைப்பட ஏதுமில்லை...
இறுதி பரிட்சையில்
சரியாகும் என கூறி...
மேலும் ராகு ஏதும்
செய்யாமல் இருக்க
சில விசயங்களை
கூறி அனுப்பினேன்.
இறுதி பரிட்சைக்கு
ஒரு வாரம் முன்
ராகு புத்தி முடிந்தது.
இப்ப அந்த மாணவரிடம்
கேட்டால் 1150 தாண்டி
மதிப்பெண் உறுதி என்கிறார்.
நம்பிக்கையுடன்
ஜோதிடரின் ஆலோசனையினை
கேட்டு பொறுமையுடன்
இருக்க அனைவருக்கும்
மகிழ்ச்சி தானே...
மக்களின்
அதிர்ஷ்ட ஆலோசகன்.
பொன்தாமரைக்கண்ணன்
7667745633
No comments:
Post a Comment