15 February 2018

செல்வம் வாழ்க்கையின் அச்சாணியா

செல்வம்....
வாழ்க்கையின் அச்சாணியா.....



நாம் ஒத்துக் கொண்டாலும்
ஒத்துக் கொள்ளாவிட்டாலும்
பணம் நம்மை தன் கைப்பாவையாக 
மாற்றி ஆட்டிப்படைக்கிறது.

நம் எல்லாரிடமும் பணம் உள்ளது. அதிகமாக அல்லது குறைவாக இருக்கும். பணமாக அல்லது பொருளாக இருக்கும். வள்ளுவரும் இதையே பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லையேன கூறுவார்.

இதன் கூற்று என்னவெனில்...
பணம் தேவை. அதிர்ஷ்டம் தேவை. சரிதானே இது.

அதிருஷ்டம் என்பது அறியாமல் வருவது என பொருள் கொண்ட வார்த்தையாகும். தன் முயற்சிக்கு மேலே... அதிகமாக பொருள் வரவுக்கு வழி கிடைக்கும் போதே அதிர்ஷ்டம் என கூறிக்கொள்கிறோம்.

இருப்பினும் தன்னுடைய அதீத வெளிப்பாடே தன்னுடைய அதிர்ஷ்டம் என்பதை அறியவேண்டும். இதில் தான் என்பது லக்கினமாகும் லக்கினத்தோன் பலமானால் அதிர்ஷ்டம் பலமாகும். இல்லையேல் அடுத்தவரின் வசதிகளை கண்டு பெருமூச்சு தான்.

லக்கினத்தோன் பலஹீனன் ஆனால்... எதாவது முறையில் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். அதிக உழைப்பு குறைந்த வருமானம் கொண்டவர்கள் இந்த பிரிவில் வருகிறார்கள்.

அடுத்தது... இரண்டாமிடம் தனாதிபர் பாதிப்பு அடைதல்...
தொழில் அதிபர் நலமாக இருக்க பணம் நிறைய சம்பாதிப்பார்கள்...
ஆனால் காசு போன இடம் தெரியாமல் புலம்பும்படி இருக்கும்.

இக்கினம் இரண்டு இவைகள் நலமாக இருப்பவர்கள் பொதுவாகவே உழைப்பினை நம்பி வாழ வேண்டியது இல்லை.

மற்றவர் என்ன செய்வது அதிர்ஷ்டம் அடைய வாய்ப்பு இல்லையா எனும் போது தான்... நமது முன்னோர்கள் பலவித பரிகார முறைகளை கூறியுள்ளார்கள்.
பரிக்காரங்களில்....
மாந்ரீக
தெய்வீக
தாந்ரீக
என பட்டியல் போடும் அளவுக்கு பல முறையில் பரிகாரம் உள்ளது.

இதில் நமது மனதை வருடிய
மனதை சந்தோஷம் படுத்தும் முறை எதுவோ
அந்த முறையில் பரிகாரம் மேற் கொள்ள வழியுண்டு.
அனைத்துமே நல்ல வழியேயாகும்.

அதில் ஜோதிடராக இருப்பவர்கள் சிலவற்றைகைகொண்டு வெற்றி பெற பயிற்சிகள் தருவார்கள். இதுவே பரிகார தத்துவமாகும். ஒருவரின் பரிகாரம் மோசமானது என யாரும் உறுதியாக கூற இயலாது.

இதில் 15வருட ஆராய்ச்சி மூலமாக கண்டறிந்த முடிவின் படி எண்கணிதமும் ரத்தினம் அணிவதும் சிறப்பான கூட்டு வழிபாடும் நல்ல நிலையினை அடைய வைக்கிறது என ஶ்ரீராம் ஜோதிட கேந்திரா உணர்கிறது. இந்த முறையில் தற்போது இறை கருணையால், இறைசக்தியினால் நல்ல பல விளைவுகளை அடைய வைக்க முடியும். 

இதனால் பெறும் இறைசக்தியால்
நமக்கு உண்டாகும் பல தீய விசயங்கள் நீங்கி
ஜாதகம் பலமாகி மக்கள் அனைவரும்
அதிர்ஷ்ட வாய்ப்புகளை அடைய இறையருளை பிரார்த்தனை செய்கிறேன்.


No comments:

Post a Comment