15 February 2018
சொர்க்க வாசல்
முதல் திரிகோணம் என்பது மேச ராசி முதல் ஆரம்பம் ஆகிறது.
இது முன் ஜென்மம் எனவும், இரண்டாம் திரிகோணம் ஆகிய சிம்மம் முதல் விருட்சிக ராசி வரை இந்த இந்த ஜென்மம் எனவும், மூன்றாம் திரிகோணம் ஞானம் உபதேசம் தரக்கூடிய தனுசு முதல் மீனம் வரை அடுத்த ஜென்மா எனவும் கருதப்படுகிறது.
அடுத்த ஜென்மம் நமக்கு வேண்டாம். இறைவனுடன் சேர்ந்துவிட வேண்டும் என, நம்மை அடுத்த கட்டத்திற்கு கூட்டிச் செல்லும் வழியே சொர்க்க வாசல் ஆகும். கால புருஷனின் ஒன்பதாம் இடமான தனுசு ராசியில் ஞானம் அடையும் பொருட்டு ஆன்மகாரகன் சூரியன் பிரவேசிக்கும் காலத்தில்...
நமது அறிவாகிய சந்திரபகவான் ரிஷபம்ராசியில் உச்சம் பெறும் போது... பேரின்ப வாசல் திறக்கும். இறைவனை அடையக் கூடிய வழி இப்போது பிரகாசமாக இருக்கும் என்பதனை காட்டிக் கொடுக்கும் திருவிழாவே சொர்க்க வாசல் திறப்பு ஆகும். அனைவரும் தனது ஆன்மாவின் சொர்க்கவாசல் திறந்து எம்பெருமானின் திருவடி அடைய வேண்டிக்கொள்கிறேன்.
அன்புடன்
எண் ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
கொடுமுடி 7667745633
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment