20 February 2018

மனைவியினை இழக்கும் ஜாதகம்

மனைவியினை இழக்கும் ஜாதகம்
இலக்கின 
பாதகாதிபதிக்கு 
ஏழாம் அதிபரின் 
சம்பந்தம் பெற்று,

செவ்வாயும் சுக்கிரனும் 
அந்த தொடர்புள்ள 
இடத்தில் அல்லது
பாதகஸ்தானத்தில் 
தொடர்பு கொள்ள,

பல மனைவிகளை 
இழக்கும் தோஷம் 
உள்ளதாக அறியவும்.

15 February 2018

எண்கணித கருத்து குவியல்


இருட்டை விலக்கி, ஒளியை புகுத்துவதை விடவும்...

ஒளியினால் இருட்டை விலக்குவது எமக்கு எளிதாக படுகிறது.

எண்கணிதம் ஒளியாக இருப்பது  

வெளிசத்தை உணர்ந்தவருக்கு தெரிகிறது.



எந்த அளவுக்கு 

பொருத்தமான பெயரோ

அந்த அளவுக்கு 

தெளிவான சிந்தனை.

எந்த அளவுக்கு

தெளிவான சிந்தனையோ

அந்த அளவுக்கு

வெற்றியடையும் வாய்ப்பு...

எந்த அளவுக்கு

பெயர் பொருத்தமோ

அந்த அளவுக்கு

தெளிவான சிந்தனை...




எண்கணிதமுறையில்

பெயரமையுங்கள்

எண்ணம் போல

வாழ்வை அமையுங்கள்...

பெயரியல் டயர் ட்யூப் மாதிரி...

டயர் மாத்துனா 

வண்டி ஓடுமானு கேக்காதீங்க...

சேப்டி... ஸ்பீடுக்கு உத்தரவாதம்.




சிகரத்தை தொட்டவன் அங்கேயே

இருந்து விடுவதில்லை.

மகிழ்ச்சி சிகரத்திலா அல்லது 

அதனை அடைந்ததிலா...


கணக்கீடின்றி ஏதுமில்லை

கணிதமே உலக இயக்கம்.

எண்ணயலுடன் உலகை

புரிந்து கொள்ள முயலுங்கள்.

மயக்கமின்றி...



நட்சத்திரம் பகலில் தெரியாது.

அதனால் அது இல்லை என்பது போல...

எண்கணிதம் இல்லை என்பதும்.


வானின் அளவுக்கு வெற்றியுள்ளது.

கஞ்சமாக வேண்டாம்.

தாராளமாக வெல்லுங்கள்.




எண்ணியலை பொய்யென

சொல்லும் ஜோதிடர்கள்...

புதன் தொடர்பின்றி

ஜோதிடம் கற்றவர்களாக

இருப்பார்கள்.




எப்போதெல்லாம்

விதி சரியில்லை என புலம்புகிறோமோ

அப்போதெல்லாம்

விதியை ஏற்க்க மறுக்கிறோம் எனலாம்...

எப்போதெல்லாம்

விதியை மாற்றுகிறோம் என்கிறோமோ

அப்போதெல்லாம்

விதியுடன் ஒத்துப் போகிறோம் எனலாம்...




விதியை ஏற்று நிலையாக இருப்பதும்

விதியை மீறி பந்தாக உதைபடுவதும்

பெயரியலின் பாதையில் மட்டும்

மிக எளிதில் சாத்தியமாகிறது.



பொருந்தும் பெயர் வைக்க

வருந்தும் சம்பவஙகள் உண்டாவதில்லை.



எண்களின் இந்த அனுபவம்

நல்ல அனுபவம் தானே

வாருங்கள் விதியினை ஏற்று பயணிப்போம்.




எழுத்துகளில் இருந்து புறப்படும் 

எண்களை அறிந்தவர்களே,

எண்களில் இருந்து புறப்படும் 

வெற்றியை அடைகிறார்கள்...



நல்லதும் கெட்டதும்

பெயரால் வருவது

அதிகம் 



எண்கணிதம்

ஏணிப்படியாகும்

ஏறுங்கள்

முன்னேறுங்கள்




நினைப்பதெல்லாம்

நடந்து விட்டால்...

எண்ணியலுடன்

இணைந்த வாழ்க்கையில்

இதனை உணர்ந்தவர்கள் கோடி...




எண்கணிதம் உயரவைக்கும்



எண்களை எண்ணத்தில் விதைத்தவர்கள்

தனது கர்மாவின் பயணத்தில் இணைந்து

வெற்றிகரமாக உயர்ந்து விட...

இன்னமும் தூற்றிக் கொண்டுள்ளவர்கள்

வெற்றியாளர்களை தலைதூக்கி

பார்த்து கொண்டுள்ளார்கள்.




பெயரினால் கர்மாவின் வழியை

வெற்றி வழியாக்க

தொடர்பு கொள்க...



எண்ணியலின் சூட்சுமங்களை அறிய அறிய

தெளிவடையும் பாதை...




முன்னேற வேண்டும் என புலம்பாதீர்கள்.

உங்கள் பெயரை முன்னெடுத்து போக...

முன்னேறுவீர்




பிரபஞ்சத்தின் திறவு கோள் என 

எளியவர்களுக்கு இறைவன் தந்த பரிசு 

பெயரியல் எனும் எண்கணிதம்.




எண்ணத்தின் மூலமாகவே 

அனைத்தினையும் பெற வைத்து விடுகிறது 

எண்கணிதம் எனும் நியூமராலஜி கலை



நல்ல கருத்துகள்

கண்டுபிடிக்கப் படுவதில்லை.

மாறாக

வெளிப்படுத்தப் படுகிறது.



அண்டத்தில் நடப்பதை

பிண்டத்தில் கணிப்பதே ஜோதிடம்.

இந்த லக்கினம் நல்லது 

இந்த லக்கினம் கெட்டதென பயப்படாதீர்...

லக்னாதிபர் நல்லபடி இருக்கும் 

அனைத்து லக்கினமும் நல்ல லக்கினமே...


மனதின் தேவை மாறிக்கொண்டே இருக்கிறது. 

சரிதான் போல...

அதனால்தான் சந்திரனை மாறிக்கொண்டே

இருக்க வைத்தான் இறைவன்.





விண் வெளியில் உள்ளதால்...

விண்வெளி என்கிறார்களா

கண்டுபிடிப்பு



பெயர் எண்ணும்

தொழில் எண்ணும்

சரியாக பொருந்தினால்

பெயரும் புகழும்

தொழிலில் மேன்மையும்

சரிவின்றி பெருகும்.




என்ன பிரச்சினை

என்ன ஆகிறது எனக்கு

என்ன செய்வது

எனக்கு மட்டும் ஏன்

எப்படி சமாளிப்பது

இப்படி புலம்பி தவிக்கும் படி

சூழல் உள்ளதா? 

என்ன செய்யலாம் என்பதை

எண்கள் கூறும்.


கிருத்திகை உத்திரம் உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களில்...

சூரியனின் நட்சத்திரங்களான...
கிருத்திகை உத்திரம் உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களில்...

நான்கில் மூன்று நபர்கள்...
அலைச்சல் தொழிலால் மட்டுமே முன்னேறுகிறார்கள். அல்லது ஊர்சுற்றிகளாக வீணாகிறார்கள்.

மீதியுள்ள ஒருவர் அதிகாரம் மிக்க தொழிலில் முன்னேறுவார்கள். அல்லது அனைவரையும் அடக்கியாள நினைத்து மனம் நோவார்கள்.

இது பொதுவானது... ஜாதகம் கண்டு தெளிக

அன்புடன்
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
கொடுமுடி

செல்வம் வாழ்க்கையின் அச்சாணியா

செல்வம்....
வாழ்க்கையின் அச்சாணியா.....



நாம் ஒத்துக் கொண்டாலும்
ஒத்துக் கொள்ளாவிட்டாலும்
பணம் நம்மை தன் கைப்பாவையாக 
மாற்றி ஆட்டிப்படைக்கிறது.

நம் எல்லாரிடமும் பணம் உள்ளது. அதிகமாக அல்லது குறைவாக இருக்கும். பணமாக அல்லது பொருளாக இருக்கும். வள்ளுவரும் இதையே பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லையேன கூறுவார்.

இதன் கூற்று என்னவெனில்...
பணம் தேவை. அதிர்ஷ்டம் தேவை. சரிதானே இது.

அதிருஷ்டம் என்பது அறியாமல் வருவது என பொருள் கொண்ட வார்த்தையாகும். தன் முயற்சிக்கு மேலே... அதிகமாக பொருள் வரவுக்கு வழி கிடைக்கும் போதே அதிர்ஷ்டம் என கூறிக்கொள்கிறோம்.

இருப்பினும் தன்னுடைய அதீத வெளிப்பாடே தன்னுடைய அதிர்ஷ்டம் என்பதை அறியவேண்டும். இதில் தான் என்பது லக்கினமாகும் லக்கினத்தோன் பலமானால் அதிர்ஷ்டம் பலமாகும். இல்லையேல் அடுத்தவரின் வசதிகளை கண்டு பெருமூச்சு தான்.

லக்கினத்தோன் பலஹீனன் ஆனால்... எதாவது முறையில் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். அதிக உழைப்பு குறைந்த வருமானம் கொண்டவர்கள் இந்த பிரிவில் வருகிறார்கள்.

அடுத்தது... இரண்டாமிடம் தனாதிபர் பாதிப்பு அடைதல்...
தொழில் அதிபர் நலமாக இருக்க பணம் நிறைய சம்பாதிப்பார்கள்...
ஆனால் காசு போன இடம் தெரியாமல் புலம்பும்படி இருக்கும்.

இக்கினம் இரண்டு இவைகள் நலமாக இருப்பவர்கள் பொதுவாகவே உழைப்பினை நம்பி வாழ வேண்டியது இல்லை.

மற்றவர் என்ன செய்வது அதிர்ஷ்டம் அடைய வாய்ப்பு இல்லையா எனும் போது தான்... நமது முன்னோர்கள் பலவித பரிகார முறைகளை கூறியுள்ளார்கள்.
பரிக்காரங்களில்....
மாந்ரீக
தெய்வீக
தாந்ரீக
என பட்டியல் போடும் அளவுக்கு பல முறையில் பரிகாரம் உள்ளது.

இதில் நமது மனதை வருடிய
மனதை சந்தோஷம் படுத்தும் முறை எதுவோ
அந்த முறையில் பரிகாரம் மேற் கொள்ள வழியுண்டு.
அனைத்துமே நல்ல வழியேயாகும்.

அதில் ஜோதிடராக இருப்பவர்கள் சிலவற்றைகைகொண்டு வெற்றி பெற பயிற்சிகள் தருவார்கள். இதுவே பரிகார தத்துவமாகும். ஒருவரின் பரிகாரம் மோசமானது என யாரும் உறுதியாக கூற இயலாது.

இதில் 15வருட ஆராய்ச்சி மூலமாக கண்டறிந்த முடிவின் படி எண்கணிதமும் ரத்தினம் அணிவதும் சிறப்பான கூட்டு வழிபாடும் நல்ல நிலையினை அடைய வைக்கிறது என ஶ்ரீராம் ஜோதிட கேந்திரா உணர்கிறது. இந்த முறையில் தற்போது இறை கருணையால், இறைசக்தியினால் நல்ல பல விளைவுகளை அடைய வைக்க முடியும். 

இதனால் பெறும் இறைசக்தியால்
நமக்கு உண்டாகும் பல தீய விசயங்கள் நீங்கி
ஜாதகம் பலமாகி மக்கள் அனைவரும்
அதிர்ஷ்ட வாய்ப்புகளை அடைய இறையருளை பிரார்த்தனை செய்கிறேன்.


அம்மாவும் நமது தொழிலும்

பொதுவாக நல்லபடி சந்தோசமாக தொழில் செய்யும் அம்மாவை கொண்ட மகன் மிக எளிதாக நல்ல வாழ்க்கையை அடைந்து விடுகிறான்.

வேலைக்கு போவதை மிக கடினமாக கருதி செய்யும் அம்மாவினை கொண்டவர்கள்... மிகவும் பலவீனமான ஜாதகம் கொண்டவராக இருப்பதை காணமுடியும்.


சுக்கிரனுடன் சந்திரன் சேர அம்மாவுக்கு பணம் காசு நல்லா புழங்கும்... நல்ல வசதியான வீட்டில் வசிக்கும் அம்மா...

இப்படியான ஜாதகர்கள் அம்மாவுடன் இருக்க
தன் ஜாதகம் குறையாக இருப்பினும் அம்மாவின் அன்பினால் நல்ல வாழ்க்கை வாழலாம். வசதியாக...


இரண்டாம் அதிபர் நான்காம் அதிபருடன் சேர்ந்தால்...
பணக்கார அம்மா அல்லது சம்பாதிக்கும் அம்மா...


மாணவர்கள் என்ன படிக்கலாம்

மாணவர்கள் 
என்ன படிக்கலாம் 
என்ற கேள்வியுடன் 
பல ஜோதிடரிடம் 
செல்கிறார்கள்.
அவர்களுக்கு...
ஒரு அடிப்படை புரிதல் பற்றி சில வரிகள்...

மதிப்பெண் எடுக்க முடியாது போகும் நிலையா?

படிக்கும் போதே
நல்ல மதிப்பெண் எடுக்க
 முடியாது போகும் நிலை
எதனால்...


நான்காம் இடம் சிறப்பாக 
இருந்தால் படிப்பு 
நன்றாக இருக்கும் 
என கூறலாம்... 
ஆனால் மதிப்பெண்
 கிடைக்க வேண்டும் அல்லவா...

மனம் விரும்பியது கிடைக்குமா?

நான்காம் அதிபர் இரண்டில் அமர்ந்து இருக்க...

ஐந்தாம் அதிபரும் லக்கினத்தில்

சுப பலமாக அமர பிறந்தவர்கள்...


தொட்டதெல்லாம் துலங்கும்...

மனம் விரும்பிய அனைத்தும்

பெறுவார். பெற வைப்பார்.


இவர் சிறப்பான யோகம் பெற்றவரென

என அனைவராலும் புகழப்படுவார்.


இரண்டும் பத்தும் இணைந்து எங்கே இருக்கிறதோ...

அந்த வழியே கூரையை பிச்சிகிட்டு கொட்டும்...

அல்லது கூரையே பிச்சிக்கிட்டு கொட்டும்.

செருப்பு

செருப்பு

காலின் பாதுகாவலன்.

கால் பனிரண்டு
அதன் ஏழு அதன் பாதுகாவலன்.
அப்படியானால் ஆறாமிடமே செருப்பு...

ஆறாமதிபர் லக்ன திரிகோணாதிபர் தொடர்பு
செருப்பினை டிசைன் பார்த்து அணியும் மோகம்.

மேலும் இந்த இடங்களுடன் பத்தின் தொடர்பு புது டிசைன் செருப்புகள் செய்யும் திறன்.

வீட்டில் அடிக்கடி செருப்பு ரிப்பேர் செய்யும் அமைப்பும் இவர்களுக்கே...
சோதித்து பதில் கூறுங்கள்

அன்புடன்
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
கொடுமுடி

நிவேதனம் கொடுப்பதை பார்க்க கூடாதா?

சுவாமிக்கு நிவேதனம் கொடுக்கும் போது பார்க்க கூடாது என்பது ஏன்?
நிவேதனம் தரும்போது இறைவனின் அருள்சக்தி பாதையினை இடைமறித்து நிறுத்தி வைத்து திரையிடப்படுகிறது.
அந்த சக்திக்கு சமர்பிக்கப்படும் நிவேதனம் இறைவனுக்கு சமர்ப்பணம் எனும் தாந்ரீக சடங்கு.
ஓடிக்கொண்டுள்ள சக்தியை இடை நிறுத்தவே இந்த சடங்கு. மற்றபடி பார்ப்பது கூடாது என்பது இல்லை.
திரை போட்டுள்ளதால் காண முடியாது என்பது மட்டுமே சரி. மாற்று கருத்துகள் இருக்கலாம். இருக்கட்டுமே....

அன்புடன் 
கொடுமுடி

வெளிநாட்டு வேலை வரமா? சாபமா?

இப்படியான மனைவி அல்லது இப்படியான மகள் மருமகள் அமைந்துள்ளவர்கள் மனம்திறந்து நன்றி கூறி பாராட்டவும்.
இணையத்தில் படித்து பரவசமான கதை
தேவாம்ருதம்
********************
காய்ச்சிய பாலில் புத்தம் புதிதாக இறக்கிய டிக்காஷனையும் சுகர் ஃப்ரீயையும் கலந்து ஆவி பறக்க, மணக்க மணக்க காபியை மாமனார் எதிரே இருக்கும் டீப்பாயில் கொண்டு வந்து வைத்தாள் காயத்ரி.
ஆவி பறக்கும் அந்தக் காபியை ரசித்துச் சுவைத்தபடியே அன்றைய செய்தித் தாளில் மூழ்கி விடுவார், எழுபத்து ஐந்து வயதைக் கடந்துவிட்ட வெங்கட்ரமண தீட்சிதர்.
அதன் பிறகு அவரது மருமகளான காயத்ரியின் கைக்காரியங்கள் அத்தனையும் சாட்டையிலிருந்து விடுபட்ட பம்பரம்தான்!
விஷ்ணு சகஸ்ரநாமத்தையோ, கந்த சஷ்டி கவசத்தையோ ஜெபித்தபடி, முதல் நாள் மாமனார் கொடுத்த லிஸ்ட் பிரகாரம் சாம்பார், ரசம், பதார்த்தங்களை மணக்க மணக்கச் செய்து, பத்து அல்லது பதினோரு மணி அளவில் மாமனார் தானே எடுத்துப் போட்டுக் கொண்டு, சாப்பிடக்கூடிய அளவிற்கு ஹாட் பேக்கில் எடுத்து வைத்துவிட்டு, அதேபோன்று இன்னொரு ஹாட் பேக்கில், அடுத்த தெருவில் குடியிருக்கும் கிட்டத்தட்ட எழுபது வயது நிரம்பிய தனது தாயார் மீனாட்சியம்மாளுக்கும் எடுத்து வைத்துக்கொண்டு, தானும் ஒரு கவளம் வாயில் போட்டுக்கொண்டு, மதியம் சாப்பிடுவதற்கு ஏதாவது ஒரு டிபனையும் டப்பாவில் போட்டுக்கொண்டு அலுவலகம் கிளம்பும்போது காலை மணி சரியாக ஒன்பது ஆகிவிடும்!
இதற்கிடையே ஐந்து வயது நிரம்பிய தனது குழந்தை பவித்ராவை எழுப்பி அவள் காலைக் கடன்களை முடிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, அன்றைய பாடத்தைப் படிக்க வைத்து, சீருடையை அணிய வைத்து எட்டரை மணிக்கு வரும் பள்ளிப் பேருந்தில் அனுப்பி வைத்தாக வேண்டும்!
இடையில் அம்மாவிற்காக தயார் செய்த உணவை அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு, அவசர அவசரமாக, அலுவலகம் நோக்கிப் பறந்தாக வேண்டும்!
மனைவியை இழந்த வெங்கட்ரமண தீட்சிதர் ஒருபுறம், கணவனை இழந்த மீனாட்சியம்மாள் ஒருபுறம்! அமெரிக்காவில் வேலை பார்க்கும் காயத்ரியின் கணவனும், வெங்கட்ரமண தீட்சிதரின் மகனுமாகிய பாலசுப்ரமணியன் ஒருபுறம், காயத்ரியின் ஒரே மகள் பவித்ரா ஒருபுறம், இவர்களுக்கு மத்தியில் எந்தவித சலனமோ சலிப்போ இல்லாமல் சந்தோஷமாகவே தனது வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருந்தாள் காயத்ரி!
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் எப்போதும்போல, அன்றும் காயத்ரி தன் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டாள்.
அவள் விடை பெற்றுச் சென்ற அடுத்த கணமே வெங்கட் ரமண தீட்சிதர் தன் இருக்கையை விட்டு எழுந்தார். ஸ்நானம் செய்தார். அன்றாட அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டார். காயத்ரி மந்திரத்தை ஜெபித்தபடி வெகுநேரம் இறைவன் முன்னால் இரு கரங்களையும் கூப்பியபடி தியானித்தார். பிறகு தன்னையும் அறியாமல் இறைவனிடம் இறைஞ்சினார்!
"இறைவா நான் உன்னிடம் பெரிதாக என்ன வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விட்டேன்? வீடு வாசல் வேண்டும் என்று வேண்டிக் கொண்டேனா? நிலம் நீச்சு வேண்டும் என்று வேண்டிக் கொண்டேனா? காசு பணம் வேண்டும் என்று வேண்டிக் கொண்டேனா? எதுவுமே பெரிதாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவில்லையே இறைவா! நான் பெற்ற என் மகனுக்கு சரஸ்வதி கடாஷத்தைக் கொடு என்று கேட்டேன். கொடுத்தாய். நல்ல உத்யோகத்தைக் கொடு என்று கேட்டேன். கொடுத்தாய்! நல்ல சம்பாத்யத்தைக் கொடு என்று கேட்டேன். கொடுத்தாய்! நல்ல புத்தியைக் கொடு என்று கேட்டேன். கொடுக்காமல் போய் விட்டாயே இறைவா! நான் என்ன பாவம் செய்தேன் இறைவா? ஸ்ரீவித்யா உபாசகனான எனக்குப் போய் ஏன் இந்த சோதனை இறைவா?
முதல் நாள் அமெரிக்காவிலிருந்து அவரது மகன் அனுப்பிய ஓர் இ.மெயிலைப் பார்த்துத்தான் அவர் இறைவனிடம் அந்தக் கதறு கதறினார்!
அன்புள்ள அப்பாவிற்கு,
நமஸ்காரம். இன்னும் மூன்று மாதத்தில் நான் சென்னை வர உள்ளேன். அதற்கு முன்னால் சில காகிதங்களை அனுப்பி வைக்கிறேன். அதில் காயத்ரியைக் கையெழுத்துப் போட்டுத் தயாராக வைத்து இருக்கச் சொல்லவும். அது வேறொன்றும் இல்லை. எங்களது விவாகரத்துப் பத்திரம்தான்! ஆம். இனிமேலும் அவளோடு சேர்ந்து வாழ என்னால் இயலாது. நான் எத்தனையோ முறை அவளுக்குப் படித்துப் படித்துச் சொல்லிவிட்டேன். குழந்தையை அழைத்துக்கொண்டு நீயும் அமெரிக்காவிற்கு வந்து விடு. நாம் இருவரும் சேர்ந்தே இங்கு குடும்பம் நடத்தலாம். என் அப்பாவையும் உன் அம்மாவையும் ஏதாவது ஓர் உயர்தர முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என எத்தனையோ முறை கூறிவிட்டேன். ஆனால் அவள் பிடி கொடுத்து பேசவே மாட்டேன் என்கிறாள். இனிமேலும் என்னால் இங்கே தனியாக வாழ முடியாது. ஒன்று அவள் இங்கே வர வேண்டும். இல்லை அவள் என்னை விவாகரத்து செய்துவிட வேண்டும். இரண்டில் ஒன்று நடந்தே ஆக வேண்டும். அவள் அங்கு இருக்கும்பட்சத்தில் அவள் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அநேகமாக அவள் அதைத்தான் விரும்புகிறாள்போலும். குழந்தையை அவள் இஷ்டப்படி அவளே வைத்துக்கொண்டாலும் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. நானும் இங்கு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகிறேன்! இதை அவளிடம் கறாராகச் சொல்லி விடுங்கள். நான் அங்கு வரும்போது இரண்டில் ஒன்று முடிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இப்படிக்கு
பாலு.
இப்படிப்பட்ட செய்தியைப் படித்துவிட்டுத்தான் மனம் பதைபதைத்துப் போனார் வெங்கட்ரமண தீட்சிதர்.
அதனால்தான் இறைவனிடம் கத்தினார்; கதறினார். நேரம் போவதே தெரியாமல் இறைவன் முன் அமர்ந்து அழுதார், புலம்பினார்!
உணவை மறந்தார். உறக்கத்தை மறந்தார். தன்னை மறந்தார். அமர்ந்தது அமர்ந்தபடி அங்கேயே இறைவனோடு இறைவனாக லயித்துவிட்டார்!
மாலை காயத்ரி வீடு திரும்பினாள். மாமனார் பூஜை அறையிலேயே அமர்ந்து இருப்பதைக் கண்டு திடுகிட்டாள். சாப்பாடு வைத்தது வைத்தபடி இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனாள்!
"என்னப்பா, உடம்பு சரியில்லையா? சாப்பிடக்கூட இல்லையே!'' எனக் கூறியபடியே, அவர் அருகில் சென்றாள்.
"ஒன்றுமில்லையம்மா'' எனக் கூறியபடியே மெல்லத் தடுமாறியபடியே எழுந்தார்!
அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்தாள் காயத்ரி. உடம்பு லேசாகச் சுட்டது!
"அப்பா, ஜுரம் இருக்கிறது அப்பா! டாக்டரிடம் அழைத்துச் செல்லட்டுமா?''
"அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா. கொஞ்சம் படுத்தால் சரியாகிவிடும்!''
"சரி... படுங்கள். இப்போது சூடாக ஒரு காப்பி போட்டுத் தருகிறேன். சாப்பிடுங்கள். ராத்திரி கண்ட திப்பிலி ரஸமும் சுட்ட அப்பளமும் செய்து தருகிறேன் சாப்பிடுங்கள். எல்லாம் சரியாகிவிடும்'' எனக் கூறியபடியே அவரை மெதுவாக சாய்வு நாற்காலியில் அமர வைத்தாள்.
"ஐயோ, பெற்றெடுத்த மகள்கூட இப்படி தாங்கு தாங்கு என்று தாங்க மாட்டேளே! இந்த மஹாலஷ்மியைப்போய் விவாகரத்து செய்யப் போகிறேன் என்கிறானே! பாவி.. மஹாபாவி'' எனத் துடித்துத்தான் போய்விட்டார் தீட்சிதர்!
இரவு சாப்பிட்டுவிட்டு நன்றாகத் தூங்கிவிட்டார்.
மாமனார் மனதை ஏதோ ஒரு விஷயம் சஞ்சலப்படுத்துகிறது என்பதை மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டாள் காயத்ரி!
நாள்கள் வேகமாக ஓடின. மூன்று மாதங்கள் ஓட்டமாய் ஓடிவிட்டது! பாலசுப்பிரமணியன் அமெரிக்காவிலிருந்து வந்து சேர்ந்தான்.
இரண்டு, மூன்று நாள்கள் யாரும் யாருடனும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை!
நான்காவது நாள் இரவு நேரத்தில் காயத்ரிதான் வலியச் சென்று பாலுவிடம் பேசினாள்.
"பாலு உங்களிடம் கொஞ்ச நேரம் பேச வேண்டும்''.
"உன்னிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை! எல்லாவற்றையும் அப்பாவிடம் சொல்லிவிட்டேன். அப்பா உன்னிடம் சொன்னாரா? இல்லையா?''
"அப்பா வாயைத் திறந்து என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், உங்கள் இ.மெயிலை நான் படித்துவிட்டேன்!''
"பிறகு என்ன? நான் அனுப்பிய பத்திரத்தில் கையெழுத்துப் போட வேண்டியதுதானே?''
"போடுகிறேன். ஆனால் அதற்கு முன்னால் ஒரு நிபந்தனை!''
"என்ன?''
"உங்களை விவாகரத்து செய்த பின்னால் நீங்கள் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளுங்கள். அதுகுறித்து எனக்கு கவலை இல்லை. ஆனால், நம் குழந்தையும் உங்கள் அப்பாவும் என்னோடுதான் இருக்க வேண்டும். உங்கள் அப்பாவை எக்காரணம் கொண்டும் முதியோர் இல்லத்தில் சேர்க்க நான் அனுமதிக்க மாட்டேன்! பத்திரத்தில் இந்த நிபந்தனையையும் சேர்த்து விடுங்கள். இதோ இப்போதே கையெழுத்துப் போட்டு விடுகிறேன். ஆனால், நான் இன்னொரு திருமணம் செய்துகொள்ள மாட்டேன். இது உறுதி! சம்மதமா?''
"என் அப்பாவைப் பற்றி உனக்கென்ன கவலை?''
"எப்போது உங்களைத் திருமணம் செய்து கொண்டேனோ, அப்போதே உங்கள் அப்பா என் அப்பா ஆகிவிட்டார், உங்கள் விருப்பப்படி உங்களைத்தான் என்னால் விவாகரத்து செய்ய முடியும். உங்கள் அப்பாவைப் போன்ற ஒரு மஹானை என்னால் இழக்க முடியாது! இந்த வயதான காலத்தில் அவருக்குத் துணையாக நான் இருந்துதான் ஆக வேண்டும். அதேசமயத்தில் அவரை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்க்க முடியாது! அதேநேரத்தில் இந்த முதிர்ந்த வயதில் அவர்களை நாம் வெளிநாட்டிற்கும் அழைத்துச் செல்ல முடியாது!
"அதான் அவரை ஓர் உயர்தர முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என்று சொன்னேனே!''
"பாதுகாப்பாக இருக்கட்டும் என எண்ணி உங்கள் இரு கண்களையும் ஏதாவது ஒரு பேங்க் சேப்டி லாக்கரில் வைத்துவிட்டு, உங்களால் வெளியில் செல்ல முடியுமா?''
"என்ன சொல்கிறாய் காயத்ரி?''
"ஆம். என் அம்மாவும் சரி, உங்கள் அப்பாவும் சரி, எனக்கு இரு கண்கள். அவர்களை வங்கி பேங்க் சேப்டி லாக்கரில் வைப்பதுபோல், ஒரு முதியோர் இல்லத்தில் வைத்துவிட்டு, நாம் வெளியூர் செல்வதை ஒருநாளும் நான் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் நம் வழிகாட்டிகள்! உயிர் உள்ள ஜீவன்கள்! அவர்கள் எப்போதும் நம் கூடவே இருந்து நம்மை வழிநடத்திச் செல்லக்கூடிய மஹான்கள்! அவர்களைப் போய் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு நாம் மட்டும் வெளிநாடு சென்று சுகமாக வாழலாம் என்கிறீர்களே, உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? இந்த அளவுக்கா உங்கள் மனதில் ஒரு சுயநலம் புகுந்து விளையாட வேண்டும்? இப்படியும் ஒரு வெளிநாட்டு மோகமும் பணத்தாசையும் நமக்குத் தேவைதானா?''
காயத்ரி மேலும் தொடர்ந்தாள்...
"எப்பேர்ப்பட்ட மஹான் உங்கள் தந்தை? அப்படிப்பட்டவருக்குப் போய் இப்படி ஒரு இ.மெயிலா? அவர் மனம் என்ன பாடுபட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதுநாள்வரை அந்த மஹான் அந்த இ.மெயிலை என்னிடம் காட்டக்கூட இல்லை! அது தெரியுமா உங்களுக்கு? நான்தான் அவர் மனம் படும்பாட்டைப் புரிந்துகொண்டு, அவர் இல்லாத நேரத்தில் அதைப் படித்துத் தெரிந்து கொண்டேன்! கடந்த மூன்று மாதகாலமாக அந்தப் பெரியவர் ஊன் உறக்கமின்றி தவியாய் தவித்துப் போய்விட்டார் பாலு!''
"போதும் காயத்ரி போதும், என்னை மன்னித்து விடு, நான் மகாபாவம் செய்துவிட்டேன்! அப்பாவிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விடுகிறேன். உடனடியாக அமெரிக்கா வேலையை ராஜிநாமா செய்துவிட்டு, சென்னையிலேயே செட்டில் ஆக முயற்சி செய்கிறேன். நான், நீ, குழந்தை, என் அப்பா, உன் அம்மா எல்லோரும் ஒரே இடத்தில் இருக்கலாம். என்னை மன்னித்து விடு காயத்ரி என்னை மன்னித்து விடு!''
கதவின் ஓரத்தில் நின்று கொண்டு இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார் வெங்கட்ரமண தீட்சிதர்.
"கடவுளே கடந்த மூன்று மாத காலமாக இந்தப் பிரச்னையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தேனே! என் மருமகள் காயத்ரி மூன்றே நிமிடத்தில் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டு விட்டாளே! தெய்வமே நான் உன்னிடம் அமுதத்தைத்தான் யாசித்தேன். ஆனால், நீ தேவாமிருதத்தையே கொடுத்துவிட்டாய்! உன் கருணையே கருணை!'' உருகித்தான் போய்விட்டார் தீட்சிதர்!
===============

தூக்கமின்மை நல்ல தீர்வு

தூக்கம் வராது புரண்டு புரண்டு படுத்து கொண்டு உள்ளவர்கள்...
குளிர்ந்த நீரில் கைகால் முகம் கழுவியபின் தூங்கப் போக நல்ல தூக்கம் வரும்.

ஜோதிடகாரணம்.

சந்திரன் சனி சேர்க்கை அல்லது பாம்புடன் சந்திரன் சேர்க்கை இருக்க மனம் சஞ்சலத்துடன் இருக்க தூக்கம் வராத நிலையாகும். 

தண்ணீர் சந்திர ஆதிக்கத்தினை அதிகரிப்பதுடன் அழுக்கை நீக்கி சுத்தப்படுத்துவதால் பாம்பு சனி பலவீனமாகிறது. இப்ப நல்ல சந்திர பலத்தினில் நல்ல தூக்கம் வரும்.

முயற்சி செய்யுங்கள். பலன் பெற்றால் அதனை கருத்திடுங்கள்.

மக்களின் அதிர்ஷ்ட சேவையில்...
அஸ்ட்ரோ v.கண்ணா
7667745633

தங்கம் வாங்க ஆர்வமா?


ரிசபம்... துலாம்...
இவைகள் லக்கினமாக
அல்லது இராசியாக வரும் நபர்கள்...


லக்கினம் இராசியுடன்...
குரு எந்த விதமான தொடர்பும்
இல்லாது போனால்
தங்கம் சேர்பதில் ஆர்வம்
உள்ளவராக இருப்பதை காணலாம்.

நீங்கள் ஜோதிடரா? இதை படிங்க

ஜோதிடர்களுக்கு உள்ள ஆகச்சிறந்த 
கெட்ட பெயர் அதிக கட்டணம் என்பதாலேயே...

முக்கியமாக எண்கணிதம்... வாஸ்த்து... நிபுணர்கள் இந்த கெட்ட பெயரினை சந்திப்பது சகஜமானது. அனேக பரிகாரங்கள் பலன் தராது போகும் போதே இந்த சிறப்புமுறை ஜோதிடராகளை அனுகுவார்கள்.

அவரின் வழிகாட்டுதலால்... அதன் பலனாக, இத்தனை நாள் தீராத சிக்கல் தீருவதோடு முன்னேற்றமும் அடைவர்.

அவருக்கான ஆலோசனை கட்டணம் தரும்போது தான் மக்களின் மனசு நோகிறது.
ஒரு சில எழுத்துக்களை தானே மாற்றினிர்....
ஒரு செங்கல்லை தானே எடுக்க கூறினிர்....
இதற்கு போயா ஆயிரக்கணக்கில் பணம்
குய்யோ முய்யோ என மனம் ஆட்டம் போடூம்.

இதற்கு தக்க பதில் தரும் வகையில் இந்த கதை அமைந்துள்ளது. இதையும் ஒருமுறை படிக்கலாம்.
அன்புடன்
எண்ணியல் ஆலோசகன்
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
7667745633
+++++++++++++++++++++++++
=========================
தொழிற்சாலை கட்டடம் ஒன்றில் 
பல கோடி மதிப்புள்ள ஒரு இயந்திரம் 
செயல்படவில்லை.

அதை சரி செய்ய 
பல வல்லுனர்களை அழைத்தார்கள்.. 
ஆனால் யாராலும் அந்த இயந்திரத்தை 
செயல்ப் பட வைக்க முடியவில்லை.
கடைசியாக வயதான ஒருவரை அழைத்தனர். 
அவர் சிறு வயதிலிருந்தே இயந்திரங்களை
 கையாழ்வதில் தேர்ச்சிப் பெற்றவர். 
மிகவும் அனுபவசாலி.
அவர் வரும்போதே 
ஒரு பெரிய மூட்டை நிறைய 
கருவிகளை கொண்டு வந்தார். 
வந்தடைந்த அடுத்த கணமே 
வேலையை ஆரம்பித்தார். 

அந்த இயந்திரத்தை 
கவனமாக பரிசோதித்தார்.
அந்த நிறுவனத்தின் 
இரண்டு உரிமையாளர்களுமே 
இவரை ஆர்வமாக 
கவனித்துக் கொண்டிருந்தனர். 
இதை எப்படியாவது 
சரி செய்து விடுவார் 
என்று நம்பிக்கையோடு இருந்தனர்.
அந்த முதியவர் 
ஆழ்ந்த பரிசோதனைக்கு 
பிறகு, அவர் வைத்திருந்த 
மூட்டையிலிருந்து 
ஒரு சின்ன சுத்தியை எடுத்தார். 
இயந்திரத்தை லேசாக தட்டினார். 

சடாரென்று 
இயந்திரம் உயிர் பெற்றது. 
இந்த சம்பவத்தை கண்ட 
அனைவரும் ஆனந்தத்தில் 
கத்தி ஆரவாரமாக கொண்டாடினர். 
அந்த வயதானவர் சத்தமில்லாமல் 
அந்த சுத்தியை மூட்டைக்குள் 
மற்ற கருவிகளுடன் 
வைத்துவிட்டு அங்கிருந்து 
வெளியேறினார். 

ஒரு வாரம் கழித்து 
அந்த உரிமையாளர்களுக்கு, 
பெரியவரிடமிருந்து 
1 லட்சம் ரூபாய்க்கான பில் வந்தது. 
அதை கண்டு வியந்து விட்டனர். 
'அந்த கிழவன் ஒன்றுமே செய்ய வில்லையே..! 

ஏன் விலை இவ்வளவு 
உயர்வாக போட்டிருக்கிறார்..' 
என்று அந்த பெரியவருக்கு 
விளக்கம் கேட்டு 
'நீங்கள் என்ன செய்தீர்கள் 
என்று 1 லட்சம் போட்டிருக்கிறீர்கள்.. 
மசோதாவை விரிவு படுத்தி அனுப்பவும்..' 
என்று ஒரு மடல் அனுப்பினர். 

பெரியவர் அவர்கள் கேட்டது போல் 
மசோதாவை விரிவு படுத்தி அனுப்பினார் :
'சுத்தியை வைத்து 
தட்டினதற்கு : Rs 2/-...

எந்த இடத்தில் தட்ட வேண்டும் 
என்று தெரிந்ததற்கு : Rs 99,998 /-..'

கதை நீதி : 
முயற்சிகள் முக்கியம் தான். ஆனால் முயற்ச்சிகளை எங்கு செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது அதை விட முக்கியம்!!

பிரம ஹத்தி தோசம்

பிரம ஹத்தி தோசம் பற்றி அறிந்து இருப்போம். இது சனி குருவின் சம்பந்தம் இருப்பதால் உண்டாகிறது. இதன் பலன் குருவினால் உண்டாகும் நன்மைகள் சனியின் மந்ததன்மையால் மாறி தடையுண்டாகுதலாகும்.

இது போலவே எந்த கிரகம் சனியுடன் தொடர்பு கொண்டாலும் அந்த கிரகம் தன் வேகத்தினை குறைத்துக் கொள்ள நேருகிறது. அதனால் மனக்குழப்பம் உண்டாகி தயக்க குணமுண்டாகும்.


இந்த 
தோசம் நீங்க 
உடனடி பரிகாரம், 
சனியின் 
மந்த தன்மையை 
உணர்ந்து 
நமது 
தயக்கத்தினை 
வெல்ல 
வேண்டும்.

மேலும் சில பரிகாரங்களுக்கு அருகில் உள்ள ஜோதிடரை இன்றே அனுகவும்.


மக்களின் அதிர்ஷ்ட சேவையில்
7667745633

சூரியன் சுக்கிரன் இணைவு

சுக்கிரன் சூரியன் இணைவு

இந்த இணைவு வேறு கிரக தொடர்பு இல்லாது இருப்பின்... (பார்வை திரிகோணம் சப்தமம்) இரண்டும் இணையும் போது ஏதாவது ஒன்று பலம் குறையும். இந்த சூரியன் சுக்கிரன் சேர்க்கையில் கூட ஏதாவது கிரகம் இருந்தால் தீயபலன் குறையும்

மனைவி வேலைக்கு போகும் அமைப்பு

நான்கு ஏழாமதிபதிகள் 
தொடர்பு கொண்டு 

11, 12 ன் தொடர்பும் உண்டாக வேலைக்கு போகும் பெண் மனைவியாவாள்.

முன்னுக்கு பின் முரணாக அனைத்தும் நடக்குதா?

காற்று வாங்க போனேன்
கவிதை வாங்கி வந்தேன்
பொன் மான தேடி நானும் பூவோட போனேன்
நான் போன நேரம் அங்கு பொன்மானும் இல்ல...
எனும் நபரா தாங்கள்... முன்னுக்கு பின் முரணாக அனைத்தும் நடக்குதா?

3 12 21 30 தேதியில் பிறந்து, தேதி மாதம் வருடம் கூட்ட 6 வரும் நேயராகவோ

அல்லது

6 15 24 தேதியில் பிறந்து, தேதி மாதம் வருடம் கூட்ட 3 வரும் நேயராகவோ இருப்பிர்கள்.

மக்களின் அதிர்ஷ்ட சேவகன்

தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்வோம்?

TAMILNADU=29
எப்ப பார்த்தாலும் சண்டை சச்சரவுகள் தான். அடுத்தவனுடன் கையேந்தும் நிலையும் எதிர்புகள்...

THAMILAGAM =27
முன் பெயருக்கு 100% மாறுதல் பெறும்.
அடக்கியாழும்.
நாம் அனைவரும் தமிழகத்தினை தமிழகம் என்றே அழைப்போம்.
எண்ணியல் ஆற்றலுடன் பயணத்தில் இணைவோம்.

மக்களின் அதிர்ஷ்ட ஆலோசனையில்
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
76667745633

யுகாதி ஏன் இரண்டு நாள்களில் ஏன் குறிக்கப்படுகிறது.

யுகாதி ஏன் இரண்டு நாள்களில் ஏன் குறிக்கப்படுகிறது.

ஒரு ஜோதிட பார்வை

யுகாதி எனப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு இதை எப்படி நிர்ணயம் செய்கிறார்கள்? பங்குனி மாதம் சுக்லபட்ஷ பிரதமை திதி என்று வருகிறதோ அன்று தான் யுகாதியாகும். 
(2017ன் படி)
வாக்கிய பஞ்சாங்கங்களில் எல்லாம் இன்று தான் யுகாதி என்று கொடுத்து உள்ளார்கள். திருக்கணிதப்படி நேற்று காலையே பிரதமை திதி உள்ளது. அதனால் திருகணிதபடி நேற்றே யுகாதி பண்டிகை. வாக்கிய பஞ்சாங்கங்களில் இன்று 2.17 நாளிகை வரை பிரதமை திதி உள்ளது. அதனால் அவர்கள் நாளை யுகாதி என்று போட்டு உள்ளார்கள். யுகாதி எந்த நாளில் வருகிறதோ, அந்த நாளுக்கு உரிய கிரகமே அடுத்த ஆண்டின் ராஜா ஆவார். அடுத்த ஹேவிளம்பி ஆண்டின் ராஜா நேற்றைய நாளுடைய கிரகமான செவ்வாய்தான். வாக்கியபடி இது புதனாக உள்ளது. அடுத்த ஆண்டு வாக்கிய ராஜாவும்... திருகணித ராஜாவும் வேறு வேறாக இருப்பது நாட்டின் குழப்பமான நிலையை முன்கூட்டியே கோடிட்டு காட்டுகிறது. 

 மக்களின் அதிர்ஷ்ட ஆலோசகன் ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன் 7667745633

வாழ்க்கை பயணம் எளிமையா வலிமையா

லக்னாதிபர் கோணம் ஏறிட காற்றின் திசையில் பயணம்... எளிமையாக இருக்கும். லக்னாதிபர் கேந்திரம் ஏறியிறுப்பின் துடுப்பின் ஆற்றலுடன் பயணம். வலிமையாக இருக்க வேண்டும்.

மனித அறிவில் தோன்றும் குறைபாடுகள்

கேள்வி: சுவாமிஜி, மனித அறிவில் தோன்றும் குறைபாடுகள் யாது? பதில்: மனிதன் நான்கு விதக் குறைபாடுகளால் துன்பமடைகிறான்; அமைதியிழந்து அல்லலுறுகிறான். அவையாவன; 1. கடவுளைத் தேடிக்கொண்டேயிருந்தும் காணமுடியாத குறை 2. வறுமை என்னும் பற்றாக்குறை. 3. விளைவறியாமலோ, விளைவையறிந்தும் அலட்சியம் செய்தோ, அவமதித்தோ, செயலாற்றி அதன் பயனாகத் துன்பம் அனுபவிக்கும் குறை. 4. மனிதனின் சிறப்பு அறியாமல் பிறர் மீது அச்சமும், பகையும் கொண்டு துன்புறுத்தியும், துன்புற்றும் அல்லலுறும் குறை. இந்த நான்கு குறைபாடுகள் ஒன்றோடொன்று இணைந்து விட்டன. வாழ்க்கையில் பலவிதமான சிக்கல்களாகி அவற்றை எளிதில் தீர்த்து விடுதலை பெறமுடியாமல்..... வழிகாணாமல்...... மனிதன் தவிக்கிறான். வாழ்வின் நலமிழந்து தான் வருந்தியும், பிறரை வருத்தியும் வாழ்கிறான்.

அதிகாரம் மிக்க தனித்தியங்கும் பெண்கள்

ஒன்று பத்து தொடர்பு பெற்ற பெண் ஜாதகர்கள் பெரும்பாலும் தனித்து இயங்கும்படி ஆகிறது. அதிகாரம் மிக்க பதவிகளை பெறுவார். அல்லது வீட்டில் அதிகாரம் மிக்கவர்களாக இருப்பார். லக்கினம் ஒன்பதை விட பலம் பெற்று இருப்பின், திருமணத்திற்கு முன்பு தனித்தியக்கம். லக்கினம் ஏழை விட பலம் பெற்று இருப்பின் திருமணம் முடிந்த பின் தனித்து இயக்கம். பொதுவாக எலாம் அதிபதியினை விட மிகபலமான லக்கினம் அமைந்த பெண்களின் கணவன் வீட்டினை கவனிக்கும் பொறுப்பினை ஏற்ப்பது நல்லது.

ராசியா லக்கினமா?

லக்கினம் என்பதற்க்கும்... ராசி என்பதற்க்கும்... நிறைய வித்தியாசம் உள்ளது. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல், ஜோதிடர்களிடமிருந்து அதிகபட்ச பலன்களை கேட்டு பெறுங்கள். ஜாதகம் பார்க்க சென்றுவிட்டு ராசிபலன்களை கேட்காதீர்கள். ஜாதகபலன்களை கூட்ட அல்லது குறைக்க தான் ராசிபலன்களை பற்றி யோசிக்கனும். ராசிபலன்களை போல எந்த ஜோதிடரும் பலன் கூறவில்லை என குறைபட்டு கொள்வது நல்லதல்ல... அன்புடன் மக்களின் அதிர்ஷ்ட ஆலோசகன் எண் ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன் கொடுமுடி 7667745633

நீங்கள் நடப்பதினை கவனித்து உள்ளீரா?

லக்கினம் ஆண்ராசியானால், அதாவது மேசம் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் இவைகளாக லக்கினம் இருந்தால், நடக்கும் போது இயல்பிலேயே வலது காலினை எடுத்து வைத்து நடப்பார்கள். அது போலவே இவர்கள் நிற்க்கும் போதும் வலது காலினை முன்பக்கமாக வைத்து நிற்பதனை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் ஏதாவது ஒரு இடத்தினை தாண்டும்போது அல்லது ஏறும்போது இறங்கும்போது மட்டும் இடது காலினை முதலில் பயன்படுத்துவார்கள். இவைகள் அல்லாத லக்கினக்காரர்களுக்கு இடது கால் பழக்கம் உள்ளவர்களாக பலன் அறியவும். எண் ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன் கொடுமுடி 7667745633

யார் பல தொழில் செய்வார்கள்

நான்காமதிபதி பத்தாமதிபனுடன் தொடர்பு கொள்பவர்களால்... ஒரு தொழில் செய்ய முடியாது. பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான சிந்தனை கொண்டு பல்வேறு தொழில்களை எடுத்துக் கொண்டு செய்வது இவர்களின் பொழுது போக்கு.... இவர்களுக்கு பத்தாமதிபனின் தொடர்பின்றி நான்கில் பதினோராமிடத்தோன் இருக்க... இவருக்கு லாபமின்றி அனைத்தினையும் கூட்டாளிகளே அடைந்து விட வாய்ப்பு உண்டாகும். அன்புடன் மக்களின் அதிர்ஷ்ட சேவகன் எண் ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன் கொடுமுடி 7667745633

கரூர் அருகே போகர் ஆஸ்ரமம்

கரூர் அருகே போகர் ஆஸ்ரமம் போகர் திருவடிகளே சரணம் கரூர் டூ நெரூர் சாலையில் பஞ்சமாதேவி தாண்டியவுடன் ( சுமார் 500 மீட்டர் ) இடது பக்கம் செல்லும் பிரிவு சாலையில் செல்க...(சுமார் 100மீட்டர்). பின்னர் வரும் வலதுபக்க சாலையில் 50மீட்டர் பயணிக்க இடது பக்கமாக இந்த ஆஸ்ரமம் வரும். கூகில் மேப் மூலமாக இந்த இடத்தினை அறியுங்கள்.... https://goo.gl/maps/ciLfsgVEZao

நீங்கள் ஆராய்ச்சியாளரா கண்டுபிடிப்பாளரா?

லக்கினாதிபர் ஐந்தில் ஒன்பதில் இருந்தால் உண்டாகும் விளைவுகளை பற்றி மட்டும் காண்போம். லக்கினாதிபதி ஐந்தில் இருந்தால் அல்லது ஐந்தாமதிபதியுடன் தொடர்பில் இருந்தால்... ஜாதகரின் தேடல்கள் அனைத்தும் புதிய புதிய விசயங்களை நோக்கியதாகவே இருக்கும். இவர்களை கண்டுபிடிப்பாளர்கள் எனக் கூறலாம். லக்கினாதிபர் ஓன்பதில் அல்லது ஒன்பதாமதிபதியுடன் தொடர்பில் இருந்தால்... பாரம்பரிய விசயங்களை ஆராய்வதிலும் அதில் கூறப்பட்ட விசயங்களினை நிறூபிப்பதிலும் ஆர்வமுடையவராக இருப்பார். அன்புடன் மக்களின் அதிர்ஷ்ட சேவகன் எண் ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன் கொடுமுடி 7667745633

மதமாற்றம் ஒரு பார்வை

இன்று இன்னும் ஒரு நரிக்கதை ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது. நரிக்கு ஏக குஷி… “நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப் படியாகும்!’ என்று ஊளையிட்டது. கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப் படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு யானை, யானை என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது. தேடிக் கொண்டே இருந்தது; பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை. மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின் நிழல் சிறுத்து அதன் காலடியில் விழுந்திருந்தது.”ஆஹா… பசியால் நாம் எவ்வளவு இளைத்துப் போய்விட்டோம்…’ சிறுத்து விட்டோம் என்று வருந்தியது நரி. இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக் குட்டியோ, கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. ம்ஹூம், பயனில்லை. மாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல் நரிக்குப் பின்பாக விழுந்தது… அதனால், நரிக்குத் தன் நிழலே தெரிய வில்லை…”ஆஹா.. நாம் வெகுவாக இளைத்து விட்டோம். நாம் இல்லவே இல்லை போலிருக்கிறது… ஒரு வேளை இறந்து போய் விட்டோமோ?’ என்று பயந்தது. பிறகு, “சீச்சி… நாம் உயிரோடு தான் இருக்கிறோம். இந்தப் பசிக்கு ஒரு கோழிக்குஞ்சு, ஏன், ஓர் எறும்பு கிடைத்தால் கூட போதும்..”‘ என்று நாக்கைத் தொங்க விட்டபடி தள்ளாடி, தள்ளாடி நடந்தது. இந்த நரியின் கற்பனை மாதிரி தான்… பலர் வாழ்க்கை இந்தக் கருத்தை விளங்கிக் கொண்டால் வாழ்க்கையில் எல்லா நாளும் இனிய நாளே.

சொர்க்க வாசல்

முதல் திரிகோணம் என்பது மேச ராசி முதல் ஆரம்பம் ஆகிறது. இது முன் ஜென்மம் எனவும், இரண்டாம் திரிகோணம் ஆகிய சிம்மம் முதல் விருட்சிக ராசி வரை இந்த இந்த ஜென்மம் எனவும், மூன்றாம் திரிகோணம் ஞானம் உபதேசம் தரக்கூடிய தனுசு முதல் மீனம் வரை அடுத்த ஜென்மா எனவும் கருதப்படுகிறது. அடுத்த ஜென்மம் நமக்கு வேண்டாம். இறைவனுடன் சேர்ந்துவிட வேண்டும் என, நம்மை அடுத்த கட்டத்திற்கு கூட்டிச் செல்லும் வழியே சொர்க்க வாசல் ஆகும். கால புருஷனின் ஒன்பதாம் இடமான தனுசு ராசியில் ஞானம் அடையும் பொருட்டு ஆன்மகாரகன் சூரியன் பிரவேசிக்கும் காலத்தில்... நமது அறிவாகிய சந்திரபகவான் ரிஷபம்ராசியில் உச்சம் பெறும் போது... பேரின்ப வாசல் திறக்கும். இறைவனை அடையக் கூடிய வழி இப்போது பிரகாசமாக இருக்கும் என்பதனை காட்டிக் கொடுக்கும் திருவிழாவே சொர்க்க வாசல் திறப்பு ஆகும். அனைவரும் தனது ஆன்மாவின் சொர்க்கவாசல் திறந்து எம்பெருமானின் திருவடி அடைய வேண்டிக்கொள்கிறேன். அன்புடன் எண் ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன் கொடுமுடி 7667745633